சாதனைகள் மூலம் இந்தியாவுடனான கடனைத் தீர்த்த இலங்கை அணி

2301

செப்டெம்பர் 6 புதன்கிழமை இலங்கைத் தீவுக்கு சுற்றுலா வந்திருந்த இந்திய கிரிக்கெட் அணி, அயல் நாட்டில் தம்முடைய வேலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது. இலங்கை அணியுடனான மூன்று வகைப் போட்டித் தொடர்களையும் (டெஸ்ட், ஒரு நாள், T-20)  9-0 என முழுமையாகக் கைப்பற்றிய இந்தியா, இலங்கை கிரிக்கெட்டுக்கு வரலாற்றில் மிகவும் மோசமான தொடரொன்றினை பரிசளித்திருந்தது.

தொடர் தோல்விகளுக்கு அதிரடி வெற்றியுடன் முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும்..

இந்த தொடரினை அடுத்து இலங்கை அணிக்கு பாகிஸ்தானுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (ஒரு T-20 பாகிஸ்தானில்) நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் சோகம் தொடர்ந்தது. பாகிஸ்தான் இலங்கை அணியினை ஒரு நாள் தொடரில் 5-0 எனவும், T-20 தொடரில் 3-0 எனவும வைட் வொஷ் செய்திருந்தது.   

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை அடுத்து தம்மை ஏற்கனவே படுதோல்வியடையச் செய்த இந்திய அணியுடன் மீண்டும் இருதரப்பு தொடரொன்றில் விளையாட அந்நாட்டிற்கே சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டது இலங்கை. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரினை 1-0 என பறிகொடுத்திருப்பினும், இத்தொடர் முடிவுகள் நல்ல விதமாகவே இலங்கை அணிக்கு அமைந்தது. எனினும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை அணி தமது வடுக்களை ஆற்றவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருந்தது.  

அந்த வகையில் புதிய அணித் தலைவரான திசர பெரேராவின் தலைமையின் கீழான இலங்கை தரப்புக்கு, மற்றுமொரு புதிய அணித் தலைவரான ரோஹித் சர்மாவின் வழிநடாத்தலில் இருக்கும் மிகவும் பலம்பொருந்திய இந்திய அணியினை சமாளிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.  

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரினை இந்தியா 3-0 என கைப்பற்றினால் ஒரு நாள் தரவரிசையில் அவ்வணி முதலிடத்தில் வந்துவிட முடியும் என இந்திய ஊடகங்கள் கூறியிருந்தன.

இன்னுமொரு பக்கத்தில் 2017ஆம் ஆண்டு மூன்று தடவைகள் 5-0 என வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை அணி இறுதியாக தாம் விளையாடிய  12 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்த காரணத்தினால், ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் தொடர்ச்சியாக 23 போட்டிகளில் தோல்வியடைந்த பங்களாதேஷின் மோசமான சாதனையினை முறியடித்து விடப் போகின்றது என்கிற விதமான கிண்டல் கருத்துக்களும் வெளிவந்திருந்த.

இப்படியாக கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் தராம்சாலாவில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் விளையாடிய இலங்கை, யாருமே எதிர்பார்த்திராத வண்ணம் பிரம்மிக்க வைக்கும் விதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி தமது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளின்றினையும்  வைத்து 120 கோடி இந்திய இரசிகர்களுக்கும் அதிர்ச்சியூட்டியது.

அங்குரார்ப்பண T-10 தொடரில் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்

சுருக்கமடைந்துவரும் கிரிக்கெட் உலகில் முதல்..

மூன்று மாதங்களுக்கு முன்னர் தமது அணியை இக்கட்டான நிலையொன்றுக்கு கொண்டு சென்ற இந்தியாவை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை, அதோடு சேர்த்து இப்போட்டியில் பல சாதனை அடைவுகளினையும் பெற்றிருகின்றது.

இந்தியஇலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கொள்ளப்பட்ட புதிய பதிவுகள்

