பிரீமியர் லீக் முதல் இரண்டு வார முடிவில் கழகங்களின் நிலை

213
Premiur League Results after week 2

ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்தின் மிகப் பெரிய தொடரான 2017/18ஆம் பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் தொடக்கம் முதலே சூடு பிடித்துள்ளதை இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் முடிவுகள் தெரியப்படுத்துகின்றன. புதுமுக வீரர்களுடன் களமிறங்கியுள்ள கழகங்கள் தொடக்கம் முதல் சவால் விடுப்பதை புள்ளிப் பட்டியல் காட்டுகின்றது.  

மொத்தம் 20 அணிகள் பங்கு கொள்ளும் இந்த சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 11ஆம் திகதி மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியுடன் ஆரம்பமானது. ஆதரவாளர்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலேயே இப்பருவகாலத் தொடர் ஆரம்பமாகியுள்ளது.

இத்தாலி நாட்டின் ஒய்வு பெற்ற கால்பந்து வீரரான அண்டோனியோ கொன்டேயின் (Antonio Conte) பயிற்றுவிப்பின் கீழ் இயங்கும் செல்ஸி கால்பந்துக் கழகம் (Chelsea FC) கடந்த பருவகால சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

புதிய தோற்றத்தில் கட்டாரில் கால்பந்து மைதானம்

விளையாட்டு உலகின் மிகவும் பிரபல்யமிக்க விளையாட்டாக விளங்குகின்ற கால்பந்து …

இதுவரை ஒவ்வொரு அணியும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. (11-08-2017 முதல் 23-08-2017 வரை). அந்த அடிப்படையில் கடந்த வருடம் ஆறாவது இடத்தைக் கைப்பற்றிய ஜோஸே மோரிய்னோவின் (Jose Mourinho) பயிற்றுவிப்பின் கீழ் விளையாடும் மென்செஸ்டர் யுனைடட் கழகம்(Manchester United) ஆறு புள்ளிகளுடன் தற்போது புள்ளிப் பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.

அக்கழகம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கடந்த வருடம் முதல் இக்கழகத்தின் முக்கிய ஒரு வீரராக கருதப்பட்டு வரும் ஸல்டன் இப்ராஹிமொவிக் (Zlatan Ibrahimovic) இப்போட்டிகளில் விளையாடாத நிலையிலே இவ்வெற்றியை இவர்கள் பதிவு செய்தனர். அவருக்குப் பதிலாக பெல்ஜிய வீரர் ரொமேலோ லுகாகு களமிறங்கினார். ரொமேலோ லுகாகு மற்றும் சேர்பிய வீரர் நிமேந்ஜா மெடிக்(Nemanja Matic) ஆகியோர் இப்பருவகாலம் முதல் மென்செஸ்டர் யுனைடட் கழகத்திற்காக விளையாட கைச்சாத்திட்டுள்ளனர்.

டேவிட் வேக்னரின் பயிற்றுவிப்பின் கீழ் இயங்கும் ஹடஸ்பிய்ல்ட் டவுன்(Huddersfield town) கழகமும் ஆறு புள்ளிகளுடன் உள்ளது. எனினும் மென்செஸ்டர் யுனைடட் கழகத்தை விட மொத்தமாக நான்கு கோல்களை குறைவாகப் பெற்றதால் புள்ளிப் பட்டியலில் அவ்வணி இரண்டாவது இடத்திலுள்ளது.

அதேபோன்று, மூன்றாவது இடத்தை வெஸ்ட்ஹாம் புரும்வீச் அல்பியன் கழகம் பெற்றுள்ளது. அவ்வணி பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று ஆறு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலான கோல்களை பெற்றதன் மூலம் மூன்றாவது இடத்திலுள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் இக்கழகத்தின் பயிற்றுவிப்பாளராக வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்தோனி ரிசர்ட் புலிஸ்(Anthony Richard Pulis) கடமையாற்றி வருகிறார்.

கடந்த வருடம் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய செல்ஸி கழகமானது டோடன்கம் ஹோட்ஸ்பேர்(Tottenham Hotspur) கழகத்துடன் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் பெர்ன்டன் (Brighton) கழகத்துடன் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இக்கழகத்தை வலுவூட்டுவதற்காக ஸ்பெய்ன் வீரர் அல்வாரோ மொரோடா இப்பருவகாலம் முதல் விளையாடி வருகிறார்.

அன்டோனியோ கொன்டேயின் பயிற்றுவிப்பின் கீழ் இயங்கும் செல்ஸி கழகமானது புள்ளிப் பட்டியலில் மூன்று புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளது. ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேர்ஜன் கொலப் பயிற்றுவிக்கும் லீவர்பூல் கழகமானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த ஒரு போட்டியின் மூலமும் (Watford 3 – Liverpool 3) வெற்றிபெற்ற ஒரு போட்டியின் மூலமும்(Liverpool 1 – C.Palace 0) ஆறாவது இடத்திலுள்ளது. இவ்வருடம் முதல் இவ்வணியின் புது முக வீரராக எகிப்து வீரர் ஸலாஹ் விளையாடி வருகின்றார்.

சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறும் இங்கிலாந்து ஜாம்பவான் ரூனி

இங்கிலாந்து தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் பெற்ற வீரரான வேய்ன் ரூனி சர்வதேச …

பெப் கார்டீயோலாவின்(Pep Guardolia) மென்செஸ்டர் சிடி(Manchester City) கழகம் நான்கு புள்ளிகளினால் புள்ளிப் பட்டியலில் ஜந்தாவது இடத்திலுள்ளது. பரய்டன்(Brighton) கழகத்துடன் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியதுடன், எவர்டன் கழகத்துடன் 1-1 என போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது.

பென்ஜமீன் மென்டீ, பெர்னாடோ சில்வா மற்றும் டனிலோ போன்ற பிரபலங்கள் இவ்வருடம் மென்செஸ்டர் சிடியுடன் இணைத்துள்ளனர். மென்செஸ்டர் சிடி கழகமானது கடந்த வருடம் மூன்றாவது இடத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

புள்ளிப் பட்டியலில் 11வது இடத்திலுள்ள ஆர்ஸனல் அணி, செஸ்டர் சிடியுடன் வெற்றி பெற்றாலும் அதிக கோல்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்த காரணத்தாலும், ஸ்டோக் சிடியுடனான போட்டியில் தோல்வியுற்றதாலும், புள்ளிப் பட்டியலில் தற்போது சற்று பின்னிலை அடைந்துள்ளது.

ஆர்ஸனல் அணி கடந்த வருடம் 75 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் காணப்பட்டது. ஆர்ஸன் வென்கர் கடந்த 21 வருடங்களாக இக் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்றமை சிறப்பம்சமாகும்.

மேலும், பிரபல வீரர் வெய்ன் ரூனி புதிதாக இணைந்துள்ள எவர்டன் கழகம் 8வது இடத்தையும், லெஸ்டர் சிடி 9வது இடத்தையும், டோடன்கம் ஹொட்ஸ்பர் 10வது இடத்தையும் தக்க வைத்துக்கொண்டுள்ளன.