மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய பயிற்சியாளராக பில் சிம்மோன்ஸ்

70
©IDI via Getty Images

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, மூன்று ஆண்டுகளின் பின்னர் மீண்டும் பில் சிம்மோன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   

கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பில் சிம்மோன்ஸ், புதிய பொறுப்பு மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படவிருக்கின்றார். 

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமாகும் இளம் வனிந்து ஹசரங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் கடந்தகால தொடர் ……….

மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பில் சிம்மோன்ஸ் மாத்திரமின்றி, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர்களான ப்ளோய்ட் ரெய்பர் மற்றும் டேஸ்மன்ட் ஹேய்னஸ் ஆகியோரும் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில், கடும் போட்டிக்கு மத்தியிலேயே பில் சிம்மோன்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மாறியிருக்கின்றார். 

கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட பில் சிம்மோன்ஸ், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினை முதல் தடவையாக கிரிக்கெட் உலகக் கிண்ணம் (2019) ஒன்றில் விளையாட வழிவகைகள் செய்ததோடு, 2019ஆம் ஆண்டின் கரீபியன் ப்ரீமியர் லீக் சம்பியனாக மாறிய பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும், பில் சிம்மோன்ஸ் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடமையாற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளராக பில் சிம்மோன்ஸ் நியமனம் செய்யப்பட்ட விடயம் தொடர்பில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் ரிக்கி ஸ்கிரிட் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தியா வசம்

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் ……..

”பில் சிம்மோன்ஸை நாம் (தலைமை பயிற்சியாளராக) எடுத்திருப்பது கடந்தகால தவறினை சரி செய்வதற்கு மாத்திரம் அல்ல. மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் சபை தற்போது சரியான பொறுப்பிற்கு சரியான நபரினை தெரிவு செய்திருக்கின்றது என நம்புகின்றேன். அதோடு, மேற்கிந்திய தீவுகள் அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு கடின முயற்சிகளை எமக்காக தந்திருந்த ப்ளொய்ட் ரெய்பரிற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.”

தலைமை பயிற்சியாளர் மாத்திரமின்றி, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தெரிவு செய்யும் குழாமும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவராக இனி வரும் காலங்களில் ரோஜர் ஹார்பர் செயற்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<