இளையோர் ஆசியக் கிண்ணத்தை இந்தியாவில் நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு

487

இம்முறை பெங்களூரில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை பொதுவான இடத்திற்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி, குறித்த தொடரை இலங்கை அல்லது பங்களாதேஷில் நடத்துவது தொடர்பிலான யோசனை ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக 2013ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு எதிராக அங்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதால் மும்பையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் அணியின் லீக் போட்டிகள் அனைத்தும் கட்டாக்கில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட்டிற்கு இந்திய அணியில் புதிய வீரர்

இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவின்திர ஜடேஜாவுக்கு சர்வதேச….

அதே வருடத்தில் நடைபெற்ற உலக ஹொக்கி லீக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்ற ஆர்பாட்டங்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஹொக்கி அணி வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து 2016இல் நடைபெற்ற உலக கனிஷ்ட ஹொக்கி தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக குறித்த தொடரில் பாகிஸ்தான் அணி பங்குபற்றவில்லை. இந்நிலையில் இவ்வருடம் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் தொடரில் ஏற்பட்ட விசா குறைபாடுகள் காரணமாகவும் பாகிஸ்தான் அணி பங்குபற்றவில்லை.

மறுமுனையில் .சி.சியின் போட்டி அட்டவணைப்படி 2014 முதல் 2023 வரையான காலப்பகுதியில் இரு நாடுகளும் 6 கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டும். ஆனால் பொதுவான இடத்தில் குறித்த தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வந்திருந்த போதிலும், இந்திய மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்குவதை புறக்கணித்து வந்தது. இது தொடர்பில் விரைவில் .சி.சியின் சர்ச்சைக் குழுவில் வழக்கு தொடரவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

இரு நாடுகளுக்கிடையிலான எல்லையில் நிலவுகின்ற பதட்ட நிலைமை மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக இந்தியாபாகிஸ்தானுக்கு இடையே 2007ஆம் ஆண்டு முதல் எந்தவொரு விளையாட்டிலும் நேரடி தொடர் நடத்தப்படவில்லை. குறிப்பாக 2012ஆம் ஆண்டிலிருந்து எந்தவொரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் இருக்கிறது. இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒரு பில்லியன் ரூபாய் பணத்தை இந்தியாவிடம் நஷ்டஈடாக கோரி சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளது.  

இந்நிலையில், 19 வயதிற்குபட்டோருக்கான ஆசியக் கிண்ண இளையோர் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்திய அணி தங்களுக்கு எதிராக விளையாட மறுக்கும் வேளையில், இந்த தொடரை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி வலியுறுத்த விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.  

இலங்கை – பாகிஸ்தான் மோதும் பகலிரவு டெஸ்ட் விரைவில்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டுபாயில் நடத்துவதற்கு..

இந்நிலையில், எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கெட் பேரவையின் வருடாந்த கூட்டத்தின்போது குறித்த தொடரை பொதுவான இடத்தில் நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனவே, குறித்த தொடரை இந்தியாவில் நடத்த முடியாது போனால் பெரும்பாலும் அது இலங்கையில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது. ஏனெனில், குறித்த காலப்பகுதியில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடர் நடைபெறவுள்ளதால் பங்களாதேஷில் இத்தொடரை நடாத்துவதில் சிக்கல் நிலவுகின்றது.

எனினும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கையிலேயே இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதியாக நடைபெற்றது. குறித்த தொடரில் இலங்கை அணியை வீழ்த்திய இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.