தீர்மானம் மிக்க ஆட்டமாக இடம்பெற்று நிறைவடைந்த சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழக அணியுடனான விறுவிறுப்பான போட்டியில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்ற கொழும்பு கால்பந்துக் கழகம் சிடி கால்பந்து லீக் ஜனாதிபதிக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

முன்னர் இடம்பெற்ற முதலாம் வாரப் போட்டியில் மொறகஸ்முல்ல யுனைடட் அணியிடம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்த டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன் கொழும்பு அணி, மொறகஸ்முல்ல அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்த சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழக அணியை இந்த ஆட்டத்தில் சந்தித்தது.

இரண்டாம் பாதி அபாரத்தினால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ரினௌன்

ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், ஜனாதிபதிக் கிண்ண தொடரின் அரையிறுதிச் சுற்றுப் போட்டிக்கு தெரிவாக வேண்டும் எனில் இன்றைய போட்டியில் 2 கோல்கள் மேலதிகமாகப் பெற்று வெற்றி பெற வேண்டிய தேவை கொழும்பு அணியினருக்கு இருந்தது.

எனவே தீர்மானம் மிக்க இந்த ஆட்டம் ஆரம்பமாகிய சில நிமிடங்களுக்கு சௌண்டர்ஸ் அணியின் நிரேஷ் கொழும்பு தரப்பின் பின்கள வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தவாரே இருந்தார்.

மறுமுனையில் கொழும்பு அணியின் பயிற்றுவிப்பாளர் தமது அணியின் விகும் குமாரசிறிக்குப் பதிலாக சிராஜ் மொஹமடை ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்திலேயே மாற்றியிருந்தார்.

அதற்கு பிரதிபலனாக கொழும்பு அணிக்கு கிடைத்த கோணர் உதையில் சிராஜ் மேற்கொண்ட சிறந்த முயற்சியின்போது பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது.

எனினும், 25 நிமிடங்கள் கடந்த நிலையில் ஹெட்டியாரச்சி மேற்கொண்ட தவறின் காரணமாக கொழும்பு அணியினருக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. அதனை மொமாஸ் யாபோ கோலாக்கி அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்தும் மொமாஸ் யாபோவிற்கு பல கோல் வாய்ப்புக்கள் கிடைத்தும் அவரால் முதல் பாதியில் மேலதிக கோல்களைப் பெற முடியாமல் போனது.

குறிப்பாக எதிரணியின் சிறந்த கோல் வாய்ப்பொன்று சௌண்டர்ஸ் கோல் காப்பாளர் அசன்க விராஜ் மூலம் தடுக்கப்பட்டது.

முதல் பாதி : கொழும்பு கால்பந்து கழகம் 01 – 00 சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்  

முதல் பாதியின் இறுதிக் கட்டத்தைப் போன்றே இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் கொழும்பு அணி வீரர்களினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி முயற்சிகள் விராஜ் மூலம் தடுக்கப்பட்டன.

மேலும், மிகப் பெரிய அழுத்தத்திற்கு மத்தியில் கொழும்பு அணியின் முன்கள வீரர்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் சௌண்டர்ஸ் அணியின் பின்கள வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்மூலம் அபீஸ் ஒலயேமி, நாகுர் மீரா ஆகியோரது முயற்சிகள் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டன.

ரினௌன், கொழும்பு அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மொறகஸ்முல்ல மற்றும் ஜாவா லேன்

இன்றைய போட்டியில் சௌண்டர்ஸ் அணிக்காக பெரும் பங்காற்றிய விராஜ், தனது அனுபவத்தின் மூலம் எதிரணியின் பலதரப்பட்ட தாக்குதல்களுக்கும் ஈடு கொடுத்து சிறந்த முறையில் தடுப்புக்களை மேற்கொண்டார். இதன் காரணமாக இரண்டாவது பாதியிலும் சிராஜ் மேற்கொண்ட முயற்சி சிறந்த முறையில் நிறைவு செய்யப்படவில்லை.

மறுமுனையில் கிறிஷான்த அபேசேகர மேற்கொண்ட சிறந்த முயற்சியை கொழும்பு அணியின் கோல் காப்பாளர் இம்ரான் முறியடித்தார்.

இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி வாய்ப்புக்களைப் பெற்றிருந்த நிலையில் ஹெட்டியாரச்சி ஹெடர் மூலம் விராஜ்ஜிற்கு பந்தை வழங்கும்பொழுது விடப்பட்ட தவறை சாதகமாகப் பயன்படுத்திய சர்வான் ஜோஹர் அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

அதற்கு அடுத்த ஆறாவது நிமிடத்தில் தனுஷ்க மதுஷங்க மூலம் மற்றுமொரு கோலைப் பெற்றுக்கொண்ட கொழும்பு கால்பந்துக் கழகம் மேலதிக 3 கோல்களின்மூலம் வெற்றியை சுவைத்து, காலிறுதிக்கான தமது தகுதியை உறுதி செய்துகொண்டது.

முழு நேரம் : கொழும்பு கால்பந்து கழகம் 03 – 00 சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

கொழும்பு கால்பந்து கழகம் – மொமாஸ் யாபோ 26, சர்வான் ஜோஹர் 80, தனுஷ்க மதுஷங்க