பாதுகாப்பு பிரச்சினைக்கு பின்னர் பங்களாதேஷ் செல்லவுள்ள அலெக்ஸ் ஹேல்ஸ்

331
Rangpur Riders sign Alex Hales

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், இந்த பருவகாலத்திற்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் ராங்பூர் ரைடர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமையை, அணி நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.

மும்பை அணியிலிருந்தது மாலிங்கவின் பந்துவீச்சை அறிய உதவியாக இருந்தது – ஜோஸ் பட்லர்

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து…

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2016) பங்களாதேஷில் நடைபெறவிருந்த தொடருக்கு, பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் அணித் தலைவர் இயன் மோர்கன் ஆகியோர் பங்களாதேஷுக்கு பயணிக்கவில்லை.

இந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த விடயத்தினை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி இஸ்தியாக் சத்திக் உறுதிசெய்துள்ளார்.  

அலெக்ஸ் ஹேல்ஸ் அணியின் இணைவது குறித்து கருத்து வெளியிட்ட அவர், “இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை, இந்த பருவகாலத்துக்காக நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் இந்த பருவகாலம் முழுவதும் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இங்கிலாந்து குழாத்தில் இடம்பெற்றுள்ள அலெக்ஸ் ஹேல்ஸ் முதன்முறையாக பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ளார்.  எனினும், ராங்பூர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் டொம் மூடியின் பயிற்சியின் கீழ், ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக இவர் விளையாடியுள்ளார். இதனால், அவரால் அணிக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியும் என அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.  

இந்திய அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகும் கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் கிறிஸ்..

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் வீரர்கள் வரைவு எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடரில் இதுவரையில் விளையாடாத இரண்டு வீரர்களை ஒவ்வொரு அணிகளும் ஒப்பந்தம் செய்ய முடியும் என பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் நிர்வாக சபை அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில், அலெக்ஸ் ஹேல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், இரண்டாவது வீரராக தென்னாபிரிக்காவின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஏபி.டி. வில்லியர்ஸை இணைக்கும் நடவடிக்கைகளை ராங்பூர் அணி மேற்கொண்டுள்ளது.  

இதேவேளை, அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாடவுள்ள ராங்பூர் அணியில் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில், பங்களாதேஷ் அணியின் மஷ்ரபீ மொர்டஷா, நஷ்முல் இஸ்லாம் மற்றும் மொஹமட் மிதுன் ஆகியோர் தக்கவைப்பு வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் இந்த பருவகால போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  அத்துடன், இந்த தொடர் நடைபெறவுள்ள காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள UAE T20x கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<