பாகிஸ்தான் இளையோர் அணி மே மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம்

17

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் இளையோர் அணி, நான்கு நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளிலும், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான, 15 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் குழாம், இன்று (15) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு….

கடந்த வருடம் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி, அதன் பிறகு சொந்த மண்ணில் வைத்து பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுடன் விளையாடியிருந்தன. இவ்விரண்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடியிருந்த இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி, பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரை 1-1 என சமப்படுத்தியிருந்ததுடன், ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி, ஒருநாள் தொடரை 2-1 என பறிகொடுத்தது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி,  2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி காலியிலும், 2 ஆவது டெஸ்ட் போட்டி 9 ஆம் திகதி அம்பாந்தோட்டையிலும் நடைபெறவுள்ளது.

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் மே மாதம் 15, 17 மற்றும் 20 ஆம் திகதிகளில் முறையே அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்திலும், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும் இடையில் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இதில் எந்தவொரு அணியும் வெற்றி பெறவில்லை.

உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித், வோனர்

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய அணிக்குழாம்…

அதேபோன்று, இவ்விரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 18 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 9 போட்டிகளில் பாகிஸ்தானும், 6 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளதுடன், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்துள்ளது.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போட்டி அட்டவணை

முதலாவது டெஸ்ட் போட்டிமே 3 முதல் 6 வரைகாலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்
இரண்டாவது டெஸ்ட் போட்டிமே 9 முதல் 12 வரைஅம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானம்
முதலாவது ஒருநாள் போட்டிமே 15அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானம்
இரண்டாவது ஒருநாள் போட்டிமே 17அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானம்
மூன்றாவது ஒருநாள் போட்டிமே 20காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<