ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றும் மலையக வீரர் ராஜகுமாரன்

275

இலங்கையின் விளையாட்டுத்துறையைப் பொறுத்தமட்டில் மலையகத்தைச் சேர்ந்த வீரர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து அதில் வெற்றியீட்டி, சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை வெல்வது என்பது மிகவும் அரிதாகவே இருந்து வருகின்றது. 

தெற்காசிய உடற்கட்டழகனான மகுடம் சூடிய புசல்லாவை வீரர் ராஜகுமாரன்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் ………

எனினும், ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாக மிகவும் ஷ்டத்துக்கு மத்தியில் வளர்ந்து, பாடசாலைக் கல்வியினையும் பெற்று தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்தவராக இன்று முழு உலகையும் வெல்லத் துடிக்கின்ற ஒரு நட்சத்திர வீரராக மலையகத்தைச் சேர்ந்த மாதவன் ராஜகுமாரன் மாறியுள்ளார்

ஆசிய உடற்கட்டகழகர் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் கடந்த முதலாம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூத்தில் நடைபெற்றது

இதில் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட மலையகத்தைச் சேர்ந்த ராஜகுமாரன் முதலிடத்தைப் பெற்று ஆசிய போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்

சீனாவின் ஹேர்பின் நகரில் நாளை (26) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை 53ஆவது ஆசிய உடற்கட்டகழகர் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது

சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு இந்தப் போட்டித் தொடரில் களமிறங்கவுள்ள இலங்கை அணியில் ஐந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், மத்திய மாகாணம், புசல்லாவையைச் சேர்ந்த மாதவன் ராஜகுமாரனும் முதல்தடவையாக இந்தத் தொடரில் போட்டியிடவுள்ளார்.

மஹேல, சங்காவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

இலங்கை முன்னாள் வீரர்களான மஹேல ………

ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவிலும், 23 வயதுக்குட்பட்ட கனிஷ் சம்பியன்ஷிப் போட்டிப் பிரிவிலும் அவர் களமிறங்கவுள்ளார்

முன்னதாக கடந்த வருடம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் மத்திய மாகாணத்தின் மாதவன் ராஜகுமாரன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போட்டித் தொடரில் 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ராஜகுமாரன், தெற்காசியாவின் முன்னணி வீரர்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தமை சிறப்பம்சமாகும்.

இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற அவர், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புசல்லாவையைச் சேர்ந்த இவர், முன்னதாகஅகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் உடற்கட்டழகர் போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார்

தர்ஜினியின் மற்றொரு சாதனையுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த இலங்கை

வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில்………

அதன்பிறகு, தேசிய மட்டத்தில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்ற அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய உடற்கட்டழகர் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதனைத்தொடர்ந்து 2017இல் நடைபெற்ற கனிஷ் மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் சம்பியனாகவும் மகுடம் சூடினார்.

எனவே, சாதிப்பதற்கு வறுமை என்பது தடையல்ல என்பதை நிரூபித்துக்காட்டிய மலையக நட்சத்திரம் ராஜகுமாரன், இம்முறை ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக ஆணழகர் போட்டியிலும் சாதிக்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்

இதேவேளை, இலங்கை உடற்கட்டகழகர் சம்மேளனத்தின் தெரிவுக்குழுவின் தலைவர் திலக் ஜயவீர இப்போட்டித் தொடரில் இலங்கை அணியின் முகாமையாளராக செயற்படவுள்ளதுடன், உலக உடற்கட்டழகர் சம்பியன்ஷிப் போட்டியில் ஹெட்ரிக் பதக்கம் வென்ற முன்னாள் வீரரான பிரசன்ன பீரிஸ் பயிற்சியாளராகவும் செயற்படவுள்ளனர்.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<