உலகின் விலை உயர்ந்த வீரரானார் நெய்மர்

939
Neymar JR
Photo Credit: Goal

பிரேஸில் கால்பந்து அணியின் முன்கள வீரர் நெய்மர் டி சில்வாவை உலக சாதனை தொகையான 222 மில்லியன் யூரோக்களுக்கு (262 மில்லியன் டொலர்) பார்சிலோனா அணியிலிருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் உலகில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வீரராக நெய்மர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் போல் பொக்பா 2016ஆம் அண்டு ஓகஸ்டில் ஜுவான்டஸ் அணியில் இருந்து மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு திரும்ப 111 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டதே அதிகமாக தொகையாக இருந்தது. நெய்மரின் ஒப்பந்தம் இதில் இரட்டிப்பை விட அதிக மடங்காகும்.

பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது ஜெர்மனி

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) கூட்டுறவு கிண்ணத்தை (Fifa confederations cup)..

இதன்படி நெய்மர் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் யூரோக்களை (8,200 மில்லியன் ரூபாய்) ஈட்டவிருப்பதோடு, வாரத்திற்கு 865,000 யூரோக்களை (155 மில்லியன் ரூபாய்) பெறுவார். எனினும் இது அவரது ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தின் வரிக்கு முந்தைய தொகையாகும்.

நெய்மரின் ஒப்பந்தக் காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கவிருப்பதாக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் ஐரோப்பாவின் இலட்சியம் கொண்ட கழகங்களில் ஒன்றில் இணைந்ததாக நெய்மர் அறிவித்துள்ளார்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைனின் இலட்சியத்துடன் ஆர்வம் மற்றும் ஆற்றல் அந்த கழகத்தில் என்னை கவர்ந்திழுத்தது. நான் சவாலை ஏற்க தயாராகிவிட்டேன் என உணர்கிறேன். இன்று தொடக்கம் எனது புதிய அணியினருக்காக உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நெய்மர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்த பிரான்ஸ் அணி நெய்மரின் விடயம் தொடர்பில் விளக்கமளிக்க வெள்ளிக்கிழமை மாலை அளவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி இந்த பருவகாலத்தில் தனது முதல் போட்டியில் அமியென்ஸ் அணியை எதிர்த்து நாளை சனிக்கிழமை விளையாடவுள்ளது. இதன்போது நெய்மர் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளார்.

நெய்மரின் எதிர்காலம் குறித்து பல வாரங்கள் சந்தேகம் இருந்து வந்த நிலையில் கடந்த புதன்கிழமை பார்சிலோனா பயிற்சிக்கு தனது தந்தையுடன் வந்த அவர், தாம் ஸ்பானிய அணியில் இருந்து வெளியேறப்போவதாக குறிப்பிட்டார்.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்கள் பணி நீக்கம்

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தேசிய கால்பந்து அணியின்…

இதனை அடுத்து நெய்மர் வெளியேறி தனது எதிர்காலம் பற்றி தீர்மானிக்க பார்சிலோனா முகாமையாளர் எர்னெஸ்டோ வெல்வர்டோ அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து ஒப்பந்த விவகாரத்தில் கடந்த ஒருசில தினங்களாக இழுபறி நீடித்த நிலையில் நெய்மர் பார்சிலோனா அணியிலிருந்து விலகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பார்சிலோனா அணியின்பிக்–3’ என அழைக்கப்படும் அர்ஜென்டினாவின் மெஸ்சி, உருகுவேயின் சுவாரஸுடன் பிரேசிலின் நெய்மர் இருந்தார். இதில், நெய்மர் அந்த அணிக்கு 105 கோல்களை பெற்றுள்ளார். தற்போது அந்தபிக்-3’ கூட்டு உடைந்துள்ளது.  

தனது 18 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான நெய்மர் பிரேசில் அணிக்கு 77 போட்டிகளில் விளையாடி 52 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது