இந்தியாவின் கிரிக்கெட் போட்டிகளுக்காக 800 கோடி செலவு செய்யும் Paytm

204
BCCI

இந்தியாவை சேர்ந்த இலத்திரனியல் வர்த்தக நிறுவனமான Paytm, இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் இடம்பெறவுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்துக்கும் அனுசரணை  வழங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) தெரிவித்துள்ளது. 

அதன்படி இந்த அனுசரணை உரிமைக்காக Paytm நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு இந்திய நாணயப்படி 326.8 கோடி (இலங்கை நாணயப்படி 800 கோடி) ரூபாய் பணத்தினை வழங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வேகப் பந்துவீச்சாளராக மாறிய மொயின் அலி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான மொயின் அலி….

மேலும், இந்த அனுசரணை மூலம் தொடர்ந்து Paytm நிறுவனமே இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அனுசரணை வழங்கும் உரிமையினை தக்கவைத்திருக்கின்றது. முன்னதாக, Paytm நிறுவனமானது இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கும் உரிமையினை பெற கடந்த 2015ஆம் ஆண்டில் இந்திய நாணயப்படி 203.28 கோடி ரூபாய் பணத்தினை செலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“Paytm நிறுவனமானது இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதை உங்களுக்கு அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றது. Paytm ஆனது இந்தியாவின் புதிய தலைமுறையை சேர்ந்த ஒரு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்நிலையில், இந்தியாவின் கிரிக்கெட்டை விருத்தி செய்ய Paytm  நிறுவனத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கைகோர்ப்பதில் பெருமை அடைகின்றது.” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ராகுல் ஜோஹ்ரி குறிப்பிட்டிருந்தார். 

இந்திய கிரிக்கெட் அணி Paytm இன் அனுசரணையுடன் இந்த ஆண்டு இந்தியாவில் விளையாடும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் தொடராக தென்னாபிரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயணம் அமையவுள்ளது. இந்த சுற்றுத்தொடரில் இந்திய அணியும் தென்னாபிரிக்க அணியும் மூன்று T20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவுள்ளன. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க