உலகக் கிண்ணத்தில் ஆர்ச்சர், வோர்னர், ஸ்டார்க் படைத்த சாதனை

141
Getty Images

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் லோர்ட்ஸில் நேற்று (25) நடைபெற்ற லீக் போட்டியில் 64 ஓட்டங்களினால் இங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.

இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணி, இதுவரை 4 லீக் போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றது. எனினும், பாகிஸ்தான், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளிடம் பெற்றுக்கொண்ட தோல்விகள் அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

அரையிறுதிக்கு சென்ற போதிலும் கவனமாக இருப்போம்: ஸ்டார்க்

இங்கிலாந்து அணியினை நேற்று (26) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற உலகக்….

அதுமாத்திரமின்றி, 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது இதுவே முதல்முறையாகும்

எனவே, அடுத்ததாக இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான லீக் போட்டியில் ஒருசில சாதனைகளும் முறியடிக்கப்பட்டன

பொத்தமுடன் கைகோர்த்த ஆர்ச்சர்

நேற்றைய போட்டியில் ஆரோன் பின்சின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒரு உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஜொப்ரா ஆர்ச்சர் பிடித்தார்.   

உலகக் கிண்ணத் தொடரில் அவர் இதுவரை 16 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னாள் வீரர் இயென் பொத்தமுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். பொத்தம் 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

உலகக் கிண்ண அரையிறுதிக்கு முதல் அணியாக தடம்பதித்த அவுஸ்திரேலியா

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of….

இந்தப் பட்டியலில் 14 விக்கெட்டுகளுடன் அன்ட்ரூ பிளின்டொப் (2007) இரண்டாவது இடத்திலும், 13 விக்கெட்டுகளை எடுத்த விக் மார்கஸ் (1983) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்

வோர்னர், பின்ச்சின் இணைப்பாட்டம் 

உலகக் கிண்ண வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு 5ஆவது முறையாக, தொடர்ச்சியாக 50 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களைக் குவித்த ஜோடி என்ற பெருமையை டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் ஜோடி பெற்றுக் கொண்டனர்.

இதற்கு முன்னதாக, தொடர்ச்சியாக 50 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களைக் குவித்த ஜோடிகள் பட்டியலில் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். வோர்னர்ஆரோன் பின்ச் ஜோடிக்கு அடுத்ததாக கிராண்ட் பிளவர்கிறிஸ் தவாரே ஜோடி 1983ஆம் ஆண்டில் 4 முறை இதே சாதனையை படைத்திருக்கிறது

அதன்பின்னர், டேவிட் பூன் – ஜெப் மார்ஷ் ஜோடி (1987-1992), அமிர் சொஹைல் – சைட் அன்வர் ஜோடி (1996), அடம் கில்கிறிஸ்ட் – மெத்யூ ஹெய்டன் ஜோடி (2003, 2007) ஆகிய வீரர்கள் 4 முறை இதே சாதனையை படைத்திருந்தனர்

யோக்கர் பந்துவீச்சில் மாலிங்கவின் சாதனை

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் வீரர்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் ….

அத்துடன், உலகக் கிண்ணத்தில் முதல் விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்களைக் குவித்த ஜோடி வரிசையில் வோர்னர், பின்ச் ஆகிய இருவரும் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டனர். முதல் இரு இடங்களில் இலங்கையின் திலகரத்ன டில்ஷான் – உபுல் தரங்க (9  போட்டிகள், 2011 ஓட்டங்கள்) ஜோடியும், இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் – ஹெய்டன் (10 போட்டிகள், 699 ஓட்டங்கள்) ஜோடியும் இடம்பிடித்துள்ளனர்.  

வோர்னருக்கு முதலிடம்  

இந்தப் போட்டியில் 53 ஓட்டங்களைக் குவித்த டேவிட் வோர்னர், இம்முறை உலகக் கிண்ணத்தில் 500 ஓட்டங்களை எடுத்து அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்களில் முதலிடத்துக்கு முன்னேறினார்.  

இந்தப் பட்டியலில் ஆரோன் பின்ச் 496 ஓட்டங்களுடன் 2ஆவது இடத்திலும், சகிப் அல் ஹசன் 424 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்

அத்துடன், உலகக் கிண்ணத் தொடரில் 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்த 3ஆவது அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் வோர்னர் நிகழ்த்தினார். முன்னதாக, 2007 உலகக் கிண்ணப் போட்டியில் மெத்யூ ஹெய்டன் 659 ஓட்டங்களையும், ரிக்கி பொண்டிங் 539 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.  

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மாத்திரமே உலகக் கிண்ணத் தொடரில் 2 தடவைகள் 500 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவர் 1996இல் 523 ஓட்டங்களையும், 2003இல் 673 ஓட்டங்களையும் அவர் எடுத்தார்.  

பின்சின் சாதனை சதம் 

இந்தப் போட்டியில் சதமடித்த ஆரோன் பின்ச், இங்கிலாந்துக்கு எதிராக 25 போட்டிகளில் 7 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இதற்குமுன் எந்தவொரு வீரரும் இங்கிலாந்துக்கு எதிராக 7க்கு அதிகமான சதங்கள் குவிக்கவில்லை

ஸ்டார்க்கின் மைல்கல்

உலகக் கிண்ணத் தொடர்களில் குறைந்த இன்னிங்ஸில் 40 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலில் லசித் மாலிங்க மற்றும் சஹிர் கான் ஆகியோர் தக்கவைத்துக் கொண்ட சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்தார்

இதுவரை மாலிங்க 20 போட்டிகளில் 40 விக்கெட்டுகளையும், சஹிர் கான் 21 போட்டிகளில் 40 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். ஆனால் மிட்செல் ஸ்டார்க் வெறும் 15 போட்டிகளிலேயே 40 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது சாதனையையும் முறியடித்துள்ளார்

இந்த நிலையில், நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அவுஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்

இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட், இயென் மோர்கன் இருவரின் விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலே வீழ்த்தியிருந்தார்

அடுத்தப் போட்டியில் வெற்றிபெற இலங்கை என்ன செய்ய வேண்டும்?

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை …

இதனால் நடப்பு உலகக் கிண்ணத்தில் 19 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்களில் அவர் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இந்தப் பட்டியலில் ஜொப்ரா ஆர்ச்சர் 16 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், 15 விக்கெட்டுகளை எடுத்த மொஹமட் ஆமிர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்

பெஹ்ரென்ட்ரோப்பின் சிறந்த பந்துவீச்சு

அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேசன் பெஹ்ரென்ட்ரோப், ஒருநாள் மற்றும் உலகக் கிண்ணப் போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். இதற்குமுன் பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற போட்டியில் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார்

அத்துடன், லோர்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<