2018 பிஃபா உலகக் கிண்ண வாய்ப்பை இழந்த பிரபலங்கள்

2327
Image Courtesy - Getty Images

இம்மாதம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள பிஃபா உலகக் கிண்ண போட்டிகளில் காயம் மற்றும் உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறாததன் காரணமாக விளையாடும் வாய்ப்புக்களை இழந்த உலகின் பிரபல வீரர்கள் பற்றி thepapare.com தனது அவதானத்தை செலுத்துகிறது.

  • கியன்லூகி புஃபன் (Gianluigi Buffon)

உலகக் கிண்ணத்திற்கான ஐரோப்பிய மண்டலத்தின் தகுதிகாண் போட்டிகளில் இத்தாலி அணி, சுவீடன் அணியுடனான ப்லே ஓஃப் (Playoff) போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.   இதனால் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இத்தாலி அணித்தலைவரும் கோல் காப்பாளருமான புஃபன் இழந்தார். 

நெய்மாரின் அபார கோலுடன் பிரேசில் அணிக்கு இலகு வெற்றி

காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய..

இந்த அதிர்ச்சி நிலைமையைத் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இவர் 2006 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • க்ரேத் பேல் (Gareth Bale)   

ரியல் மெட்ரிட் மற்றும் வேல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான க்ரேத் பேல் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் வேல்ஸ் அணி க்ரேத் பேலின் அபாரமான ஆட்டத்தின் மூலம் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பேல் இரண்டு கோல்கள் பெற்று ரியல் மெட்ரிட் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தமைக்காக அப்போட்டியில் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றிருந்தார். 

  • அலெக்சிஸ் சன்சேஸ் (Alexis Sánchez)                                   

சிலி மற்றும் மென்செஸ்டர் யுனைடட் அணிகளின் வீரரான இவரும் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் கோப்பா அமெரிக்க கிண்ணத்தை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சிலி அணி இம்முறை உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறத் தவறியதன் காரணமாக உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை அலெக்சிஸ் இழந்துள்ளார். 

  • டிமிட்ரி பயட் (Dimitri Payet)

பிரான்ஸ் அணியின் மத்தியகள வீரரான பயட், தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பிரான்ஸ் அணியின் இவ்வருட உலகக் கிண்ண குழாமில் இடம்பெறவில்லை. இவர் 2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தார். எனினும் அத்தொடரில் பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் அணியிடம் தோல்வியைடந்து இரண்டாம் இடத்தைப் பெற்றது. 

  • ரெனாட்டோ சன்சேஸ் (Renato Sanches)

போர்த்துக்கல் அணியின் இளம் வீரரும் 2016 ஆண்டு இடம்பெற்ற ஐரோப்பிய கிண்ண போட்டித்தொடரில் சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்றவருமான ரெனாட்டோ சன்சேஸ் இம்முறை உலகக் கிண்ண தொடருக்கான போர்த்துக்கல் குழாமில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இது அவருக்கு பெறும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய கிண்ண போட்டிகளின் பின்னர் ஜேர்மனியின் பயேர்ன் மியுனிச் கழகத்துடன் ஒப்பந்தமான இவர் தற்போது இங்கிலாந்தின் சுவன்ஸி சிட்டி கழகத்துக்கு விளையாடி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கழக மட்ட போட்டிகளில் சோபிக்கத் தவறியதன் காரணமாகவே அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

  • மரியோ கொட்சே (Mario Götze)

2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மரியோ கொட்சேயின் கோலின் மூலம் ஆர்ஜென்டீனா அணியை 1 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது ஜேர்மனி அணி. ஆனால், இம்முறை ஜேர்மனியின் உலகக் கிண்ண குழாமில் அவர் இடம் பெறாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

  • டெனி அல்வெஸ் (Dani Alves)

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான இவர் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடுவது சாத்தியமில்லை என பிரேசில் கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. உலகின் சிறந்த பின்கள வீரர்களில் ஒருவரான இவர் பிரான்ஸ் நாட்டின் பிரபல அணியான பரிஸ் செயிண்ட் ஜெர்மன் (PSG) அணிக்காக விளையாடி வருகிறார்.

ரியெல் மெட்ரிட்டுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த சிடான் திடீர் ராஜினாமா

ரியெல் மெட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது…

கடந்த கோப்பா டி பிரான்ஸ் இறுதிப் போட்டியில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து அவர் வெளியேறியதுடன், உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தையும் இழந்துள்ளார்.  

  • பீர்ரா எமரிக் ஔபமியங் (Pierre-Emerick Aubameyang)

ஆபிரிக்க நாடுகளுள் ஒன்றான காபொன் நாட்டின் தேசிய உதைப்பந்தாட்ட அணியின் தலைவரான இவர் தற்போது இங்கிலாந்தின் பிரபல கழகமான ஆர்சனல் அணியின் முன்கள வீரராவார். இவரது அணி ஆபிரிக்க கண்ட நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகளில் சோபிக்க தவறியதன் காரணமாக இம்முறை இவருக்கு உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் தனது தேசிய அணிக்காக அதிக கோல்கள் போட்ட வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

  • மௌரோ இகார்டி (Mauro Icardi)

ஆர்ஜென்டீனா அணியின் முன்கள வீரரான இவர் இத்தாலியின் இன்டர் மிலான் கழகத்துக்காக விளையாடி வருகிறார். இம்முறை ஆர்ஜென்டீனா அணியின் 35 பேர் கொண்ட உலகக் கிண்ண குழாமில் இடம்பெற்றிருந்த போதும் கடைசியாக வெளியிட்ட 23 பேர் கொண்ட குழாமில் அவர் இடம்பெறவில்லை. மேலும் இவர் இப்பருவகாலத்தில் இத்தாலியின் சியெரெ A (Serie A) தொடரில் 29 கோல்கள் பெற்று அதிக கோல்கள் போட்ட வீரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த நடப்புச் சம்பியன் ஜெர்மனி

பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு தயாராகி..

  • லேரோய் சேன் (Leroy Sané)

ஜேர்மனி அணியின் இளம் வீரர்களில் ஒருவரான 22 வயதுடைய சேன் இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிட்டி கழகத்துக்காக விளையாடி வருகிறார். இவர் இம்முறை ஜேர்மனி அணியின் உலகக் கிண்ண குழாமில் இடம்பெற்றிருந்த நிலையில் கடந்த காலங்களில் காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஜேர்மனி அணியின் தலைவரும் உலகின் தலைசிறந்த கோல் காப்பாளருமான மெனுவல் நியோர் அண்மையில் ஒஸ்ட்ரியா அணியுடன் நடந்த சினேகபூர்வ போட்டியில் விளையாடி தனது உடற் தகுதியை நிரூபித்ததன் மூலம், அவர் அணியில் சேர்க்கப்பட்டு சேன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<