ரெட் ஸ்டார், SLTB & நியு ஸ்டார் அணிகளுக்கு வெற்றி

315
Primer league division 1 Slider

ரெட் ஸ்டார், SLTB & நியு ஸ்டார் அணிகளுக்கு வெற்றி, ஹைலைன், கோல்டன் ஸ்டார் அணிகளுக்கிடையான போட்டி மழையினால் பாதிப்பு.

ஹைலைன் எதிர் கோல்டன் ஸ்டார்

கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்ற ஹைலைன் விளையாட்டுக் கழகம் மற்றும் கோல்டன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி முதல் பாதியின் பின் மழையினால் பாதிக்கப்பட்டமையால் போட்டியின் இரண்டாவது பாதி பிற்போடப்பட்டுள்ளது.

நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் எதிர் படோவிட யுனைடட்.

நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் படோவிட யுனைடட் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி குரே பார்க்கில் நடைபெற்றது. ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் முதல்பாதி முடிவில் 2-0 என்ற ரீதியில் போட்டியில் முன்னிலையில் காணப்பட்டது. பின் இரண்டாவது பாதியிலும் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் போட்டியின் முழு நேர முடிவில் 5-0 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டது.  

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – முஹம்மத் அனஸ் (நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம்)

எஸ்.எல்.டி.பி மற்றும் பழைய மெஸ்டோனியன்ஸ் விளையாட்டுக் கழகம்

எஸ்.எல்.டி.பி மற்றும் பழைய மெஸ்டோனியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி ஷாலிகா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய எஸ்.எல்.டி.பி அணி போட்டியை 4 – 0 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டது.  

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – சி. நதீஷ (எஸ்.எல்.டி.

 மற்றைய போட்டிகளின் முடிவுகள் 

குழு A
புனித மேரிஸ் வி.க 2 – 1 மொரகஸ்முள்ள வி.க

குழு C
செரண்டிப் வி.க 2 – 2 கொம்ரெட்ஸ் வி.க

குழு D
ரெட் ஸ்டார் வி.க 5 – 0 கிழக்கு இளைஞர் வி.க