ரெட் சன் – நியு ஸ்டார் இடையிலான மோதல் சமநிலையில் நிறைவு

227

நடைபெற்றுக்கொண்டுள்ள இப்பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான சுற்றுப் போட்டியில் கம்பளை ரெட் சன் மற்றும் பாணதுறை நியு ஸ்டார் கால்பந்து கழகங்களுக்கிடையிலான போட்டி எந்தவித கோலும் பெறாத நிலையில் சமநிலையில் நிறைவுற்றது.

செரண்டிப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்த ரட்னம்

கம்பளை வீகுலுவத்தை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை ஆரம்பித்த ரெட் சன் அணி போட்டியின் முதற்கட்டத்தில் எதிரணியைவிட சற்று ஆதிக்கம் செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.

போட்டி ஆரம்பித்த முதல் இரண்டு நிமிடங்களிலேயே ரெட் சன் தனது முதல் கோல் வாய்ப்பை பெற்றது. இதன்போது மனோஜ் குமார உள்ளனுப்பிய பந்தை மைக்கல் பெற்று, கோலை நோக்கி உதைந்தபோதும் பந்தானது கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.

அதனை தொடர்ந்து போட்டியின் 10ஆம் நிமிடத்தில், நியு ஸ்டார் அணியின் முன்கள வீரரான ஸமீல் தாலீப் மூலம் கோலை நோக்கி எடுக்கப்பட்ட முயற்சியை கோல் காப்பாளர் சிறந்த முறையில் தடுத்தார்.

மீண்டும் எதிரணியின் வலதுபக்க பெனால்டி எல்லைக்கு அருகில் நியு ஸ்டார் அணிக்கு கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற ஸமீல் தாலீப் மூலம், பந்தை கோல் காப்பாளரையும் தாண்டி கோலினுள் செலுத்த முடியவில்லை.

தொடர்ந்து போட்டியில் நியு ஸ்டார் அணி ஆதிக்கம் செலுத்திய வேளை, ரெட் சன் அணி வீரர்களால் போட்டியின் 20ஆம் நிமிடத்தில் அதிரடியானதொரு முயற்சி எடுக்கப்பட்டது. அவ்வணியின் கிம்ஹான அதனாயக மற்றும் பண்டார ரத்னாயக ஆகியோரிடையே நடைபெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின்னர், கிம்ஹான அதனாயக உள்ளனுப்பிய பந்தை நியு ஸ்டார் அணியின் பின்கள வீரர்கள் தடுத்தாடும் போது விடப்பட்ட தவறினால், முன்கள வீரரான மைக்கலை பந்து வந்தடைந்தது. இதன்போது மைக்கல் மூலம் கோலை நோக்கி எடுக்கப்பட்ட முயற்சியை கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்தார்.

2018 FIFA உலகக் கிண்ணத்திலிருந்து ஸ்பெயின் நீக்கப்படும் அபாயம்

பின்னர் நீண்ட நேரமாக இரு அணிகளிற்கும் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் எதிரணியின் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்ட வண்ணமேயிருந்தன. எனினும் போட்டியின் 43ஆம் நிமிடத்தில் நியு ஸ்டார் அணிக்கு கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பின் போது உள்ளனுப்பபட்ட பந்தை அஜ்மீர் தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் பந்து கோல் கம்பத்தின் இடது பக்க மூலையை அண்மித்து வெளியேறியது. அத்துடன் முதல்பாதி நிறைவுற்றது.  

