இலங்கை மண்ணில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய பிரபலம் ரொவான் பெர்ரி

238
Rowan-Perry-Body-

இலங்கையில் பிறந்து, அவுஸ்திரேலிய 19 வயதிற்குட்பட்டோர் ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய ரொவான் பெர்ரி இலங்கையில் இடம்பெறும் கழக மட்ட ரக்பி போட்டிகளில் தடம் பதிப்பதற்கு இலங்கை வரவுள்ளார். இதன்படி தற்பொழுது நடைபெற்று வரும் டயலொக் ரக்பி லீக் தொடரில் அவர் CR & FC அணிக்காக விளையாடவுள்ளார்.

CR & FC அணியிலிருந்து கிடைத்த நம்பத்தகுந்த செய்திகளின் அடிப்படையில், ரொவான் பெர்ரி CR & FC அணியுடனான ஒப்பந்தத்திற்கு உடன்பட்டதாகவும், அதன்படி அவர் புதன்கிழமை இலங்கைக்கு வருகை தந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

ரொவான் பெர்ரி இலங்கை மண்ணில் பிறந்தவர். அவரது பெற்றோர் விடுமுறைக்கு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பொழுது ரொவான் பெர்ரி பிறந்ததால் அவர் இலங்கை பிரஜை ஆகும் உரிமையையும் கொண்டிருக்கிறார்.

பிளேன்கர் நிலையில் விளையாடும் ரொவான் பெர்ரி, கென்பெரா வைகிங்ஸ் அணி சார்பாக முதன் முதலில் அறிமுகமாகி, பின்னர் நியூசிலாந்தில் நடைபெற்ற கனிஷ்ட ரக்பி உலக கிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலிய 20 வயதிற்குட்பட்டோர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.  தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியமையால் 2015ஆம் ஆண்டு .சி.டி ப்ரம்பீஸ் அணி சார்பாக சூப்பர் ரக்பி பருவகாலத்தில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிட்டியது.

2016 ஆம் ஆண்டு கென்பெரா வைகிங்ஸ் அணியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு மாறிய இவர், அவ்வணியின் பல வெற்றிகளுக்கு காரணமாகினார். இதனால் அவுஸ்திரேலிய தேசிய அணியின் புகழ் பெற்ற பிளேன்கர் மைக்கல் ஹூப்பர் உடன் இவரை ஒப்பிட்டனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை சூப்பர் செவன்ஸ் போட்டிகளில், ‘வாக்கர் சி.எம்.எல் வைப்பர்ஸ்அணியின் சார்பாக விளையாடிய பொழுது ரொவான் பெர்ரி இலங்கைக்கு அறிமுகமானார்.  

ரொவான் பெர்ரியின் இலங்கை வகையானது முக்கியமானது. அவர் இலங்கை மண்ணில் பிறந்தமையால் அவருக்கு இலங்கை தேசிய ரக்பி அணி சார்பாக விளையாடும் உரிமையும் இருக்கிறது.  

அவர் CR & FC அணி சார்பாக இந்த பருவகால டயலொக் லீக்கில் விளையாடவுள்ளமையினால் ஒரு சில வாரங்களில் அவரை களத்தில் காணலாம்.

அவுஸ்திரேலிய NRC தொடரின்போது ரொவான் பெர்ரி


NRC 2016 பருவகால போட்டிகளின்போது ரொவான் பெர்ரி