இங்கிலாந்தின் நொட்டிங்ஹம்ஷெயார் அணியுடன் இணையும் அஷ்வின்

102

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின், கவுண்டி சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நொட்டிங்ஹம்ஷெயார் அணிக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிண்ண தொடருடன் .சி.சியின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகவுள்ளது.  

இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும்…

இந்த நிலையில், உலகக் கிண்ணம் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜூலை மாத இறுதியில் இந்த தொடர் தொடங்குகிறது.

இதையொட்டி உலகக் கிண்ண அணியில் இடம்பெறாத இந்திய முன்னணி வீரர்களை தயார்படுத்த அவர்களை இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விடுவதற்கு இந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து கவுண்டி சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல முன்னணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்திய அணியைப் பொறுத்தவரை செடிஸ்வர் புஜாரா யோர்க்ஷெயார் அணிக்காகவும், அஜிங்கியே ரஹானே ஹேம்ப்ஷெயார் அணிக்காகவும் விளையாட இங்கிலாந்து நோக்கிச் சென்றுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரும், நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் ஷ்வின், இம்முறை கவுண்டி சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நொட்டிங்ஹம்ஷெயார்அணிக்காக விளையாடவுள்ளார்.

இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்த ஷ்வின், எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள கவுண்டி சம்பியன்ஷிப் போட்டிகளில் ஸ்டுவர் போர்ட் தலைமையிலான நொட்டிங்ஹம்ஷெயார் அணிக்காக டிவிஷன் – 1 ஆறு போட்டிகளில் விளையாடவுள்ளார். அதன்பிறகு .சி.சியின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரிற்காக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் இந்திய கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரியொருவர் கருத்து வெளியிடுகையில், பிசிசிஐயின் சம்பள ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் கவுண்டி சம்பியன்ஷிப்பில் பங்கேற்க முடியும். எனவே, ஷ்வினும் இம்முறை கவுண்டி போட்டிகளில் களமிறங்கவுள்ளார். எங்கள் தரப்பில் தடையில்லா சான்றிதழ் வழங்க உள்ளோம் என தெரிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல்தடவையாக கவுண்டி போட்டிகளில் வொர்ஸ்டெர்ஷெயார் அணிக்காக விளையாடியிருந்த ஷ்வின், க்ளெஸ்டெர்ஷெயார் அணியுடனான முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அத்துடன், அந்த அணிக்காக நான்கு போட்டிகளில் விளையாடிய அவர், 20 விக்கெட்டுகளையும், 214 ஓட்டங்களையும் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உபாதையிலிருந்து மீண்ட கேதர் ஜாதவ் இந்திய உலகக் கிண்ண அணியில் இடம்பெறுவாரா?

தோள்பட்டை காயத்தினால் அவதிப்பட்டு…

இதேநேரம், இந்திய டெஸ்ட் அணியின் உதவித் தலைவர் அஜிங்கியே ரஹானே, இம்முறை கவுண்டி சம்பியன்ஷிப் போட்டியில் ஹேம்ப்ஷெயார் அணிக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை அந்நாட்டு கிரிக்கெட் சபை அண்மையில் வழங்கியிருந்தது. அந்த அணிக்காக விளையாடி வந்த தென்னாபிரிக்காவின் எய்டன் மார்கம் இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளதால் அவருக்குப் பதிலாக ரஹானேவை ஒப்பந்தம் செய்ய ஹேம்ப்ஷெயார் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, கவுண்டி போட்டிகளில் ஹேம்ப்ஷெயார் அணிக்காக விளையாடுகின்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொள்ளவுள்ள ரஹானே, நொட்டிங்ஹம்ஷெயார் அணியுடனான அடுத்த போட்டியில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரான புஜாரா ஏற்கனவே யோர்க்ஷெயார் அணிக்காக 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், இந்த வருடமும் அந்த அணிக்காக விளையாடவுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, .சி.சியின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்தாடியதன்பிறகு நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<