  • 2009 ஆம் ஆண்டிலேயே இறுதியாக இந்திய அணியினை அவர்களது சொந்த மண்ணில் இலங்கை ஒரு நாள் போட்டியொன்றில் வீழ்த்தியிருந்தது. நாக்பூரில் இடம்பெற்ற அந்தப் போட்டியில் மூன்று விக்கெட்டுக்களால் தோல்வியடைந்திருந்த இந்தியா, அதன் பிறகு இலங்கையுடன் விளையாடிய ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்திருக்கின்றது.
  • இந்திய மண்ணுக்கு விருந்தாளி அணியாக சென்று இந்தியாவை ஒரு நாள் போட்டிகளில் அதிக பந்துகள் (176) மீதமிருக்க வீழ்த்திய அணியாக இலங்கை புதிய சாதனை ஒன்றினை பதிவு செய்திருக்கின்றது.
எஞ்சிய பந்துகள் எதிரணி இடம் ஆண்டு வெற்றி இலக்கு மீதமிருந்த விக்கெட்டுக்கள்
209 இலங்கை தம்புள்ளை 2010 104 8
181 இலங்கை ஹம்பாந்தோட்டை 2012 139 9
176 இலங்கை தரம்சாலா 2017 113 7
174 அவுஸ்திரேலியா சிட்னி 1981 64 9
166 அவுஸ்திரேலியா செஞ்சுரியன் 2003 126 9
  • போட்டியின் முதல் பத்து ஓவர்களுக்கு இந்திய அணி 11 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இது ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் முதல் பவர்பிளேயில் பெறப்பட்ட அதிகுறைவான ஓட்டங்களாகும்.
  • இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணி சார்பாக ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் அதிக பந்துகளை (18) எதிர்கொண்டும் ஓட்டம் எதனையும் பெறாத வீரராக மோசமான சாதனை ஒன்றினை பதிவு செய்தார்.  

இந்திய அணியின் கண்களை திறந்துவிட்ட இலங்கை அணியின் வெற்றி

நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும்..

  • குறித்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட இந்திய அணி, ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் 5 விக்கெட்டுக்களை இழந்து பெற்ற அதிகுறைவான ஓட்டங்களினைப் பதிவு செய்திருந்தது.
  • 38.2 ஓவர்களுக்குள் மடக்கப்பட்டிருந்த இந்தியா இதில் 13 ஓட்டமற்ற ஓவர்களை எதிர்கொண்டிருந்தது. இந்திய அணி ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் இவ்வாறு அதிக ஓட்டமற்ற ஓவர்களை எதிர்கொண்டது இது முதல் தடவையாகும்.  
  • இலங்கை அணி இப்போட்டியின் வெற்றியோடு இந்தியாவை ஒரு நாள் போட்டிகளில் 2017ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் வீழ்த்திய ஒரேயொரு அணியாக மாறியிருந்தது. அதற்கு முன்னர், இவ்வருட மத்தியில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை இந்தியாவை வீழ்த்தியிருந்தது.
  • இந்திய அணி இப்போட்டியில் பெற்ற 112 ஓட்டங்கள் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் பெற்ற மிகக்குறைவான ஓட்டங்களாகும். அதோடு இந்திய அணி தமது சொந்த மண்ணில் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற மூன்றாவது குறைவான ஓட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ொத்த ஓட்டங்கள் ஓவர்கள் இன்னிங்ஸ் எதிரணி இடம் ஆண்டு போட்டி முடிவு
78 (டெஸ்ட்) 24.1 2 இலங்கை கான்பூர் 1986 தோல்வி
100 (டெஸ்ட்) 28.3 2 மேற்கிந்திய தீவுகள் அகமதாபாத் 1993 தோல்வி
112 (ஒரு நாள்) 38.2 1 இலங்கை தரம்சாலா 2017 தோல்வி
135 (டெஸ்ட்) 41.3 2 மேற்கிந்திய தீவுகள் குவாகிட்டி 1987 தோல்வி
135 (டெஸ்ட்) 36.1 2 பாகிஸ்தான் ஜெய்ப்பூர் 1999 தோல்வி
136 (ஒரு நாள்) 40.3 1 இலங்கை மார்கவோ 1990 தோல்வி

UEFA சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பரபரப்பு போட்டிகள்

உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவுள்ள UEFA…

  • நான்கு ஓட்டமற்ற ஓவர்களை வீசிய சுரங்க லக்மால், இந்திய அணியுடன் வெறும் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சினை பதிவு செய்திருந்தார்.

இலங்கை அணியின் இந்த அடைவுகளுக்கு முக்கிய காரணம் சுரங்க லக்மால், நுவான் பிரதீப் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் அபார பந்துவீச்சும், புதிய அணித் தலைவர் திசர பெரேராவின் வழிகாட்டுதலுடனான ஏனைய வீரர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடும் ஆகும்.

இப்படியாக தொடர்ந்து போராட்டத்துடன் இலங்கை வீரர்கள் செயற்படுவார்கள் எனில் இழந்த பெருமைகளை மீட்டு தமது தாயகத்தின் கொடியினை சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் தூக்கி நிறுத்தும் காலம் அவர்களுக்கு வெகுதூரமாகாது என்பதை உணர்த்துகின்றது.