இலங்கை அணியோடு சதம் பெற்ற ரொஸ் டெய்லரின் புதிய சாதனை

357
Ross Taylor
@AFP

நியூசிலாந்து அணி இலங்கை அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-0 எனக் கைப்பற்றி வைட்வொஷ் வெற்றியைப் பதிவு செய்ய நியூசிலாந்து அணிக்கு ரொஸ் டெய்லர் தனது துடுப்பாட்டம் மூலம் முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

நியூசிலாந்து எதிராக சாதனை படைத்த திசர பெரேரா தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள்..

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் அபார சதம் (137) ஒன்றினை விளாசிய ரொஸ் டெய்லர், குறித்த சதம் மூலம் ஒரு நாள் போட்டிகளில் தனது 20ஆவது சதத்தினை பூர்த்தி செய்திருந்ததோடு, நியூசிலாந்து அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் 20 சதங்கள் கடந்த முதல் வீரர் என்கிற சாதனையினையும் நிலைநாட்டியிருந்தார்.

மேலும், இந்த ஒரு நாள் தொடரின் முன்னைய இரண்டு போட்டிகளிலும் அரைச்சதங்களை (54, 90) விளாசிய அவர், தனது இறுதி ஆறு ஒரு நாள் போட்டிகளின் இன்னிங்ஸ்களிலும் 50 இற்கு கூடிய ஓட்டங்கள் பதிவு செய்த இரண்டாவது வீரராகவும் மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியுடனான இறுதி ஒரு நாள் போட்டியில் பெற்ற சதம் பற்றி பேசியிருந்த ரொஸ் டெய்லர், ” 20ஆவது (ஒரு நாள்) சதம் பெற்றது மகிழ்ச்சி தருகின்றது. எனினும், இதனை நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே பெற்றிருக்க வேண்டும். இப்போது எனக்கு வயதாகிக் கொண்டு செல்கின்றது. எனவே, என்னிடம் இன்னும் கொஞ்ச விடயங்களே எஞ்சி இருப்பதாக கருதுகின்றேன் என்றார்.

துடுப்பாட்ட உத்வேகத்துடன் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்குமா இலங்கை?

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு…

நியூசிலாந்து அணியின் அனுபவம் கொண்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரொஸ் டெய்லர் இப்படியாக துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக அசத்துவதன் மூலம் இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணிக்கு ஓட்டங்கள் சேர்ப்பதில் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இலங்கை அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் ஜொலித்த ரொஸ் டெய்லர் இந்த ஒரு நாள் தொடரில் 93.67 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 281 ஓட்டங்களை குவித்து தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார்.

இதேநேரம், கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்காக 11 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள டெய்லர், அவற்றில் 91.23 என்கிற சிறந்த சராசரியுடன் 639 ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<