பரா மெய்வல்லுனரில் உலக சாதனையை நெருங்கிய இலங்கை வீரர்

211

றியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும், கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான தினேஷ் பிரயன்த ஹேரத், மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டி எறிதலில் உலகின் 2ஆவது சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து, உலக சாதனை அடைவுமட்டத்தை அண்மித்தார்.

பரிதி வட்டம் எறிதலில் எம்மாவின் மற்றுமொரு தேசிய சாதனை

பூட்டானில் இன்று (27) இடம்பெற்று முடிந்திருக்கும்..

இந்தோனேஷியாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய பரா விளையாட்டு விழா மற்றும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஜேர்மனியில் நடைபெறவுள்ள உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களை தெரிவுசெய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் கடந்த 31ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 160 வீரர்கள் இந்த தகுதிகாண் போட்டிகளில் கலந்துகொண்டதுடன், இதில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 44 வீரர்களை தேசிய பரா மெய்வல்லுனர் குழாமுக்காக தெரிவுசெய்வதற்கு இலங்கை பரா ஒலிம்பிக் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.  

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற றியோ ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான எப்-46 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத், இம்முறை தகுதிகாண் போட்டியில் 63.70 மீற்றர் தூரத்தை எறிந்து உலக சாதனை அடைவு மட்டத்தை நெருக்கியிருந்தார். அத்துடன் அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டி எறிதலில் உலகின் 2ஆவது சிறந்த தூரத்தையும் பதிவு செய்தார்.

இதேநேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான எப்-46 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டிக்காக இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார், 63.97 மீற்றர் தூரத்தை எறிந்து உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏழு கண்டங்களின் மரதன் ஓட்டத்திற்கு தயாராகும் இலங்கை வீரர் ஹசன்

அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் எதிர்வரும் ஏப்ரல்..

தினேஷ் பிரியந்தவினால் நிலைநாட்டப்பட்ட இப்புதிய சாதனை குறித்து இலங்கை பரா ஒலிம்பிக் சங்கத்தின் பிரதித் தலைவரும், பரா மெய்வல்லுனர் பிரிவின் பொறுப்பதிகாரியுமான கேர்னர் தீபால் ஹேரத் எமது இணையத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், ”நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டது போல ஆசிய விளையாட்டு விழா மற்றும் உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளை முன்னிட்டு இந்த தகுதிகாண் போட்டிகளை கடந்த 31ஆம் திகதி நடத்தியிருந்தோம். இதில் பரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த ஹேரத், எப்-46 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் 63.70 மீற்றர் தூரத்தை எறிந்து தனது சிறந்த காலத்தைப் பதிவுசெய்திருந்தார்.

அதேநேரம், உலக சாதனை படைத்த இந்திய வீரர் சுந்தர் சிங்கிற்கு அடுத்தபடியாக உள்ள உலகின் 2ஆவது சிறந்த தூரமாகவும் இது பதிவாகியது. எனவே, இவருடைய இந்த அடைவு மட்டத்தினை இன்னும் சில தினங்களில் சர்வதேச பரா ஒலிம்பிக் குழுவிடம் அறிவிக்க நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

முன்னதாக றியோ பராலிம்பிக்கில் இதே போட்டிப் பிரிவில் முதற்தடவையாக கலந்துகொண்ட தினேஷ், 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன், அது பராலிம்பிக் போட்டி வரலாற்றில் இலங்கை பெற்றுக்கொண்ட இரண்டாவது பதக்கமாகவும் பதிவாகியது.   

அத்துடன், கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை தினேஷ் பிரியந்த ஹேரத் பெற்றுக்கொடுத்தார். எப்-46 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு, 57.93 மீற்றர் தூரம் எறிந்து அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இது அவர் பெற்றுக்கொண்ட 2ஆவது சர்வதேச பதக்கமாகவும் அமைந்தது.   

இதேநேரம், இவ்வருடம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடர்களுக்கான மேலும் இரண்டு தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் வாரங்களில் நடைபெறும் என இலங்கை பரா ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது.