தனஞ்சயவின் சதம் வீண்; புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி

69

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடாத்தப்படும் 19 வயதுக்கு உட்பட்ட பாடாசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்றைய நாள் (10) நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ளது.

ஸாஹிரா கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி

கண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் நாளில் 147 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்சை ஸாஹிரா கல்லூரி நிறைவு செய்திருந்தது. பதிலுக்கு துடுப்பாடிய தர்மராஜ கல்லூரி தமது முதல் இன்னிங்சில் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை பறிகொடுத்த நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டநேரம் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த தர்மராஜ கல்லூரி துலாஜ் பண்டார மற்றும் சமில் முகாந்திரம் ஆகியோரின் பெறுமதியான ஓட்டங்களின் துணையோடு 68.5 ஓவர்கள் நிறைவில் 198 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஸாஹிரா கல்லூரி சார்பாக மொஹமட் றிபாத், யாசித் நிர்மல் மற்றும் மொஹமட் ஹஷ்மி ஆகிய வீரர்கள் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

>>ஹேரத் விரும்பும் காலம் வரை தனது பாணியில் விளையாட வேண்டும் – ரிச்சர்ட் ஹார்ட்லி<<

தொடர்ந்து போட்டியின் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் நிறைவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 147 (53.5) – யசித் நிர்மல 33, ரித்மிக்க நிமேஷ் 28, உபேந்திர வர்ணகுலசூரிய 4/61, சேதிய ஏக்கநாயக்க 2/18

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 198 (68.5) – துலாஜ் பண்டார 42, ஷமில் முஹாந்திரம் 33, பவந்த உடங்கமுவ 25, மொஹமட் றிபாத் 2/06, யசித் நிர்மல 2/18, மொஹமட் ஹஷ்மி 2/29

ஸாஹிரா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 72/5 (30) – ரித்மிக்க நிமேஷ் 24*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலை அடைந்தது.

புனித ஜோசப் கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

கதிரான மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட இரண்டு பாடசாலைகளும் தமது முதல் இன்னிங்சை நிறைவு செய்திருந்தன.போட்டியின் இரண்டாம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த புனித ஜோசப் கல்லூரி சசிந்த மஹிந்தசிங்க மற்றும் அணித்தலைவர் ஜெஹான் டேனியல் ஆகியோரின் பெறுமதி வாய்ந்த ஓட்டங்களோடு 168 ஓட்டங்களை 51.5 ஓவர்களில் பெற்றுக் கொண்டது. இதில் ரவிந்து பெர்னாந்து மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்காக 4 விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார்.

புனித ஜோசப் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 211 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர்களின் திறமையான ஆட்டத்தினால் போட்டி  விறுவிறுப்பாக சென்றிருந்த போதிலும் ஆட்ட நேர முடிவின் போது 39.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி பெற்றிருந்த காரணத்தினால் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 172 (66.2) – சசிந்த மஹிந்தசிங்க 46, ஜெஹான் டேனியல் 27, தினேத் ஜயசிங்க 22, ரெவான் கெல்லி 21, ரவிந்து பெர்னாந்து 5/58, பசிந்து உஸ்ஹெத்தி 4/58

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 130 (25) –  கெவின் பெரேரா 41, லக்ஷான் கமகே 5/41, சலிந்த செனவிரத்ன 3/20

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 168 (51.5) – சசிந்த மஹிந்தசிங்க 40, யெசித் ரூபசிங்ஹ 38, ஜெஹான் டேனியல் 37, லக்ஷான் கமகே 32, ரவிந்து பெர்னாந்து 4/51, லசித் குரூஸ்புள்ளே 2/56

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 177/8 (39.4) – ரவிந்து பெர்னாந்து 40, அஷேன் பெர்னாந்து 33, அபிஷா கேஷான் 27, அஷேன் டேனியல் 4/54, ஜெஹான் டேனியல் 2/41

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலை அடைந்தது.

