இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த புனித செபஸ்டியன் கல்லூரி

106

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழான பாடசாலை (டிவிஷன் – I) அணிகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (24) இரண்டு போட்டிகள் முடிவடைந்தன.

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ எதிர் பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

நேற்று (23) மக்கோன சர்ரேய் மைதானத்தில் ஆரம்பித்திருந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய செபஸ்டியன் கல்லூரி வீரர்கள் இமலாய ஓட்டங்களினை (301) அவர்களுடைய முதல் இன்னிங்ஸில் குவித்து தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டனர்.

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சில் ஆடிய கம்பஹா வீரர்களுக்கு 182 ஓட்டங்களினையே சேர்க்க முடிந்தது. இந்த ஓட்டங்கள் போதாது என்பதால் பலோவ் ஒன் முறையில் இரண்டாம் இன்னிங்சில் மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட  கம்பஹா வீரர்களுக்கு இம்முறை 101 ஓட்டங்களினையே பெற முடிந்தது. இதன் காரணமாக துரதிஷ்டவசமாக கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 18 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.

மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ்

கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவர்கள் எப்போதும் …

இப்போட்டியில் பண்டாரநாயக்க கல்லூரியின் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்த செபஸ்டியன் கல்லூரி வீரர் தருஷ பெர்னாந்து 95 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்டு தனது தரப்பின் வெற்றிக்கு வித்திட்டார்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 301/9d (69.2) தருஷ பெர்னாந்து 95, நிஷித்த அபிலாஷ் 55, செல்வி பெர்னாந்து 51, ஜனிது ஜயவர்த்தன 5/78

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 182 (61.4) அரோஷ மதுசன் 48, மதவ்வ தத்சார 32, தினுஜ ரணசிங்க 5/72

பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 101 (31.5) அரோஷ மதுசன் 39, தருஷ பெர்னாந்து 5/31

முடிவுபுனித செபஸ்டியன் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 18 ஓட்டங்களால் வெற்றி


றோயல் கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ

றோயல் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் நேற்று தொடங்கியிருந்த இந்த ஆட்டத்தில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி தம்முடைய முதல் இன்னிங்சில் 277 ஓட்டங்களை சேர்த்திருந்தது. பின்னர் றோயல் கல்லூரி தம்முடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்து 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தது.

மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ்

கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவர்கள் எப்போதும் ரசிகர்களை மைதானத்துக்கு…

தொடர்ந்து போட்டியின் இரண்டாம் நாளில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி வீரர்கள் இரண்டாம் இன்னிங்சினை 63 ஓட்டங்கள் முன்னிலையில் ஆரம்பித்து 180 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நேரத்தில் ஆட்டத்தினை நிறுத்தியிருந்தனர். இதில் அவிந்து பெர்னாந்து அரைச்சதம் (54) ஒன்றினை கடந்திருந்தார்.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் காரணமாக 244 ஓட்டங்கள் றோயல் கல்லூரிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனை அடைய இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த றோயல் வீரர்கள் 61 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 277 (76.2) சந்துன் பெர்னாந்து 99, சுவாத் மெண்டிஸ் 48, அவிந்து பெர்னாந்து 43, காமில் மிஷார  4/61

றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 213 (54.3) பசிந்து சூரியபண்டார 87, தெவிந்து சேனாரத்ன 75, சவிந்து பீரிஸ் 6/69

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 180/6d (42) அவிந்து பெர்னாந்து 54, சுஹத் மெண்டிஸ் 37*

றோயல் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 60/1 (22)

முடிவுபோட்டி சமநிலை அடைந்தது  


புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி

புனித தோமியர் கல்லூரி அணியின்  சொந்த மைதானத்தில் இன்று ஆரம்பித்திருந்த குழு D இற்கான இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஜோசப் கல்லூரி அணியினர் 74.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 220 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டனர்.

துனித் வெல்லால்கே ஜோசப் கல்லூரி சார்பாக அதிகபட்சமாக 59 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேவேளை,  சனோன் பெர்னாந்து மற்றும் மொஹமட் அசாம் ஆகியோர் பந்துவீச்சில் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ்

கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவர்கள் எப்போதும்…

இதனை தொடர்ந்து போட்டியில் தம்முடைய முதல் இன்னிங்சினை ஆரம்பித்த தோமியர் கல்லூரி அணியினர் 37 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 220 (74.4) துனித் வெல்லால்கே 59, ஜொஹான்னே டி சில்வா 47, லக்ஷான் கமகே 47, சனோன் பெர்னாந்து 3/20, மொஹமட் அசாம் 3/62

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 37/1 (19)  

போட்டியின்  இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்