சுதந்திர கிண்ணத்தின் போது இலங்கை வரும் பாகிஸ்தான் மகளிர் அணி

171

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் T-20 தொடர்களில் விளையாடுவதற்காக எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

[rev_slider LOLC]

மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் 65 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ள இலங்கை மகளிர் அணி, இறுதியாக கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கிண்ணத்தில் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியை 15 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது.

சுதந்திர கிண்ணத்திற்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

மார்ச் மாதம் ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண (Nidahas Trophy) முக்கோண T-20..

இதன்படி, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளிலும், 3 T-20 போட்டிகளிலும் இலங்கை மகளிர் அணியை சந்திக்கவுள்ளது.

இப்போட்டித் தொடர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், ஒரு நாள் போட்டித் தொடர் தம்புள்ளையிலும், T-20 தொடர் கொழும்பிலும் நடைபெறவுள்ளது.

முன்னதாக மேற்கிந்திய தீவுள் மகளிர் அணிக்கெதிராக கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற போட்டித் தொடரில் இறுதியாக விளையாடியிருந்த இலங்கை அணிக்கு, இவ்வருடத்தில் பங்கேற்கும் முதல் போட்டித் தொடராக இது அமையவுள்ளது. இத்தொடரில் வெற்றிபெறுவதனால், .சி.சியினால் மகளிருக்காக நடத்தப்படுகின்ற 2017-2023 சம்பியன்ஷிப் போட்டிகளில் புள்ளிகள் பட்டியலில் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்பும் இலங்கைக்கு கிட்டவுள்ளது.

மகளிருக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளும் 2017 முதல் 2021 வரையான காலப்பகுதியில் ஏனைய அணிகளுடனும் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட வேண்டும். இதன்படி, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரேயொரு வெற்றியைப் பதிவுசெய்து 6ஆவது இடத்திலும், இலங்கை அணி 8ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

திகதி போட்டி இடம்
மார்ச் – 20 முதலாவது ஒரு நாள் போட்டி தம்புள்ளை
மார்ச் – 22 2ஆவது ஒரு நாள் போட்டி தம்புள்ளை
மார்ச் – 24 3ஆவது ஒரு நாள் போட்டி தம்புள்ளை
மார்ச் – 28 முதலாவது T-20 SSC மைதானம்
மார்ச் – 30 இரண்டாவது T-20 NCC மைதானம்
மார்ச் – 31 மூன்றாவது T-20 SSC மைதானம்