 

புனித பேதுரு கல்லூரி எதிர் ஜோசப் வாஸ் கல்லூரி

கட்டுனேரிய மைதானத்தில் இன்று நிறைவடைந்த போட்டியின் முதல் நாளில் முழுமையாக துடுப்பாடியிருந்த புனித பேதுரு கல்லூரி வீரர்கள் சந்துஷ் குணத்திலக்க மற்றும் நிப்புன் பொன்சேகா ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு இரண்டாம் நாளில் 283 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த போது தமது முதல் இன்னிங்சை நிறுத்திக் கொண்டது. இதில் தினெத் பெர்னாந்து 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை  பதம்பார்த்திருந்தார்.

>தில்ருவான் பெரேராவின் அதிரடி சுழலினால் டெஸ்ட் தொடர் இலங்கை வசம்<

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த ஜோசப் வாஸ் கல்லூரியினர் அணித்தலைவர் நிப்புன் தனஞ்சயவின் சதத்தோடு 88.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 220 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டனர். இதில் தாரிக் சபுர் புனித பேதுரு கல்லூரிக்காக 3 விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார்.

தொடர்ந்து தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்திருந்த புனித பேதுரு கல்லூரி ஒரு விக்கெட்டினை இழந்து 24 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேரம் நிறைவடைய போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 283/9d (97) – சந்துஷ் குணத்திலக்க 50, நிப்புன்க பொன்சேக்கா 46, சலித் பெர்னாந்து 38, ரன்மித் ஜயசேன 37, சச்சின் சில்வா 37, தினெத் பெர்னாந்து 4/58, தனஞ்சய பெரேரா 3/95

ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 220 (88.3) – நிப்புன் தனஞ்சய 103, சொஹான் அனுருத்த 28, அஞ்சான ருக்மல் 27, தாரிக் சபுர் 3/24

புனித பேதுரு கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 24/1 (8)

முடிவு –போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலை அடைந்தது. (புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

 

றோயல் கல்லூரி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி

கண்டி பொலிஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பித்த இந்தப் போட்டியில் றோயல் கல்லூரி அணி முதல் இன்னிங்சை (213) நிறைவு செய்த பின்னர் பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய கிங்ஸ்வூட் கல்லூரி 105 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற 109 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தமது முதலாம் இன்னிங்சைத் தொடங்கிய கிங்ஸ்வூட் கல்லூரி 189 ஓட்டங்களுக்கு சுருண்டு கொண்டது. இதற்கு உறுதுணையாக அமைந்த றோயல் கல்லூரி பந்து வீச்சாளர்களான மனுல பெரேரா மற்றும் வெனுஜா மெண்டிஸ் ஆகிய வீரர்கள் தலா 4 விக்கெட்டுகள் வீதம் சுருட்டியிருந்தனர்.

தொடர்ந்து தமது இரண்டாம் இன்னிங்சுக்காக துடிய றோயல் கல்லூரி 127 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த போது தமது ஆட்டத்தை இடைநிறுத்தி கிங்ஸ்வூட் கல்லூரிக்கு  வெற்றி இலக்காக 152 ஓட்டங்களை நிர்ணயித்தது.

இந்த இலக்கை அடைய இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த கிங்ஸ்வூட் கல்லூரி போட்டியின் ஆட்டநேர நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைக் குவித்திருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது இந்த இன்னிங்சிலும் சிறப்பாக செயற்பட்ட றோயல் கல்லூரியின் மனுல பெரேரா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 213 (64.1)  – கமில் மிஷார 59, தெவிந்து செனாரத்ன 46, கயான் திஸ்ஸாநாயக்க 38, செளம்யா பியசேன 5/63, தெவிந்து திஸ்ஸநாயக்க 2/21

கிங்ஸ்வூட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 189 (62.5) – ஹர்ஷன விக்கிரமசிங்க 44, துமிந்து தமிஷ்க 37, ஹசிக்க கமகே 28, கசுன் மாதவ 26, மனுல பெரேரா 4/49, வெனுஜ மெண்டிஸ் 4/53

றோயல் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 127/7d (65) – பஹான் விக்கிரமசிங்க 37, தெவிந்து சேனாரத்ன 34*, கவிந்து பத்திரன 29, செளம்யா பியசேன 2/17, ஹர்ஷன விக்கிரமசிங்க 2/21, தீகாயு பண்டார 2/42

கிங்ஸ்வூட் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 129/7 (31) – ஹசிக்க கமகே 31, அசல போகொடவத்த 28, மனுல பெரேரா 5/45

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலை அடைந்தது (றோயல் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)