ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை கழற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஐ.சி.சி. அறிவுறுத்தல்

746
Image Courtesy - Getty Images & Dailymail

இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் பாகிஸ்தான் அணி வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் ஊழல் தடுப்பு பிரிவினர் அறிவுறுத்தியதை அடுத்து தாம் அணிந்திருந்த ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை (Smartwatch) கழற்றிவிட்டு மைதானத்திற்கு திரும்பியுள்ளனர். 

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது நெட்வெஸ்ட் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான வியாழக்கிழமை (24), ஆட்டத்தில் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் அணிந்திருந்த கைக்கடிகாரம் இணையத்தள தொடர்பை பெறும் வசதி கொண்டதாக இருந்தது.

டி வில்லியர்ஸ் நான் பார்த்த வீரர்களில் சிறந்த ஒருவர் – மஹேல ஜயவர்தன

கிரிக்கெட் உலகின் முக்கிய வீரர்களான அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட்…

பாபர் அஸாம் மற்றும் அசாத் ஷபீக் இருவரும் மைதானத்தில் தடை செய்யப்பட்ட ஆப்பிள் கைக்கடிகாரங்களை (Apple Smart watches) அணிந்திருந்தது புகைப்படங்களில் தெளிவாக தெரிந்தன. அவை அனைத்து வசதிகளும் கொண்ட சீரிஸ் வன் ஆப்பிள் கைக்கடிகாரங்கள் என்று தெரியவந்துள்ளன.

எனினும் ஆட்டத்தின் போது இவ்வாறான ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அணிவதற்கு ஐ.சி.சி. அனுமதிப்பதில்லை. அவைகள் மூலம் இணையத்தள வசதியை பெற்று இணைய சூதாட்ட தளங்களை அணுகுவது போன்ற வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாலேயே அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அணிந்திருக்கும் செய்திகள் இங்கிலாந்து ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்ட நிலையில் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினர் அது பற்றி அவதானம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் முதல் நாள் போட்டி முடிவுற்றதை அடுத்து ஐ.சி.சி. அதிகாரிகள் பாகிஸ்தான் அணியினரை சந்தித்துள்ளனர். எனினும் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபட்டதாக எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

தம்முடன் ஐ.சி.சி. அதிகாரிகள் பேசியதை பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹஸன் அலி உறுதி செய்துள்ளார்.

”அவ்வாறான ஒன்றை யாராவது அணிந்திருக்கிறார்களா என்பது எனக்கு ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை” என்று போட்டி முடிவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஹஸன் அலி கூறினார். ”ஐ.சி.சி. ஊழல் தடுப்பு அதிகாரிகள் எம்மிடம் வந்து இது அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறினார்கள். எனவே, அடுத்த முறை எவரும் அதனை அணிய மாட்டார்கள்” என்றார்.

இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்த்திருக்கும் புதிய ஆடை நிறுவனம்

ஆடை உலகில் தரத்திற்கு பெயர்பூத்துப் போன ஆடைகள் உற்பத்தியாளரான லோங் ஐலண்ட் ஆடை…

விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர்த்து, வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் எந்த ஒரு தொலைத்தொடர்பு கருவியையும் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது.

”தொலைத்தொடர்புகளை பெறும் வகையில் வை-பை (Wi-Fi) அல்லது தொலைபேசியுடன் தொடர்புபடுத்தப்பட்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை வீரர்களுக்கு நினைவூட்டுகிறோம். அவ்வாறான கருவிகள் போட்டி தினத்தில் மைதானத்திற்கு வரும்போது தமது கையடக்க தொலைபேசிகளுடன் ஒப்படைக்கப்பட வேண்டும்” என்று ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னைய இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது ஊழல் விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆட்ட நிர்ணயங்கள் குறித்து ஐ.சி.சி. அண்மைய ஆண்டுகளில் அதிக அவதானத்துடன் உள்ளது.

2010 ஆகஸ்ட் மாதம் லோட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய சுற்றுப் பயணத்தில் இணைந்திருக்கும் மொஹமது ஆமிருடன் சல்மான் பட் மற்றும் மொஹமது ஆசிப் ஆகிய மூவரும் முன்கூட்டிய ஏற்பாட்டில் நோ போல் பந்து வீசிய சர்ச்சையில் சிக்கினர்.

இந்த மூவரும் ‘ஸ்பொட் பிக்சிங்’ (Spot Fixing) ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டது நடுவர் மன்றம் ஒன்றினால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறிப்பட்ட காலம் சிறை அனுபவித்ததோடு பல ஆண்டுகள் போட்டித் தடைக்கும் முகம்கொடுத்தனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க