இந்தியாவுடனான டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு குறைவு : முரளிதரன்

394
Muttiah Muralitharan

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு குறைந்தளவு வாய்ப்பே இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் அசேல குணரத்ன

பனாகொடையில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் கழகம்…

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெறும் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் குறித்து கிரிக்பாஸ் இணைத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே முதளிதரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

அனைத்து சர்வதேச கிரிக்கெட் அணிகளும் பிரபல இந்திய அணியை தோற்கடிக்க முயற்சித்து வருகின்றன. எனினும், கடந்த 13 வருடங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அணிகள் வெறும் இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தன. இந்திய அணி உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளது. ஆனாலும் இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றது. எனினும் நாங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் தடுமாறி வருகின்றோம். எனினும்,டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவை வீழ்த்துவது எளிதான விடயம் அல்ல. இந்த தொடரின் போது இலங்கை அணி வீரர்களின் திறமைகளை இனங்கண்டு கொள்ளமுடியும்” என அவர் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற முரளிதரன், 1994ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்திய மண்ணில் 4 டெஸ்ட் போட்டித் தொடர்களில் விளையாடியுள்ளார். எனினும், அத்தொடர்களில் இலங்கை அணி எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்யவில்லை. அதேபோல கடந்த 22 வருடங்களில் இலங்கை அணி இந்திய மண்ணில் எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுக்கொள்ளவில்லை.  

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் வரலாறு படைக்குமா?

அண்மைய நாட்களில் அதிகமான தோல்விகளையே…

”நான் இந்திய அணிக்கெதிராக விளையாடிய போது அவ்வணியின் துடுப்பாட்ட வரிசையில் உலகின் பலமிக்க வீரர்கள் விளையாடியிருந்தனர். எனினும், தற்போதைய இந்திய அணியைவிட அந்த அணிதான் உலகின் பலமிக்க அணியாகவும் விளங்கியது. அப்போதைய அணியின் துடுப்பாட்ட வரிசையில், விரேந்திர ஷெவாக், கௌதம் காம்பீர், ராகுல் ட்ராவிட், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் எம்.எஸ் டோனி ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த வீரர்கள் ஒவ்வொருவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னிலை பெற்றிருந்ததுடன், அவர்களை வெல்வது மிகவும் சவாலாகவும் இருந்தது” என அப்போதைய இந்திய அணி குறித்து முரளி தெரிவித்தார்.

அதேபோல எமது சொந்த மண்ணில் நாங்கள் பலமிக்க அணியாக இருந்த காரணத்தினால் கடந்த 22 வருடங்களாக இலங்கை மண்ணில் இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரொன்றை வெல்ல முடியாமல் போனது. இது எமக்கு சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொடுத்தாலும், அண்மைக்காலமாக அவற்றையெல்லாம் நாம் இழந்துவருவது கவலையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல சுவையான கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<