தமிழ் யூனியன், SSC, NCC அணிகள் ஸ்திரமான நிலையில்

348

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடத்தும் பிரீமியர் லீக் தொடரின் ஐந்து போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் இன்று (15) நடைபெற்றன.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC

டிலேஷ் குணரத்னவின் சிறப்பான பந்துவீச்சு மூலம் சிலாபம் மேரியன்ஸ் அணியை 193 ஓட்டங்களுக்கு சுருட்டிய NCC அணி இரண்டாவது இன்னிங்ஸில் 245 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

>>சங்கீத் கூரேயின் சதத்தோடு வலுப்பெற்றுள்ள கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்சுக்கு 321 ஓட்டங்களை குவித்த NCC அணிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிலேஷ் குணவர்தன 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடும் NCC அணி ஒரு 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 321 (86.4) – பத்தும் நிஸ்ஸங்க 74, லஹிரு உதான 66, சதுரங்க டி சில்வா 48, சச்சின்த பீரிஸ் 29, சகர் பரேஷ் 4/74, எச்.ஆர்.சி. டில்ஷான் 4/88

சிலாபம் மேரியன்ஸ் (முதல் இன்னிங்ஸ்) – 193 (55) – ஹர்ஷ குரே 48, நிசல் பிரான்சிஸ்கோ 28, ஓஷத பெர்னாண்டோ 26, டிலேஷ் குணரத்ன 5/52, சதுரங்க டி சில்வா 2/53, சச்சிந்த பீரிஸ் 2/26

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 117/2 (22) – லஹிரு உதார 78*, பதும் நிஸ்ஸங்க 27, எச்.ஆர்.சி. டில்ஷான் 2/42

        

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC

கோல்ட்ஸ் கழகம் முதல் இன்னிங்ஸில் பெற்ற 365 ஓட்டங்களுக்கு SSC அணி சிறப்பாக பதில்கொடுத்து வருகிறது. தனது சொந்த மைதானத்தில் ஆடும் SSC அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களை பெற்று ஸ்திரமான நிலையில் உள்ளது. எனினும் SSC அணி 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க தொடர்ந்து 142 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 365 (108.1) – சங்கீத் குரே 119, ஹஷான் துமிந்து 119, பிரியமால் பெரேரா 51, கவிஷ்க அஞ்சுல 34, சச்சித்ர சேனநாயக்க 7/88, தரிந்து ரத்னாயக்க 3/99

SSC (முதல் இன்னிங்ஸ்) – 223/6 (62) – கௌஷால் சில்வா 45, கிரிஷான் சஞ்சுல 22, கவிந்து குலசேகர 43, சாமர கபுகெதர 57*, சச்சித்ர சேனநாயக்க 25*, மஹேஷ் தீக்ஷன 4/54

>>வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கை வசம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

லஹிரு மிலந்த மற்றும் சித்தார கிம்ஹானின் துடுப்பாட்டத்தின் மூலம் இராணுப்படை கழகம் பெற்ற இமாலய ஓட்டங்களுக்கு தமிழ் யூனியன் அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பதிலெடுத்தாடி வருகிறது.

கொழும்பு, பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் இராணுவப்படை தனது முதல் இன்னிங்சுக்கு 386 ஓட்டங்களை குவித்தது. இந்நிலையிலயில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தமிழ் யூனியன் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களை பெற்றுள்ளது. லஹிரு மிலந்த 103 ஓட்டங்களை பெற்றதோடு சித்தார கிம்ஹான் 93 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 386 (128) – சஞ்சிக்க ரித்ம 64, யசோத மெண்டிஸ் 55, அஷான் ரன்திக்க 53, துஷான் விமுக்தி 50, டில்ஷான் டி சொய்சா 51, லக்ஷித்த மதூஷ 36, சச்சித்ர சேரசிங்க 2/65, லஹிரு மிலன்த 4/33, சதீஷ் பதிரங்க 2/75

தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 209/2 (50) – லஹிரு மிலந்த 103, சிதார கிம்ஹான் 93, லக்ஷான் மதுஷ்க 2/54

கொழும்பு கிரக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்சுக்காக 383 ஓட்டங்களை பெற்ற நிலையில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்ஸில் ஸ்திரமாக துடுப்பாடி வருகிறது.

>>இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட மெதிவ்ஸ், திமுத் மற்றும் டிக்வெல்ல

நிதானமாக ஆடிவரும் நீர்கொழும்பு கிரக்கெட் கழகம் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது தனது முதல் இன்னிங்ஸுக்காக 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களை பெற்றுள்ளது. அஷேன் சில்வா 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கது உள்ளார்.  

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 383 (100.3) – மினோத் பானுக்க 88, லஹிரு மதுஷங்க 72, அஷான் பிரியன்சன் 53, ரொன் சந்திரகுப்தா 45, மனெல்கர் டி சில்வா 33, ரொஷேன் பெர்னாண்டோ 4/66, நிலங்க சதகன் 3/66

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 160/3 (70) – டிலசிறி லொகுபண்டார 54, அஷேன் சில்வா 80*, லஹிரு கமகே 2/18

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழம்

சுபேஷல ஜயதிலக்கவின் சதத்தின் உதவியோடு சோனகர் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் ரகாம கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.

சோனகர் விளையாட்டுக் கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சோனகர் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்சுக்காக 337 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ராகம் கிரிக்கெட் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களை பெற்றுள்ளது. சுபேஷல ஜயதிலக்க 114 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 337 (84.2) – சரித்த குமாரசிங்க 103, இரோஷ் சமரசூரிய 60, அதீஷ திலஞ்சன 40, ஷிரான் பெர்னாண்டோ 40, அமில அபொன்சோ 3/117, இஷான் ஜனரத்ன 2/54, மொஹமட் அலி 2/73, கல்ஹார செனரத்ன 2/49

ராகம கிரிக்கெட் கழக – 338/6 (90) – தினெத் திமோத்ய 45, சமிந்து பெர்னாண்டோ 42, சுபேஷல ஜயதிலக்க 114, அக்ஷு பெர்னாண்டோ 35, இஷான் ஜயரத்ன 52*, மலித் டி சில்வா 2/108

ஐந்து போட்டிகளினதும் மூன்றாவதும் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<