உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவராக சர்ப்ராஸ் அஹமட்

270

இந்த ஆண்டில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில், பாகிஸ்தான் அணியின் தலைவராக சர்ப்ராஸ் அஹமட் செயற்படுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) உறுதி செய்துள்ளது.

இனவெறி கருத்து வெளியிட்ட சர்ப்ராஸ் அஹமட்டுக்கு நான்கு போட்டிகளில் தடை

இனவெறி கருத்து வெளியிட்டதற்காக பாகிஸ்தான்….

முதலாவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினை 2016ஆம் ஆண்டில் T-20 போட்டிகளில் தலைமை தாங்கிய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சர்ப்ராஸ் அஹமட், அதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டில் அவ்வணிக்கு மூன்று வகைப் போட்டிகளிலும் தலைவராக மாறினார். சர்ப்ராஸ் அஹமடினால் வழிநடாத்தப்பட்டிருந்த பாகிஸ்தான் அணி அதே ஆண்டில் .சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் வெற்றியாளர்களாக முதல்தடவை நாமம் சூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

ஆனால், சர்ப்ராஸ் கடந்த மாதம் டர்பன் நகரில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியொன்றில் தென்னாபிரிக்க வீரர் என்டைல் பெலுக்வேயோ மீது இனவாத கருத்து ஒன்றினை வெளியிட்ட காரணத்தினால் போட்டித்தடைக்கு உள்ளாகி தற்போது ஒய்வில் இருக்கின்றார்.  

சர்ப்ராஸின் போட்டித்தடை (நான்கு போட்டிகள்) நிறைவடையும் வரை பாகிஸ்தான் அணி அனுபவ வீரர் சொஹைப் மாலிக் மூலம் வழிநடாத்தப்பட்டு வருகின்றது. இந்த போட்டித்தடை நிறைவடைந்த பின்னர் உலகக் கிண்ணம், அதற்கு முன்னர் இடம்பெறும் போட்டிகள் அடங்கலாக பாகிஸ்தான் அணி பங்குபெறும் அனைத்துப் போட்டிகளிலும் தலைவராக சர்ப்ராஸ் அஹமடே செயற்படவிருக்கின்றார்.  

பாகிஸ்தான் அணியின் தலைவராக சர்ப்ராஸ் அஹமட் செயற்படுவதை உறுதி செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிறைவேற்று அதிகாரி எஹ்சான் மணி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நான் மகிழ்ச்சியுடன் அறியத்தர வருகின்ற விடயம், சர்ப்ராஸே பாகிஸ்தான் அணியின் தலைவராக எதிர்வரும் உலகக் கிண்ணம் வரை செயற்படுவார். சர்ப்ராஸே அணித்தலைவராக செயற்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இதேநேரம், அவருடன் அணியின் அண்மைய செயற்பாடுகளை சிறிய மீளாய்வு செய்வதற்காக கதைக்கவும் ஆவலாக உள்ளேன். நான் கதைக்கும் போது அவரது அணிக்கான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் அலசப்படும். கிரிக்கெட் வீரர்கள் ஒரு கட்டத்தில் சங்கட நிலைமை ஒன்றினை சந்திப்பது வழமை. அது போன்று சர்ப்ராஸும் கடந்த வாரங்களில் ஒரு சங்கடமான நிலைமையை சந்தித்திருந்தார். ”

பாகிஸ்தான் அணி அவர் தலைமையிலேயே 2017ஆம் ஆண்டு .சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்தில் வெற்றியாளராக நாமம் சூடியது. அவரின் தலைமையிலேயே T-20 தரவரிசையிலும் தற்போது முதலிடத்தில் காணப்படுகின்றது. பெறுமதியான சகலதுறை வீரர் ஒருவரை அணியின் அண்மைய டெஸ்ட் போட்டி முடிகளை பார்த்து எப்படி புறக்கணித்து விட முடியாதோ அதுபோன்று சர்ப்ராஸ் அஹமட் அணித்தலைவராக காட்டியிருக்கும் பதிவுகளை மறந்து அவரை ஒதுக்கிவிட முடியாது. ”  

புதிய மாற்றங்களுடனான அணித்தெரிவு பற்றி விளக்கும் அசந்த டி மெல்

அடுத்த வாரம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க சுற்றுப் …….

உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவராக செயற்படுவது தொடர்பில் பேசிய சர்ப்ராஸ், உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை தலைமைதாங்குவதன் மூலம், பாகிஸ்தானை உலகக் கிண்ணப் போட்டிகளில் தலைமை தாங்கிய ஏனைய வரலாற்று கதாநாயகர்களின் பெயர் பட்டியலில் எனது பெயரும் இடம்பெறப் போகின்றது. இதனை உயரிய கௌரவமாக கருதுகின்றேன். சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் உலகக் கிண்ணத்தில் ஆடுவது கனவாக இருக்கும். ஆனால். உலகக் கிண்ணத்தில் அணியினை தலைமை தாங்குவது என்பது இந்த வையகத்தில் கிடைக்கும் வரம்  ” எனக் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர் நாங்கள் உலகக் கிண்ணத்தில் நல்ல விதத்தில் செயற்படுவோம் என நம்புகின்றேன். எங்களிடம் திறமைமிக்க போட்டி வெற்றியாளர்கள் காணப்படுகின்றனர். உலகக் கிண்ணத்தில் நல்ல முறையில் செயற்படுவதற்கு எமது அணி நிர்வாகத்திடமிருந்தும் பூரண ஆதரவு கிடைக்கும். இறுதியாக இடம்பெற்ற .சி.சி. இன் பாரிய சர்வதேச தொடர் ஒன்றில் நாங்கள் வெற்றி பெற்றிருப்பதால் அதேமாதிரியான முடிவு ஒன்றினை இம்முறையும் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். ” என்றார்.

உலகக் கிண்ணம் ஆரம்பமாக முன்னர் பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் ஒரு நாள் போட்டிகளில் ஆடவிருப்பதோடு, உலகக் கிண்ணத்தில் தமது முதல் போட்டியில் வருகின்ற மே மாதம் 31ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணியினை எதிர்கொள்கின்றது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<