கௌஷால் சில்வா, கபுகெதர ஆகியோரின் சதத்தால் SSC அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு

109

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் நான்கு சுப்பர் 8 போட்டிகளின் இரண்டாம் நான் ஆட்டம் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது. அதேபோன்று மூன்று பிளேட் சம்பியன்சிப் போட்டிகளும் ஆரம்பமாகின.

SSC எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

SSC அணி முதல் இன்னிங்ஸில் 413 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபை அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க போராடுகிறது.

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த SSC அணி சார்பில் சர்வதேச அனுபவம் பெற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா (120) மற்றும் மத்திய வரிசையில் சாமர கபுகெதர (109) சதம்பெற்றனர்.

ஓஷத பெர்னாண்டோ, சச்சித்ர சேரசிங்க ஆகியோரின் சதங்களால் சிலாபம் மேரியன்ஸ் ஆதிக்கம்

சிறப்பாக பந்துவீசி வரும் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் சானக்க கோமசாரு 4 விக்கெட்டுகளை பதம்பார்த்து தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் இரண்டாவது (44 விக்கெட்டுகள்) இடத்தில் நீடிக்கிறார்.

முதல் இன்னிங்சில் 248 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த துறைமுக அதிகாரசபை அணி 78 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 165 (44.2) – கிஹான் ரூபசிங்க 36, யொஹான் டி சில்வா 24, யஷோத லங்கா 21, தசுன் ஷானக்க 3/26, ஜெப்ரி வென்டர்சே 3/28, சசித்ர சேனநாயக்க 3/40

SSC (முதல் இன்னிங்ஸ்) – 413 (104) – கௌஷால் சில்வா 120, சாமர கபுகெதர 109, கவிந்து குலசேகர 78, மிலிந்த சிறிவர்தன 49, மினோத் பானுக்க 20, சானக்க கோமசாரு 4/119, அகலங்க கனேகம 3/99

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 78/3 (20) – யசோத லங்கா 41*


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்       

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தை 236 ஓட்டங்களுக்கு சுருட்டிய சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 165 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த சிலாபம் மேரியன்ஸ் கழகம் 401 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் அந்த அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிலாபம் மேரியன்ஸ் அணித்தலைவர் மலிந்த புஷ்பகுமார மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரில் மொத்தம் 47 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 401 (109.2) – ஓஷத பெர்னாண்டோ 112, சச்சித்ர சேரசிங்க 109, அஷேன் சில்வா 47, திக்ஷில டி சில்வா 45, சாலிய சமன் 5/76  

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 236 (65.5) – கமிந்து கனிஷ்க 43, ஹர்ஷ குரே 41, அசித்த பெர்னாண்டோ 5/47, மலிந்த புஷ்பகுமார 3/71


BRC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி வரும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், கோல்ட்ஸ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற போராடி வருகிறது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் BRC அணி தனது முதல் இன்னிங்சில் 310 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றுள்ளது.   

பின்வரிசை வீரர் பிரியமால் பெரேரா 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 310 (90.2) – சஷின் டில்ரங்க 124, ஹஷேன் ராமனாயக்க 66, ஹர்ஷ விதான 41, நிசல தாரக்க 6/71, பிரபாத் ஜயசூரிய 2/62

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 209/6 (86) – பிரியமால் பெரேரா 73*, அஞ்செலோ ஜயசிங்க 37, நிசல தாரக்க 30*, விஷாட் ரந்திக்க 22, நிரஞ்சன வன்னியாரச்சி 2/27, ஹஷேன் ராமனாயக்க 2/36, சுராஜ் ரன்திவ் 2/36


NCC எதிர் ராகம கிரிக்கெட் கழகம்   

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ராகம கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் 79 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு

NCC அணி முதல் இன்னிங்சில் 247 ஓட்டங்களையே பெற்ற நிலையில் ராகம கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த அணி 79 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 247 (76.1) – சதுரங்க டி சில்வா 90, சாமிக்க கருணாரத்ன 32, பர்வீஸ் மஹ்ரூப் 24, சந்துன் வீரக்கொடி 24, தரிந்து கௌஷால் 23*, இசுரு ஜயரத்ன 4/46, அமில அபொன்சோ 3/72, ஜனித் லியனகே 2/41

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 326/9 (101) – ஜனித் லியனகே 69, உதார ஜயசுந்தர 57, லஹிரு திரிமான்ன 56, சமீர டி சொய்சா 39, அக்ஷசு பெர்னாண்டோ 29, ஷெஹான் பெர்னாண்டோ 23, சாமிக்க கருணாரத்ன 4/76   

நான்கு போட்டிகளினதும் மூன்றாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.


பிளேட் சம்பியன்சிப் போட்டிகள்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 163 ஓட்டங்களுக்கு சுருண்ட ப்ளூம்பீல்ட் அணி பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இராணுவப்படை அணியின் துஷான் விமுக்தி 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் முதல் இன்னிங்சை ஆரம்பித்த இராணுவப்படை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்   

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 163 (38.3) – அதீஷ நாணயக்கார 35, பிரமுத் ஹெட்டிவத்த 33, ரமேஷ் மெண்டிஸ் 24, துஷான் விமுக்தி 6/77

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 153/8 (49) – டில்ஷான் டி சொய்சா 35, லியோ பிரான்சிஸ்கோ 31, அஷேன் ரந்திக்க 30, அஜந்த மெண்டிஸ் 24*, மலிந்த டி சில்வா 3/66, ரமேஷ் மெண்டிஸ் 2/23, கசுன் ராஜித 2/30   


கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரொன் சந்திரகுப்தாவின் அபார சதத்தின் மூலம் பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

கொழும்பு ப்ளூம்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது கொழும்பு கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 361 ஓட்டங்களை பெற்றுள்ளது. ரொன் சந்திரகுப்தா 130 ஓட்டங்களை குவித்தார். அதேபோன்று மாதவ வர்ணபுர 95 ஓட்டங்களுடன் தனது 10ஆவது முதல்தர சதத்தை நெருங்கியுள்ளார்.

இளையோர் உலகக் கிண்ண பிளேட் இறுதிப்போட்டியில் இலங்கை

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 361/4 (90) – ரொன் சந்திரகுப்தா 130, மாதவ வர்ணபுர 95*, அஷான் பிரியஞ்சன் 66, லசித் அபேரத்ன 41*, மதுர லக்மால் 2/64


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

கொழும்பு BRC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 260 ஓட்டங்களைப் பெற்ற சோனகர் விளையாட்டுக் கழகம் தமிழ் யூனியன் அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து வருகிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது தமிழ் யூனியன் அணி 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 260 (67.4) – ஷானுக்க துலாஜ் 82, இரோஷ் சமரசூரிய 44, பபசர வதுகே 40, பிரமோத் மதுஷான் 4/53, ஜீவன் மெண்டிஸ் 4/97

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 67/4 (17) – சிதார கிம்ஹான் 22, ஷிரான் பெர்னாண்டோ 3/34

மூன்று போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.