டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த ஹபீஸ்

214
Image courtesy - Cricket Australia

நியூசிலாந்து அணிக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்று வரும் மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் (38 வயது) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களின் பின்னர் டெஸ்ட் குழாத்தில் இணையும் ஹபீஸ்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு …

இரண்டு வருடங்களுக்கு பின்னர், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் குழாமில் இடம்பிடித்திருந்த ஹபீஸ்,  முதல் போட்டியில் சதம் விளாசி சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தார். எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் சோபிக்கத் தவறிய இவர், பின்னர் துடுப்பெடுத்தாடிய 7 இன்னிங்சுகளில் 66 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

நீண்ட நாட்களாக தேசிய அணியில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த ஹபீஸ், கடந்த மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இணைக்கப்பட்டிருந்தார்.எனினும், துரதிஷ்டவசமாக அவரால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடியாத காரணத்தால் திடீர் என தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிக கவனத்தை செலுத்தும் முகமாகவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஹபீஸ், தேர்வுக்குழு தலைவர் இன்சமாம்-உல்- ஹக்கிடம் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹபீஸ்,

“மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் எனது கனவத்தை செலுத்தும் முகமாக, இந்த போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன். அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதற்காக என்னை தயார்படுத்த வேண்டும். தேசிய அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியமை மற்றும் அணியின் தலைவராக செயற்பட்டமையை பெருமையாக கருதுகிறேன். கடந்த 15 வருடங்களாக என்னால் முடிந்தவற்றை அணிக்காக செய்துள்ளேன் என்ற மன நிறைவுடன் ஓய்வுபெறுகிறேன்” என்றார்.

போல்டின் ஹெட்ரிக் சாதனையுடன் பாகிஸ்தானை வீழ்த்தியது நியுஸிலாந்து

பாகிஸ்தான் மற்றும் நியுஸிலாந்து ….

“அதேவேளை, அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் அணி சிறந்த முறையில் விளையாடுவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், புதிய இளம் வீரர்களை உருவாக்குவதற்காக கடினமாக உழைத்து வரும் முகாமைத்துவத்துக்கும், அணித் தலைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

மொஹமட் ஹபீஸ், பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 10 சதம் மற்றும் 12 அரைச்சதங்கள் அடங்கலாக 3644 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 53 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<