மீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா

70

சுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய டி20 குழாம் நேற்று (12) தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்தினால் வெளியிடப்பட்டது. 

இந்திய கிரிக்கெட் அணியானது இம்மாத இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் பங்கேற்கவுள்ளது. 

அணித்தலைவர் பதவியிலிருந்து விலக தயாராக இருக்கும் லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க……….

இந்நிலையில் முதலில் நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான இந்திய குழாம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக இந்திய அணி இலங்கை அணியுடன் விளையாடிய குழாத்திலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளியிடப்பட்டுள்ள குழாத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் இந்திய அணியின் தலைவராக நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி பெயரிடப்பட்டுள்ளார். 

 இலங்கை தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த, இந்திய அணியின் ‘ஹோம் சீசன்’ என்று அழைக்கப்படும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹிட் சர்மா மீண்டும் இந்திய டி20 அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், டி20 அணியின் உப தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளார். ரோஹிட் சர்மாவின் வருகையுடன் சிகார் தவான், கே.எல் ராகுல் ஆகியோருடன் மூன்று ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.  

அத்துடன் குறித்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மொஹமட் ஷமி மீண்டும் இந்திய டி20 குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இந்திய ஏ அணியின் குழாமில் இணைப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடருக்காக அதிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியா தற்போது இன்னும் குணமடையாததன் காரணமாக குழாமில் இடம்பெற தவறியுள்ளார். 

பிக்பேஷ் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை நிகழ்த்திய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ்

அவுஸ்திரேலியாவில் தற்சமயம் நடைபெற்றுவரும் பிக்பேஷ் (big bash) தொடரில் ……….

குழாமில் இடம்பெற்றும் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் மிக நீண்ட காலப்பகுதியின் பின்னர் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற இலங்கை அணியுடனான போட்டியில் விளையாடிய சஞ்சு சம்சன் நியூசிலாந்து தொடருக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

மேலும் இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற போட்டியுடன் உபாதைக்குள்ளாகிய பந்துவீச்சாளர்களான புவ்னேஸ்வர் குமார் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் நியூசிலாந்து தொடருக்கான குழாமிலும் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். 

குழாமில் இடம்பெற்றுள்ள சுழற் பந்துவீச்சாளர்கள் வரிசையில் இலங்கை அணியுடன் விளையாடிய அதே வீரர்கள் நியூசிலாந்து தொடருக்கான குழாமிலும் இடம்பெற்றுள்ளனர். 

இதேவேளை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனி தொடர்ந்தும் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். எம்.எஸ் டோனி இறுதியாக 2019 பெப்ரவரியிலேயே டி20 சர்வதேச போட்டியொன்றில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் டொம் மூடி

இலங்கை கிரிக்கெட் அணியின் விசேட ஆலோசகராக அவுஸ்திரேலியாவின்………

16 பேர் கொண்ட இந்திய டி20 குழாம் 

விராட் கோஹ்லி (அணித் தலைவர்), ரோஹிட் சர்மா (உபதலைவர்), கே.எல் ராகுல், சிகார் தவான், ஷிரேயஸ் ஐயர், மணீஸ் பாண்டி, ரிஷப் பண்ட், சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், வொஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, நவ்தீப் ஷைனி, ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர் 

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 தொடர் அட்டவணை 

  • 24 ஜனவரி – முதலாவது டி20 சர்வதேச போட்டி – ஒக்லாந்து
  • 26 ஜனவரி – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – ஒக்லாந்து
  • 29 ஜனவரி – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – ஹமில்டன்
  • 31 ஜனவரி – நான்காவது டி20 சர்வதேச போட்டி – வெலிங்டன்
  • 2 பெப்ரவரி – ஐந்தாவது டி20 சர்வதேச போட்டி – மௌண்ட் மௌங்கனி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<