இம்முறை இடம்பெறும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் நான்கு இடங்களுக்குள் வந்து எதிர்வரும் 2016/17ஆம் பருவகால ஒருநாள் போட்டிகளுக்கு தகுதி பெறும் எதிர்பார்ப்புடன் கோட்டே ஜனாதிபதி கல்லூரி கிரிக்கெட் அணி உள்ளது.

கோட்டே ஜனாதிபதி கல்லூரி குறித்த சிறிய அறிமுகம்

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன அவர்களால் 1978ஆம் ஆண்டு டொரிண்டன் சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலை, பின்னர் 1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி கோட்டே பிரதேசத்துக்கு இடம் மாற்றப்பட்டது.

ஜனாதிபாதி கல்லூரி, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய சிந்தக பெரேரா மற்றும் பிரகீத் ஜெயசூரிய போன்ற வீரர்களை கடந்த காலங்களில் உருவாக்கியுள்ளது. மேலும், இலங்கை கிரிக்கெட் கழகத்தில் பிரசித்திபெற்ற, பலராலும் அறியப்பட்ட நிமேஷ் பெரேராவும் இந்த கல்லூரியால் உருவாக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரராவார்.

தற்போதைய பருவகால போட்டிகளில் D குழுவில் இடம்பெறும் இவ்வணி புனித ஜோசப் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி போன்ற சிறந்த அணிகளுடன் போட்டியிடுகின்றது.  இந்த அணியினர் இம்முறை சிறப்பாக செயற்பட்டு எதிர்வரும் போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்று சுற்றின் நிறைவில் முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

இந்த பருவகாலப் போட்டிகளில் தாம் விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தொடர் தோல்விகளுடன் தமது தொடரை ஆரம்பித்த இக்கல்லூி அணி, பின்னர் தமது நான்காவது போட்டியில் மீள் எழுச்சி பெற்று அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தை வெற்றி கொண்டது. அத்துடன் லீக் போட்டிகளில் இரண்டு, முதல் இன்னிங்ஸ் வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது.

 முக்கிய வீரர்கள்

தொடர்ந்து ஐந்து வருடங்களாக விளையாடும் கசுன் மலிங்க இம்முறை பெரிதளவில் சாதிக்கவில்லை. எனினும், அவரது அனுபவத்தினைப் பயன்படுத்தி இம்முறை அணியை முன்னெடுத்துச் செல்ல அணிக்கான பாரிய பொறுப்பை அவர் வகிப்பார்.

இடது கை சுழல் பந்து வீச்சாளர் ஹசிந்து பிரமுக்க கடந்த பருவகால போட்டிகளில் சிறந்த முறையில் பந்து வீசி 24 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். அணித் தலைவருக்கு பந்து வீச்சில் தனது சிறந்த பங்களிப்பை இவர் வழங்குவார்.

ஹிருண சிகர தொடர்ந்து மூன்றாண்டுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய நிலையில், இம்முறை நடு வரிசை துடுப்பாட்டத்தினை பலப்படுதவுள்ளார். கடந்த போட்டிகளில் பெற்ற ஓட்ட எண்ணிகையை விட அதிக ஓட்டங்களை எதிர்வரும் போட்டிகளில் பெற்று தனது பங்களிப்பை வழங்குவார்.  

Photo Album: President’s College Cricket Team Preview 2016/17

அதேநேரம், அணிக்காக மூன்றாவது வருடமாகவும் விளையாடும் இரங்க ஹஷான் இந்த வருடத்தில் தனது அனுபவத்தின் மூலம் அதிரடி ஆட்டத்தில் ஈடுபடவிருக்கிறார். வலது கை துடுப்பாட்டக்காரரான இவர் கடந்த பருவகால போட்டிகளில் 45 ஓட்டங்களுக்கு மேல் குவித்ததோடு இம்முறை மேலும் அதிகமான ஓட்டங்களை குவிப்பதற்கு எதிர்பர்த்துள்ளார்.

பயிற்சியாளர்கள்

அனுபவமிக்க மதுரங்க சொய்சா ஜனாதிபதி கல்லூரியை பொறுப்பெடுத்து பயிற்சிகளை வழங்கி வருகிறார். BRC கிரிக்கெட் கழகத்துக்கான உதவி பயிற்சியாளராக சேவையாற்றி வரும் இவர் எதிரணிகளை வெல்லுவதற்கு புதிய வழிமுறைகளை வழிக்காட்டலாம்.

ப்ரணம் ஸ்ரீ விமுத்தி அணியின் துணைப் பயிற்சியாளராக பணி புரியும் அதே சமயத்தில் சமீரா குமார அணியின் பொறுப்பாளராக கடமையாற்றுகின்றார்.

இறுதியாக,

ஆரம்ப போட்டிகளில் சாதகமான முடிவுகளை பெற முடிவில்லை எனிலும், கிரிக்கெட் விளையாட்டு சடுதியாக எதிர் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அந்த வகையில், கோட்டே ஜனாதிபதி கல்லுரியின் முதல் நோக்கம் முதல் நான்கு இடங்களில் இடம்பெறுவதாகும். அவர்கள் கடுமையாக போராடும் பட்சத்தில் இது சாத்தியமாகலாம்.