ஷேன் வோர்னின் அணிக்கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர்

82
©Getty image

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான நல நிதி கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன

இந்திய டி20 குழாமிலிருந்து வெளியேறும் ஷிகர் தவான்

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான ………

ரிக்கி பொண்டிங்கின் அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கோர்ட்னி வோல்ஷ் பயிற்சியாளராகவும், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி புஷ்பயர் கிரிக்கெட் பேஷ் என்ற பெயரில் இந்த கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. 

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படும்.

இந்தப் போட்டியின் மூலம் கிடைக்கும் டிக்கெட் கட்டணம் அனைத்தும் காட்டுத் தீயை அணைக்க உதவி வரும் ரெட் க்ரொஸ் அமைப்புக்கு வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன், ஜஸ்டிங் லேங்கர், ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ, ஷேன் வொட்ஸன், அலெக்ஸ் பிளாக்வெல், மைக்கல் கிளார்க் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்;.

இந்நிலையில் ரிக்கி பொண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வோர்ன் அணிக்கு கோர்ட்னி வோல்ஷும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என்ற தகவலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் கெவின் ரொபர்ட்ஸ் வெளியிட்டுள்ளார். 

இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கென் ரொபர்ட் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கர், கோர்ட்னி வோல்ஷ் இருவரின் பங்களிப்பையும் நாங்கள் மனமுவந்து வரவேற்கிறோம்

இருவரும் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவுஸ்திரேலிய மக்கள் இந்தப் போட்டியை நேரில் பார்க்க வந்து நிதியுதவி அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உருவாகியுள்ள காட்டுத் தீயால் இதுவரை 29 பேர் பலியாகியுள்ளார்கள். 2,000 மக்கள் வீடுகளை இழந்துள்ளார்கள். இந்தக் காட்டுத் தீயில், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகினசுமார் 60 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<