இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியைக் கொடுப்போம் என்கிறார் ராகுல்

294
Rahul
@Getty

இங்கிலாந்துக்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள லீக் போட்டியில் அந்த அணிக்கு அதிர்ச்சியைத் தோல்வியை கொடுத்து உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் தகுதி பெறுவதற்கு அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாக இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் மேற்கிந்திய தீவுகள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 34ஆவது லீக்..

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மென்செஸ்டரில் நேற்று (27) நடைபெற்ற இப்போட்டியில் இந்திய சார்பாக துடுப்பாட்டத்தில் விராத் கோஹ்லி மற்றும் டோனி ஆகிய இருவரும் அரைச் சதம் அடித்து கைகொடுக்க, பந்துவீச்சில் மொஹமட் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்மூலம் நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தோல்வியையே சந்திக்காத அணியாக இந்திய அணி உள்ளது. இதுவரை 6 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இந்திய அணி உள்ளது. அவ்வணி எஞ்சியுள்ள இரு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்து கொள்ளும்

இதுஇவ்வாறிருக்க, இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜூன் 3ஆம் திகதி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ள நிலையில், நேற்றைய போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கே.எல் ராகுல் அளித்த பேட்டியில்,

”நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியிருந்தால், கடந்த நான்கு அல்லது ஐந்து ஆட்டங்களில் நாங்கள் விளையாடிய விதத்தில் கிரிக்கெட்டை நாங்கள் விளையாடினால், பெரும்பாலும் வெற்றி எமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது

இலங்கையுடனான போட்டி மிகவும் கடினமாக இருக்கும்: கிமார் ரோச்

இம்முறை உலகக் கிண்ணத்தில் இருந்து லீக் சுற்றுடன்..

தனிப்பட்ட முறையிலும், ஒரு அணியாகவும் நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாகப் பெறுவதில் கவனம் செலுத்துகிறோம். எங்கள் திறமைகளை சரியாக செயல்படுத்துகிறோம். மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான சவாலான போட்டியொன்றில் மோதவுள்ளோம்

எனவே இந்தப் போட்டியில் மூலம் பெற்றுக்கொண்ட நம்பிக்கையையும், சிறந்த தருணங்களையும் எம்மால் பேர்மிங்ஹமுக்குக் கொண்டு செல்ல முடியும். அது இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதற்கு உந்துசக்தியாக இருக்கும். எனவே, அந்தப் போட்டியில் நிச்சயம் நாங்கள் இங்கிலாந்துக்கு சவால் கொடுத்து வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.

இதேநேரம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தடிய கோஹ்லி 72 ஓட்டங்களையும், டோனி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்திருந்தனர். இதனால் இந்திய அணி 268 ஓட்டங்களைக் குவித்தது

ரவுண்ட் ரொபின் முறையில் நடைபெறுகின்ற போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப தமது அணியில் துடுப்பெடுத்தாடுகின்ற திறமைகளைக் கொண்ட வீரர்கள் இருப்பதாக ராகுல் இதன்போது குறிப்பிட்டார்

”எமது துடுப்பாட்ட வரிசை குறித்து நிறைய நம்பிக்கை உள்ளது. எனவே ஓட்டங்களைக் குவிப்பதற்கு கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வதில் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் அடுத்த போட்டிக்குச் சென்றால், ஆடுகளம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். வானத்தில் மேகமூட்டமாக இருக்கலாம். எனவே, நம் மனதில் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்

இதேநேரம், உலகக் கிண்ணத்தில் இதுவரை நான்கு தொடர்ச்சியான அரைசதங்களைக் குவித்து, மிகக் குறைந்த போட்டிகளில் 20,000 சர்வதேச ஓட்டங்களை எட்டி சாதனை படைத்த கோஹ்லி குறித்து ராகுல் கூறுகையில்,  

”அணியை உறுதியாக வைத்திருப்பதற்கு ஒரு பெரிய காரணமாக கோஹ்லி இருந்து வருகிறார். அது எமக்கு மிகவும் உத்வேகம் அளிக்கிறது. அதாவது, .பி.எல் அல்லது டெஸ்ட் கிரிக்கெட் அல்லது டி-20 கிரிக்கெட் அல்லது ஒருநாள் போட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவர் நன்றாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். உண்மையில் அவர் ஒரு ஓட்ட இயந்திரம். அதைத் தான் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கும், ஊக்கமளிப்பதற்கும் சிறந்த விடயமாக இருந்தது” என குறிப்பிட்டார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<