இம்முறை தேசிய விளையாட்டு பெருவிழா பொலன்னறுவையில்

150

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 44ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடரில் இலங்கைக்கு ஒன்பதாம் இடம்

ஈரானின் தெப்ரிஸ் நகரில் நடைபெற்ற 18…

கடந்த வருடம் மாத்தறை, கொட்டவில மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வின் போது இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் உள்ளிட்ட 33 விளையாட்டுக்களை சப்கரமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவிருந்த இரத்தினபுரி நகர சபை மைதானத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் சுவட்டு மைதானப் பணிகள் பூர்த்தியாகாத நிலையில், குறித்த போட்டிகளை சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் இறுதிக் கட்டப் போட்டிகளான மெய்வல்லுனர் உள்ளிட்ட ஒருசில முக்கிய போட்டிகளை பொலன்னறுவையில் நடத்துவதற்கு நேற்றுமுன்தினம் (17) விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிறகு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக கனிஷ்ட மெய்வல்லுனர் இறுதிப் போட்டியில் சோபிக்கத் தவறிய இலங்கை அஞ்சலோட்ட அணி

டென்மார்க்கின் தம்பரே நகரில்…

இதன்படி 2ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழா பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது. இறுதியாக, 2009ஆம் ஆண்டு இதே மைதானத்தில் தேசிய விளையாட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மகாவலி வலயத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக வருடா வருடம் இடம்பெற்று வருகின்ற மகாவலி விளையாட்டு விழா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளையாட்டு விழா என்பன கடந்த வருடம் பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெறவுள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நாள் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதுடன், இறுதி நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவின் 29 போட்டிகளுக்கான இறுதிக் கட்டப் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமாகின. இதில் பெரும்பாலான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், கரப்பந்தாட்டம், பளுதூக்கல், ஆணழகர் மற்றும் கபடி ஆகிய போட்டிகள் பொலன்னறுவை விளையாட்டுத் தொகுதியின் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளன.

33 விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெறவுள்ள இவ்வருடத்துக்கான இறுதிக்கட்ட தேசிய விளையாட்டு விழா போட்டிகளில் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநித்துவப்படுத்தி சுமார் 6,300 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக 504 வீரர்களும், 477 வீராங்கனைகளும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை மேல் மாகாணமும், 2ஆவது, 3ஆவது இடங்களை முறையே மத்திய மாகாணமும், வட மேல் மாகாணமும் பெற்றுக்கொண்டன. இதன்படி, இதுவரை நடைபெற்ற அனைத்து தேசிய விளையாட்டு விழாவிலும் சம்பியன் பட்டத்தை மேல் மாகாணம் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

>>காணொளிகளைப் பார்வையிட<<