முதல் பாதி: நியு ஸ்டார் 0 – 0 ரெட் சன்

இரண்டாம் பாதியை ஆரம்பித்த நியு ஸ்டார் அணி, குறித்த பாதியில் அதிகமான வாய்ப்புக்களை பெற்றது. போட்டி ஆரம்பித்து முதல் 6 நிமிடங்களிலே கோல் காப்பாளர் மூலம் உதையப்பட்ட பந்தை ரெட் சன் அணியின் பின்கள வீரர்கள் தடுத்தாடுவதில் விட்ட தவறால், ரெட் சன் அணியின் பெனால்டி எல்லையிலிருந்து அஜ்மீர் தான் பெற்ற பந்தை ஸமீல் தாலீபிற்கு வழங்கினார். எதிரணியின் பின்கள வீரர்கள் மற்றுமின்றி கோல் காப்பாளரையும் தாண்டி தான் பெற்ற பந்தை கோலை நோக்கி ஸமீல் தாலீப் உதைந்ந போதும், சிறப்பாக செயற்பட்ட கோல் காப்பாளர் பந்தை தட்டி விட்டார்.  

மீண்டும் 54ஆவது நிமிடத்தில் நியு ஸ்டார் அணியின் முன்களத்தில் நிகழ்ந்த சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின், ரிஸ்லி பெனால்டி எல்லையிலிருந்து தனது அணியின் சகவீரரான ஸமீல் தாலீபை நோக்கி வழங்கிய பந்தை, எதிரணி வீரரின் எல்லைக்குள் பந்து வந்தடையும் முன்னர் ரெட் சன் கோல் காப்பாளர் சிறந்த முறையில் பந்தை பாய்ந்து பற்றிக் கொண்டார்.

போட்டியின் 68ஆம் நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து நியு ஸ்டார் வீரர் பரூஸ் மூலம் எதிரணியின் பின்கள வீரர்களையும் தாண்டி பெனால்டி எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை பெற்ற அஜ்மீர், பெனால்டி எல்லையிலிருந்து கோலின் வலதுபக்க மூலையை நோக்கி உதைந்த பந்தானது, கோல் கம்பங்களிற்கு மிக அருகாமையால் வெளியே சென்றது.

இம்முறை டயலொக் சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு?

ரெட் சன் அணியானது இரண்டாம் பாதியின் முதலாவது முயற்சியை போட்டியின் 77ஆம் நிமிடத்தில் மேற்கொண்டது. மனோஜ் குமார மூலம் உள்ளனுப்பபட்ட பந்தை பெற்ற பொன்னபெரும, பாணதுறை தரப்பின் பின் களத்தையும் தாண்டி கோலை நோக்கி உதைந்த பந்தானது, போதிய வேகம் காணப்படாமையினால் கோல் காப்பாளரால் இலகுவாக கைப்பற்றப்பட்டது.

நியு ஸ்டார் அணியின் முன்கள வீரரான ஸமீல் தாலீபிற்கு போட்டியின் 80ஆம் நிமிடத்தில் தொடராக மீண்டும் கிடைக்கப்பெற்ற வாய்ப்பின் போது, பெனால்டி எல்லையிலிருந்த பின்கள வீரர்களின் தடைகளையும் தாண்டி கோலை நோக்கி எடுக்கப்பட்ட முயற்சியில், உதையப்பட்ட பந்தில் போதிய வேகம் காணப்படாமையினால் கோல் பெற முடியவில்லை.

இரண்டாம் பாதியின் இறுதி முயற்சியை மேற்கொண்ட ரெட் சன் அணி வீரரான மனோஜ் குமார, போட்டியின் 89ஆம் நிமிடத்தில் வலதுபக்க பெனால்டி எல்லையில் கிடைக்கப்பெற்ற ப்ரீகிக் வாய்ப்பை கோலாக்க எடுக்கப்பட்ட முயற்சியும் பலனளிக்கவில்லை.

இரு அணிகளும் எவ்வித கோல்களும் பெறாத நிலைமையில் இரண்டாம் பாதியும் நிறைவுற ஆட்டம் சமநிலையடைந்தது.

முழு நேரம்: நியு ஸ்டார் 0 – 0 ரெட் சன்

மஞ்சள் அட்டை

நியு ஸ்டார் :   பாஸித் ’67’