Home Tamil சம்மு அஷான், அஷேன் பண்டாரவின் அதிரடியுடன் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு முதல் வெற்றி

சம்மு அஷான், அஷேன் பண்டாரவின் அதிரடியுடன் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு முதல் வெற்றி

3167

தென்னாபிரிக்கா வளர்ந்து வரும் அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் சம்மு அஷான், அஷேன் பண்டார அரைச் சதம் கடந்து கைகொடுக்க, இலங்கை வளர்ந்து வரும் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

தென்னாபிரிக்கா வளர்ந்து வரும் அணிக்கு எதிராக 2 போட்டிகளைக் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வளர்ந்து வரும் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. 

இலங்கை வளர்ந்து வரும் அணி தென்னாபிரிக்கா பயணம்

இந்த நிலையில், தென்னாபிரிக்க வளர்ந்து வரும், தென்னாபிரிக்க விளையாட்டு  பல்கலைக்கழக அணி மற்றும் இலங்கை வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதலாவது லீக் போட்டி நேற்று பிரிட்டோரியாவில் உள்ள க்ரோவன்குளூப் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை வளர்ந்து வரும் அணியின் தலைவர் சந்துன் வீரக்கொடி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதன்படி, நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 185 ஓட்டங்களை குவித்தது.

தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் டோனி சி சோர்சி அரைச்சதம் ஒன்றுடன் 79 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, ஜேசன் ஸ்மித் 33 ஓட்டங்களுடன் பெறுமதி சேர்த்திருந்தார்.

இதேநேரம் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக அமில அபோன்சு மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்கான 186 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி சீரான ஆரம்பத்தினை காட்டிய போதிலும் ஒரு கட்டத்தில் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தினை சந்தித்தது.

இப்படியான ஒரு நிலையில் 6 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சம்மு அஷான் மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் வலுவான இணைப்பாட்டம் (132) ஒன்றினை வழங்கி இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அரைச் சதம் கடந்த சம்மு அஷான் 60 ஓட்டங்களுடன் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தாலும், இறுதி வரை நிதானமாக துடுப்பெடுத்தாடிய அஷேன் பண்டராவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி வெற்றி இலக்கை அடைந்தது. 

இறுதியில் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 38.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் 187 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தது.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இருந்து வெளியேறும் நுவன் பிரதீப்

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்காக அபாரமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய அஷேன் பண்டார 78 பந்துகளில் 12 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

மறுமுனையில் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக இலங்கை வீரர்களுக்கு அச்சுறுத்தல் தந்த 18 வயதுடைய வலதுகை வேகப் பந்துவீச்சாளரான தண்டோ நிட்னி 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். இவர் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான மக்காயா நிட்னியின் மகன் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இந்த நிலையில், ஒருநாள் முத்தரப்பு தொடரின் 2 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை வளர்ந்து வரும் அணி நாளை (01) தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக அணியை எதிர்த்தாடவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka Emerging Team
187/6 (38.2)

South Africa Emerging Team
185/10 (46)

Batsmen R B 4s 6s SR
Tony de Zorzi st Sandun Weerakkody b Kamindu Mendis 58 79 7 0 73.42
Matthew Breetzke b Amila Aponso 27 34 4 0 79.41
Raynard van Tonder c Ashen Bandara b Chamika Karunarathne 3 8 0 0 37.50
Jason Smith b Kamindu Mendis 33 52 1 0 63.46
Sinethemba Qeshile c & b Asitha Fernando 9 25 1 0 36.00
Wandile Makwetu c Sandun Weerakkody b Lahiru Madushanka 25 42 1 0 59.52
Sibonelo Makhanya c Minod Bhanuka b Amila Aponso 11 14 1 0 78.57
Kyle Simmonds c Sammu Ashan b Amila Aponso 2 6 0 0 33.33
Thando Ntini not out 4 9 0 0 44.44
Nandre Burger b Asitha Fernando 1 6 0 0 16.67
Tladi Bokako b Asitha Fernando 0 2 0 0 0.00


Extras 12 (b 0 , lb 5 , nb 1, w 6, pen 0)
Total 185/10 (46 Overs, RR: 4.02)
Fall of Wickets 1-71 (13.6) Matthew Breetzke, 2-78 (16.1) Raynard van Tonder, 3-101 (22.3) Tony de Zorzi, 4-115 (27.2) Sinethemba Qeshile, 5-161 (37.6) Jason Smith, 6-176 (41.1) Wandile Makwetu, 7-179 (42.3) Kyle Simmonds, 8-182 (44.2) Sibonelo Makhanya, 9-185 (45.4) Nandre Burger, 10-185 (45.6) Tladi Bokako,

Bowling O M R W Econ
Asitha Fernando 8 0 33 3 4.12
Lahiru Madushanka 10 0 47 1 4.70
Chamika Karunarathne 8 0 37 1 4.62
Amila Aponso 10 1 22 3 2.20
Kamindu Mendis 10 0 41 2 4.10


Batsmen R B 4s 6s SR
Sandun Weerakkody c Sinethemba Qeshile b Thando Ntini 20 15 4 0 133.33
Sangeeth Cooray c Sinethemba Qeshile b Thando Ntini 5 16 0 0 31.25
Minod Bhanuka b Thando Ntini 0 1 0 0 0.00
Charith Asalanka c Raynard van Tonder b Nandre Burger 7 12 1 0 58.33
Sammu Ashan c Wandile Makwetu b Thando Ntini 60 104 8 1 57.69
Kamindu Mendis lbw b Thando Ntini 4 4 1 0 100.00
Ashen Bandara not out 76 78 12 0 97.44
Lahiru Madushanka not out 2 4 0 0 50.00


Extras 13 (b 1 , lb 1 , nb 4, w 7, pen 0)
Total 187/6 (38.2 Overs, RR: 4.88)
Fall of Wickets 1-25 (3.4) Sandun Weerakkody, 2-25 (3.5) Minod Bhanuka, 3-35 (6.4) Charith Asalanka, 4-39 (7.3) Sangeeth Cooray, 5-43 (9.1) Kamindu Mendis, 6-175 (36.6) Sammu Ashan,

Bowling O M R W Econ
Nandre Burger 8 1 46 1 5.75
Thando Ntini 9 1 46 5 5.11
Tladi Bokako 7 1 20 0 2.86
Jason Smith 5.2 1 18 0 3.46
Kyle Simmonds 9 1 55 0 6.11



முடிவு – இலங்கை வளர்ந்து வரும் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க