அடை மழையினால் சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைப்பு

218
Rain postpones DCL16 Super 8 week 2
ඩයලොග් ශූරයින්ගේ කුසලාන තරගාවලියේ සුපරි 8 දෙනාගේ දෙවැනි තරගය වැස්සට කල් යයි

ஏற்கனவே இரண்டு மாதங்கள் பிற்போடப்பட்டு, மீண்டும் நாளை ஆரம்பமாகவிருந்த டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து சுற்றுத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இரண்டாம் வாரப் பொட்டிகள் அடை மழை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சுப்பர் 8 சுற்றின் முதல் வாரப் போட்டிகள் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெற்றன. எனினும் அதன் பின்னர் இலங்கை தேசிய கால்பந்து அணி சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டமையினால் சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 சுற்றின் எஞ்சிய போட்டிகள் நவம்பர் 19ஆம் திகதி வரை (நாளை) ஒத்திவைக்கப்பட்டது.  

இதன்படி இரண்டு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், குறித்த போட்டிகளில் 19ஆம் திகதி (நாளை) இரண்டு போட்டிகளும், 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் தலா ஒரு போட்டியும் இடம்பெற இருந்தன.

ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிகள்

நவம்பர் 19ஆம் திகதி (சனிக்கிழமை)

புளூ ஸ்டார் எதிர் விமானப்படை களனிய கால்பந்து அரங்கு (மாலை 3.30 மணி)

கொழும்பு கழகம் எதிர் சொலிட் கொழும்பு சிட்டி கால்பந்து அரங்கு (மாலை 3.30 மணி)

நவம்பர் 20ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)

ரினௌன் எதிர் நிவ் யங்ஸ் களனிய கால்பந்து அரங்கு (மாலை 3.30 மணி)

நவம்பர் 21ஆம் திகதி (திங்கட்கிழமை)

ராணுவப் படை எதிர் கடற்படை களனிய கால்பந்து அரங்கு (மாலை 3.30 மணி)

எனினும் கடந்த சில நாட்களாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையினால் 19ஆம் திகதி (நாளை) இடம்பெற இருந்த 2 போட்டிகளும், 20ஆம் திகதி இடம்பெற இருந்த போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 21 ஆம் திகதி இடம்பெற உள்ள ராணுவப் படை மற்றும் கடற்படை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இதுவரை எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.