சர்வதேச கிரிக்கெட் சபையின் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ரவிசந்திரன் அஷ்வின்

419
Ravi Ashwin wins ICC Cricketer of the Year 2016

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ரவிசந்திரன் அஷ்வின் தெரிவாகியுள்ளார். இதன்மூலம் சார் கார்பீல்ட் சோபர்ஸ் எனப்படும் குறித்த உயரிய விருதை உலகளவில் பெற்றுக்கொள்ளும் 12ஆவது வீரராகவும், மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரராகவும் அஷ்வின் திகழ்கின்றார்.

இதற்கு முன்னதாக இவ்வுயரிய விருதினை இந்தியா சார்பாக ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010) ஆகிய கிரிக்கெட் வீரர்கள் பெற்றனர். அதற்கு மேலதிகமாக ஆன்ட்ரூ பிளின்டாப் மற்றும் ஜக் கலிஸ் ஆகியோர் 2005ஆம் ஆண்டு இணைந்து வென்றனர். பின்னர் ரிக்கி பொண்டிங் (2006 மற்றும் 2007), ஷிவ்னரைன் சந்திரபோல் (2008), மிட்செல் ஜோன்சன் (2009 மற்றும் 2014), ஜோனதன் ட்ரட் (2011), குமார் சங்கக்கார (2012), மைக்கேல் கிளார்க் (2013) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (2015) ஆகிய கிரிக்கெட் வீரர்களும் இவ்விருதைப் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து ரவிசந்திரன் அஷ்வின் குறித்த விருதுக்காக தற்பொழுது தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், ஆண்டுக்கான சிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் ரவி சந்திரன் அஷ்வின் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அதேநேரம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு (2004) பின்னர், ஒரே வருடத்தில் இரண்டு விருதுகளை பெற்றுக்கொள்ளும் இரண்டாவது கிரிக்கெட் வீரராகவும் அவர் திகழ்கின்றார்.

இதற்கு முன்னதாக, ஜக் கலிஸ் (2005), பொண்டிங் (2006), சங்கக்கார (2012), கிளார்க் (2013), ஜோன்சன் (2014) மற்றும் ஸ்மித் (2015) ஆகிய கிரிக்கெட் வீரர்கள் மாத்திரமே ஒரே ஆண்டில் இரு விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

குறித்த விருதுகளுக்கான தெரிவு வாக்களிப்பு, 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த காலப்பகுதியில், 30 வயதான ரவிசந்திரன் அஷ்வின் 8 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன், 336 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். மேலும், 19 T-20 போட்டிகளில் 27 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், உலகிலுள்ள சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரப்படுத்தலில் 2015ஆம் ஆண்டு முதலிடத்தில் இருந்ததோடு, 2016ஆம் ஆண்டு தரப்படுத்தலில் இருமுறை முதலிடத்திதை மீட்டெடுத்துமுள்ளார்.    

தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் குவிண்டன் டி கொக், ஐசிசியின் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டி வீரராகப் பெயரிடப்பட்டுள்ளார். இவர் தென்னாபிரிக்க அணி சார்பாக இவ்விருதினை பெறும் இரண்டாவது கிரிக்கட் வீரராகவும் சர்வதேச அளவிலான 9ஆவது வீரராகவும் உள்ளார். இதற்கு முன்னதாக ஏபி டி வில்லியர்ஸ் (2010, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில்) இவ்விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

குறித்த விருதுக்கான தெரிவுக் காலப்பகுதியில், குவிண்டன் டி கொக் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி நான்கு சதங்கள், ஒரு அரைச் சதம் உள்ளடங்கலாக 793 ஓட்டங்களையும், சராசரியாக 56 என்ற ஒட்ட விகிதத்தையும், துடுப்பாட்ட வேகமாக 98 என்ற விகிதத்தையும் பெற்றிருந்தார். அத்துடன் விக்கெட் காப்பாளராக இருந்து 15 துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.     

மேற்கிந்திய தீவுகள் அணியின் கார்லோஸ் பிரத்வெய்ட் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த T-20 வீரராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கொல்கத்தா நகரில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக T-20 சம்பியன் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில், 10 பந்துகளில் 34 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியை சம்பியனாவதற்கு வழிவகுத்தமையின் காரணத்தினாலேயே அவர் இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இறுதி ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை பெற்று வெற்றிக்கு காரணமாக இருந்தார். மேற்கிந்திய தீவுகள், பார்படோஸ் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய கார்லோஸ் பிரத்வெய்ட், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக இவ்விருதினை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.

பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசுர் ரஹ்மான் ஆண்டுக்கான ஐசிசியின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதினை வென்றுள்ளார். குறிப்பிட்ட காலப்பகுதியில் முஷ்தபிசுர் ரஹ்மான் பங்குபற்றிய மூன்று ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்டுகள் மற்றும் பத்து T-20 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் என்பவற்றை வீழ்த்தியமை காரணமாகவே இவ்விருதுக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுக்கான ஐசிசி விருதொன்றை பெறும் முதல் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரராகவும் இவர் திகழ்கின்றார்.   

ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் முஹம்மத் ஷஹ்சாத், ஆண்டுக்கான இணை அங்கத்துவ நாடுகளின் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 16 ஒருநாள் போட்டிகளில் 699 என்ற கூடிய ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமையினாலேயே குறித்த விருதுக்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதே நேரம், இவர் ஐசிசியின் இண்டர்கொண்டினென்ஷியல் முதல் தர போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ்களில் 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, 17 T-20 போட்டிகளில் 533 ஓட்டங்களை குவித்திருந்தார். அத்துடன், டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடுகளிலிருந்து பங்குபற்றும் கிரிக்கெட் வீரர்களிடையே சிறந்த பங்களிப்புக்களை வழங்கியமைக்காக ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இவ்விருதினை பெறும் முதலாவது வீரராகவும் ஷஹ்சாத் இருக்கிறார்.

ஆண்டுக்கான சிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர் (சார் கார்பீல்ட் சோபர்ஸ்)- ரவிசந்திரன் அஷ்வின் (இந்தியா) ஆண்டுக்கான சிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் – ரவிசந்தரன் அஷ்வின் (இந்தியா)
ஆண்டுக்கான சிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரர் – குவிண்டன் டி கொக் (தென்னாபிரிக்கா)
ஆண்டுக்கான சிறந்த ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீரர் – சுசி பேட்ஸ் (நியூசிலாந்து)
ஆண்டுக்கான சிறந்த ஐசிசி மகளிர் T-20 வீரர் – சுசி பேட்ஸ் (நியூசிலாந்து)
ஆண்டுக்கான சிறந்த ஐசிசி T-20 திறமையாளர் – கார்லோஸ் பிரsத்வெய்ட் (மேற்கிந்தியத் தீவுகள்) (34* (10), 1×4, 4×6, ஐசிசி WT-20 இந்தியா 2016 – கொல்கத்தாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இறுதி போட்டி)
ஆண்டுக்கான ஐசிசியின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் – முஷ்தபிசுர் ரஹ்மான் (பங்களாதேஷ்)
ஆண்டுக்கான ஐசிசி இணை அங்கத்துவ நாடுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர் – முஹம்மத் ஷஹ்சாத் (ஆப்கானிஸ்தான்)
ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் உணர்வை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர் – மிஸ்பா-உல்-ஹக் (பாகிஸ்தான்)
ஆண்டுக்கான சிறந்த ஐசிசி கிரிக்கெட் நடுவர் (டேவிட் ஷெப்பர்ட் கிண்ணம்) – மரைஸ் எரஸ்மஸ்

ஆண்டுக்கான சிறந்த ஐசிசி ஆடவர் கிரிக்கெட் அணி – (துடுப்பாட்ட வரிசை கடந்த 2015, செப்டம்பர் 14ஆம் திகதி முதல் 2016 செப்டம்பர் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கிரிக்கெட் வீரர்கள் வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ராகுல் டிராவிட், கேரி கிர்ஸ்டன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரால் தெரிவு செய்யப்பட்டது).

ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட்அ ணி ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணி
1. டேவிட் வார்னர் (ஆஸி) 1. டேவிட் வார்னர் (ஆஸி)
2. அலாஸ்டர் குக் (இங்கி) (தலைவர்) 2.குவிண்டான்டிகொக் (தென்ஆ)
3. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) 3. Rohit சர்மா (இந்தியா)
4. ஜோ ரூட் (இங்கி) 4. விரத்கோலி (இந்) (தலைவர்)
5. ஆடம் வோக்ஸ் (ஆஸி) 5. ஏபிடிவில்லியர்ஸ் (தென்ஆ)
6. ஜானி பேர்ஸ்டோவ் (இங்கி) (wk) 6. ஜோஸ் பட்லர் (இங்கி)
7. பென் ஸ்டோக்ஸ் (இங்கி) 7. மிட்செல் மார்ஷ் (ஆஸி)
8. ஆர் அஸ்வின் (IND) 8. ரவீந்திர ஜடேஜா (இந்)
9.   Rangana Herath (இலங்கை) 9. மிட்செல் ஸ்டார்க் (ஆஸி)
10. மிட்செல் ஸ்டார்க் (ஆஸி) 10. ககிசோ ரபடா (தென்)
11. டேல் ஸ்டெய்ன் (தெ.ஆ.) 11. சுனில் நரைன் (மேற்.இந்)
12. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி) 12. இம்ரான் தாஹிர் (தென்.)

ஆண்டுக்கான சிறந்த ஐசிசி மகளிர் கிரிக்கெட் அணி (துடுப்பாட்ட வரிசை கடந்த 2015, செப்டம்பர் 14ஆம் திகதி முதல் 2016 செப்டம்பர் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கிரிக்கெட் வீரர்கள் வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான க்ளேர் கானர், மெல் ஜோன்ஸ் ஆகியோரால் தெரிவு செய்யப்பட்டனர்

  1. சுசீ பேட்ஸ் (நியூசிலாந்து)
  2. ரேச்சல் பட் (நியூசிலாந்து) (விக்கெட் காப்பாளர்)
  3. ஸ்மிற்றி மாந்தனா (இந்தியா)
  4. ஸ்டாப்பனி டெய்லர் (மேற்கிந்திய தீவுகள்) (அணித் தலைவர்)
  5. மெக் லன்னிங் (அவுஸ்திரேலியா)
  6. Ellyse பெர்ரி (அவுஸ்திரேலியா)
  7. ஹீத்தர் நைட் (இங்கிலாந்து)
  8. டிதேன்றா டொட்டின் (மேற்கிந்திய தீவுகள்)
  9. சுனே லுஸ் (தென்னாரிக்கா)
  10. அன்யா ஷ்ருப்சோல் (இங்கிலாந்து)
  11. லே கசப்ப்ரேக் (நியூசிலாந்து)
  12. கிம் கார்த் (அயர்லாந்து)