இலங்கை கிரிக்கெட்டின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் விமானப்படைத் தளபதி நியமனம்

134
Image Courtesy - businesstoday.lk

முன்னாள் விமானப்படை தளபதி ஏயார் சீப் மார்ஷல் (Air chief marshal) ரொஷான் குணதிலக்க கடந்த 17 ஆம் திகதி தொடக்கம் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இலங்கைக்குள் நடைபெறும் எந்த மட்டத்திலான கிரிக்கெட் போட்டிகளின்போதும் வீரர்களுக்கு, அந்த போட்டிகளில் பங்குபெறும் அதிகாரிகளுக்கு, மைதானத்தின் பணி அதிகாரிகளுக்கு மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பு இதன்போது கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் பலவீனங்களை அறிந்து வைத்துள்ளோம் – ருமேஷ் ரத்னாயக்க

இலங்கை கிரிக்கெட் அணி, தம்முடைய ஆறாவது உலகக் கிண்ண மோதலுக்காக…

அதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் விமானப்படைத் தளபதி ஏயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க 1978 ஆம் ஆண்டு ஹெலிகொப்டர் ஓட்டுனராக இலங்கை விமானப்படை சேவையில் இணைந்தார். அதன் பின்னர் விமானப்படை கொமான்டோ அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற குணதிலக்க, 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 வரை 12 ஆவது விமானப்படைத் தளபதியாக பணியாற்றினார்.   

“அவரிடம் சிறந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்று இருப்பதாக எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் நடைபெறும் இலங்கை போட்டிகளுக்காக அவர் தற்போதிருந்தே சிறந்த பாதுகாப்பு திட்டம் ஒன்றை தயாரிப்பார்” என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மு சில்வா தெரிவித்தார்.  

மேலும் கருத்துத் தெரிவித்த ஷம்மு சில்வா,

“தற்போது எமது நாடு இருக்கும் நிலைமையில் பாதுகாப்பு என்பது முதல் இடத்தில் உள்ளது. உலகின் எந்த ஒரு அணியும் எமது நாட்டில் விளையாடுவதற்கு விரும்பும் வகையில் நாம் சிறந்த பாதுகாப்பு திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். அப்படி செய்வதற்கு முடியுமானால் எமது நாட்டில் எதிர்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியுமாக இருக்கும்” என்றார்.    

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<