பிபா உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது முறையாகவும் தகுதி பெற்ற சவூதி அரேபியா

690
Image courtesy - Getty Images

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு சவூதி அரேபிய தேசிய கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது. இதன்படி உலகக் கிண்ணத்திற்கு 5ஆவது முறையாகவும் தகுதி பெற்ற பெருமையை அவ்வணி கொண்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஜப்பான் அணியை   1- எனும் கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலமே சவூதி அரேபிய அணி இந்த தகுதியைப் பெற்றது. இதன்படி, ஆசியாவில் இருந்து சவூதியுடன் சேர்த்து ஜப்பான், ஈரான் மற்றும் கொரியா ஆகிய அணிகள் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிபா உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது அணியாக தகுதிபெற்ற மெக்சிகோ

வட, மத்திய மற்றும் கரீபியன் கால்பந்து சம்மேளன கிண்ணத்தில்…

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் B பிரிவில் விளையாடிய சவூதி அணி ஜப்பான் அணியினை வீழ்த்தியதன் மூலம், போட்டி நிறைவுகளில் பெறப்பட்டுள்ள புள்ளிகளின்படி 19 புள்ளிகளைப் பெற்று ஜப்பானுக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல்லா அரங்கில் கிட்டத்தட்ட 60,000 பார்வையாளர்கள் முன்னிலையில் ஜப்பான் அணியுடனான போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. பஹாத் அல் முவல்லாத் பெற்றுக்கொடுத்த கோலின் உதவியுடனேயே சவூதி இப்போட்டியில் வெற்றி பெற்றது.

புள்ளிகளின் அடிப்படையில் சவூதி மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் ஒரே புள்ளியை பெற்றிருந்தாலும், அணிகள் பெற்ற கோல்களின் அடிப்படையில் சவூதி அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.

சவூதி அரேபிய அணி முதன் முறையாக 1994ம் ஆண்டு பிபா உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. அதனைத் தொடர்ந்து 1998, 2002 மற்றும் 2006 ஆகிய 3 உலகக் கிண்ண போட்டிகளுக்கும் தொடர்ச்சியாக தகுதி பெற்றது. எனினும் இறுதியாக 21ம் ஆண்டு தென்னாபிரிக்காவிலும் 214ஆம் ஆண்டு பிரேசிலிலும் நடைபெற்ற உலகக் கிண்ண தொடர்களுக்கு சவூதி அரேபிய அணி தகுதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தகது.