ThePapare.com: பிரீமியர் லீக் 6ஆவது வாரத்தின் சிறந்த வீரர் யார்?

100

இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின் ஆறாவது வாரத்தின் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ThePapare.com ரசிகர்களான உங்களுக்கு வாரத்தின் சிறந்த வீரருக்காக வாக்களிக்க முடியும்.

ரசிகர்களாகிய உங்களுக்கு வாரத்தின் சிறந்த வீரருக்கு கீழே வாக்களிக்க முடியும்! (வாக்கு முடிவுத் திகதி செப்டெம்பர் 28)

[socialpoll id=”2520866″]

  • ஆஷ்லி பார்ன் (பர்ன்லீ)

போர்ன்மௌத் அணிக்கு எதிராக 4-0 என வெற்றி பெற்ற பர்ன்லீ வெற்றிப்  பாதைக்கு நுழைந்துள்ளது. அடம் வோக்ஸுக்கு மாற்று வீரராக வந்த ஆஷ்லி பார்ன் புகுத்திய கடைசி இரண்டு கோல்களும் அபாரமாக இருந்தன. இந்த வெற்றியின் மூலம் பர்ன்லீ பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் கண்டது.   

  • ரியாத் மஹ்ரேஸ் (மன்செஸ்டர் சிட்டி)

காடிப் சிட்டிக்கு எதிராக 5-0 என வெற்றி பெற்ற மன்செஸ்டர் சிட்டிக்காக மற்றொரு மாற்று வீரராக  வந்த ரியாஸ் மஹ்ரஸ் 2 அதிர்ச்சி கோல்களை பெற்றார். அல்ஜீரியாவைச் சேர்ந்த அந்த வீரர் எதிர்காலத்தில் எதிரணிகளுக்கு கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்த போட்டியில் செர்கியோ அகுவேரா முதல் கோலை போட்டபோது அது மன்செஸ்டர் சிட்டிக்காக அவர் பெறும் 300 ஆவது கோலாக இருந்தது.

  • ஷெர்டன் ஷகிரி (லிவர்பூல்)

சௌதம்ப்டன் அணியை 3-0 என வென்று இம்முறை பிரீமியர் லீக்கில் லிவர்பூல் தொடர்ந்து ஆறாவது வெற்றியை பெற்றதோடு புள்ளிப் பட்டியலிலும் செல்சியை பின்தள்ளி முதலிடத்திற்கு பாய்ச்சல் கண்டது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் மொஹமட் சலாஹ் பெற்ற கோல் கடந்த ஓகஸ்ட் 25 க்கு பின்னர் அவர் பெறும் முதல் கோலாக இருந்தது. இதில் ஷகிரி போட்ட இரண்டு கோல்களும் லிவர்பூலின் வெற்றியை உறுதி செய்து முன்னேற்றம் காண உதவியது.     

  • டன்னி ரோஸ் (டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்)

பிரைட்டனுக்கு எதிராக சிறப்பான வெற்றியின் மூலம் ஹொட்ஸ்புர் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. இடது பின்களத்தில் ஒரு அரணாக செயற்பட்ட டன்னி ரோஸ் முன்களத்திலும் தனது பங்களிப்பை செய்தார். வழக்கம் போல் கேன்ஸ் பொனால்டியை கோலாக மாற்றியதோடு எரிக் லாமெல்லா ஹொட்ஸ்புருக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.  

  • அலெக்சாண்ட்ரே லகசெட் (ஆர்சனல்)

எமிரேட்ஸ் அரங்கில் எவர்டன் அணியை 2-0 என வீழ்த்தியதன் மூலம் ஆர்சனலின் வெற்றிப் படலம் தொடர்கிறது. எதிரணியின் பெனால்டி எல்லையின் மேல் இடது மூலைக்கு ஓடியபடியே பந்தை பெற்று லகசெட் முதல் கோலை புகுத்தினார். பீர்ரே-எமரிக் அவுபமயாங் ‘ஓப்சைட்’ இடத்தில் இருந்தபோதும் நடுவர் பார்க்காத நிலையில் ஆர்சனலுக்கு இரண்டாவது கோலை பெற்றார்.    

ThePapare.com இன் பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர் – ரியாத் மஹ்ரேஸ்