நான்கு நாள் போட்டியை இரண்டு நாட்களில் வென்ற BRC

346
Image Courtesy - AP

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் கடைசி வாரத்தின் நான்கு சுப்பர் 8 போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (16) நடைபெற்றது.

 BRC எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ராகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான நான்கு நாள் போட்டியை இரண்டு நாட்களில் முடித்துக் கொண்ட BRC அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இதன்படி இம்முறை பிரீமியர் லீக் போட்டிகளில் BRC அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் மூன்று போட்டிகள் நடைபெறுவதால் சுப்பர் 8 புள்ளி பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதில் போட்டியின் இரண்டாவது நாளில் ராகம கிரிக்கெட் கழகம் நிர்ணயித்த 119 ஓட்ட வெற்றி இலக்கை BRC அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது. இந்த போட்டியில் தோற்ற ராகம கிரிக்கெட் கழகம் சுப்பர் 8 புள்ளி பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது.

அசத்தல் ஆரம்பத்தின் பின்னர் அதிர்ச்சியடைந்த சிலாபம் மேரியன்ஸ்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான…

பங்களாதேஷுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அபார துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய ரொஷேன் சில்வா தனது ராகம கிரிக்கெட் கழகத்திற்கு கைகொடுக்கத் தவறினார். அவர் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 8 ஓட்டங்களையே பெற்றதோடு இரண்டாவது இன்னிங்ஸில் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 129 (47.5) – அக்சு பெர்னாண்டோ 41, லஹிரு மிலன்த 23, ஹிமேஷ் ராமநாயக்க 5/29, சுராஜ் ரந்திவ் 2/27

BRC (முதல் இன்னிங்ஸ்) – 149 (57.4) – ஹஷேன் ராமநாயக்க 38, லசித் லக்ஷான் 35, ஷஷின் டில்ரங்க 20, இஷான் ஜயரத்ன 4/54, நிஷான் பீரிஸ் 2/06, சஹன் நாணக்கார 2/15, உதித் மதுஷான் 2/48

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 138 (41.3) – லஹிரு மிலன்த 37, ரொஷேன் சில்வா 34, சுராஜ் ரந்திவ் 5/08, திலகரத்ன சம்பத் 2/48

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 119/2 (19.5) – திலகரத்ன சம்பத் 50*, ரமேஷ் புத்திக்க 34*, லசித் லக்ஷான் 23

முடிவு BRC அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC

NCC அணி தனது முதல் இன்னிங்ஸில் 618 என்ற இமாலய ஓட்டங்களை பெற்ற நிலையில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க போராட வேண்டி ஏற்பட்டுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த NCC அணி சார்பில் மேலும் இரு வீரர்கள் சதம் பெற்றனர். மஹேல உடவத்த 106 ஓட்டங்களை பெற்றதோடு, அணித் தலைவர் அஞ்செலோ பெரேரா ஆட்டமிழக்காது 129 ஓட்டங்களை குவித்தார்.

முன்னதாக முதல் விக்கெட்டுக்கு 271 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்ற லஹிரு உதார (157) மற்றும் பானுக்க ராஜபக்ஷ (134) ஆகியோர் சதம் குவித்தனர்.

இதன்படி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 491 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கோல்ட்ஸ் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 29 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 127 (35.1) – நிசல தாரக்க 25, கவீஷ்க அஞ்சுல 20, லசித் அம்புல்தெனிய 5/33, லஹிரு குமார 4/26

BRC (முதல் இன்னிங்ஸ்) – 618/9d (121.4) – லஹிரு உதார 157, பானுக்க ராஜபக்ஷ 134, அஞ்செலோ பெரேரா 129*, மஹேல உடவத்த 106, சாமிக்க கருணாரத்ன 54, பிரபாத் ஜயசூரிய 4/224, நிசல தாரக்க 3/100, ஹஷான் துமிந்து 2/39

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 29/2 (12)

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC

சம்பியன் அணியை தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டியில் முதல் இன்னிங்சில் SSC அணியை 232 ஓட்டங்களுக்கு சுருட்டிய சிலாபம் மேரியன்ஸ் அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த SSC அணி முதல் நான்கு விக்கெட்டுகளையும் வெறும் 44 ஓட்டங்களுக்கே பறிகொடுத்தது. எனினும் மத்திய வரிசையில் சாமர கப்புகெதர (63) மற்றும் ஷம்மு அஷான் (72) ஆகியோர் கைகொடுத்தனர்.

சகீபைப் போல மெதிவ்ஸ் இல்லாததும் எமக்கு இழப்புதான் – தனுஷ்க குணதிலக

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நிறைவடைந்திருக்கும்…

இதில் சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சதம் பெற்ற ஷெஹான் ஜயசூரிய பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு திக்ஷில டி சில்வா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் 140 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற சிலாபம் மேரியன்ஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டை இழந்து 46 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 372 (103.5) – ஷெஹான் ஜயசூரிய 146, அஷேன் சில்வா 105, சச்சித்ர சேரசிங்க 30, ரசித் உபமால் 24, ருக்ஷான் ஷெஹான் 20*, அக்தாப் காதர் 4/79, சச்சித்ர சேனநாயக்க 4/103

SSC (முதல் இன்னிங்ஸ்) – 232 (66.2) – ஷம்மு அஷான் 72, சாமர கபுகெதர 63, கவிந்து குலசேகர 47, ஷெஹான் ஜயசூரிய 4/48, திக்ஷில டி சில்வா 3/27, மலிந்த புஷ்பகுமார 2/80

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 46/1 (16) – ஷெஹான் ஜயசூரிய 29*


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கு எதிராக செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இன்னிங்சில் 104 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

செரசன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ஓட்டங்களை பெற்ற நிலையில் துறைமுக அதிகார சபை அணி இங்கிலாந்து வீரர் நிக் கொம்ப்டனின் (103) சதத்தின் உதவியோடு 220 ஓட்டங்களை பெற்றது. சிறப்பாக பந்து வீசிய மொஹமட் டில்ஷாட் மற்றும் ரனித்த லியனாரச்சி தலா 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கு நேபாளம், ஐக்கிய அரபு இராட்சியம் தகுதி

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்… சிறப்பாக பந்துவீசிய நேபாளத்தின்…

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 13 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 311 (111) – அஷேன் பண்டார 87*, மின்ஹாஜ் ஜலீல் 56, அண்டி சொலமன்ஸ் 48, ஹர்ஷ குரே 41, கமிந்து கனிஷ்க 35, தனுக்க தபரே 20, சரித் ஜயம்பதி 3/43, சானக்க கோமசரு 3/96, மதுக லியனபதிரணகே 2/50

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 220 (58.2) – நிக் கொம்ப்டன் 103, கிஹான் ரூபசிங்க 38, இஷான் ரங்கன 34, மொஹமட் டில்ஷான் 4/51, ரனித் லியனாரச்சி 4/53

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 13/2 (5) – சரித்த ஜயம்பதி 2/09

மூன்று போட்டிகளதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.