டோனியின் சாதனையை 4 ஆண்டுகளில் முறியடித்த சர்ப்ராஸ் அஹமட்

808
Sky sports

ஒரு அணித்தலைவராகவும் ஒரு விக்கெட் காப்பாளராகவும் பாகிஸ்தான் அணி வீரர் சர்ப்ராஸ் அஹமட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பா கிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு தென்னாபிரிக்க அணியுடன் மூன்று டெஸ்ட், ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட முத்தரப்பு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகின்றது.

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை வைட் வொஷ் செய்த தென்னாபிரிக்கா

இச்சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் (14) நிறைவுக்கு வந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளையும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (11) ஆரம்பமாகியது.

துள்ளியமான வேகப்பந்துவீச்சு மூலம் பாகிஸ்தான் அணியினரை 273 ஓட்டங்களுக்குள் இரண்டாவது இன்னிங்ஸில் மடக்கி மூன்றாவது போட்டியிலும் 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க வீரர்கள் தொடரை 3-0 எனும் அடிப்படையில் வெள்ளையடிப்பு செய்து கைப்பற்றினர்.

இந்த போட்டியின் போது சர்ப்ராஸ் அஹமட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணித் தலைவராகவும் விக்கெட் காப்பாளராகவும் 10 பிடியெடுப்புக்களை நிகழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

மஹேந்திர சிங் டோனி 2 014 டிசம்பர் மாதம் மேல்பேர்னில் நடைபெற்ற ஆஸி. அணியுடனான போட்டியில் அணித்தலைவராகவும் விக்கெட் காப்பாளராகவும் இருந்து 8 பிடியெடுப்புக்களை நிகழ்த்தியதே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது. எனவே, குறித்த சாதனை 4 வருடங்களின் பின்னர் தகர்க்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சென்று விளையாடவுள்ள ஏபி.டி.வில்லியர்ஸ்

டோனி அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு போட்டி முன்னரே குறித்த சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு போட்டியில் அணித்தலைவரான விக்கெட் காப்பாளராக மேலும் இருவர் 8 பிடியெடுப்புக்களை நிகழ்த்தியிருந்தனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலெக் ஸ்டூவர்ட் 1998ஆம் ஆண்டு நட்டிங்ஹாமில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்காப்பு பிடியெடுப்புக்களை நிகழ்த்தியதே முதலாவது வீரரின் சாதனையாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு ஆஸி. வீரர் அடம் கில்கிறிஸ்ட், இலங்கை அணியுடன் டார்வினில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 8 பிடியெடுப்புக்களை நிகழ்த்தி இரண்டாவது 8 பிடியெடுப்புக்களை நிகழ்த்திய வீரராக உருவானார்.

தற்போது இவர்கள் மூவரையும் விட இரண்டு பிடியெடுப்புக்களை மேலதிகமாக நிகழ்த்தியே இவ்வாறு சர்ப்ராஸ் சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியினுடைய சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (19) போர்ட் எலிசபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க