கிரிக்கெட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 30

568
OTD-Sep-30

1986ஆம் ஆண்டுமார்ட்டின் கப்டில் பிறப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்  மார்ட்டின் கப்டிலின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் – மார்ட்டின் ஜேம்ஸ் கப்டில்

பிறப்பு – 1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி

பிறந்த இடம்ஆக்லண்ட்

வயது – 30

விளையாடிய காலப்பகுதி – 2009ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி

துடுப்பாட்ட பாணிவலதுகை ஆரம்ப துடுப்பாட்டம்

புனைப் பெயர்கப்பி

உயரம் – 6 அடி  2 அங்குலம் (1.88 மீற்றர்)

விளையாடிய அணிகள்நியூசிலாந்து, ஆக்லாந்து, டெர்பிஷயர், கயானா அமேசன் வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், நியூசிலாந்து அகாடமி, நியூசிலாந்து U19, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியொட்ஸ்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 129

மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 4844

அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 237*

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 43.25

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 45

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 2448

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 189

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 29.14

விளையாடியுள்ள சர்வதேச டி20 போட்டிகள் – 61

மொத்த சர்வதேச டி20 ஓட்டங்கள் – 1806

அதிகபட்ச சர்வதேச டி20 ஓட்டம் – 101*

சர்வதேச டி20 துடுப்பாட்ட சராசரி – 34.73

மார்ட்டின் கப்டில் முழு நேர துடுப்பாட்ட வீரராக  இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மார்ட்டின் கப்டில் நியூசிலாந்தின் பல வயதுக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய வீரர்களில் முக்கிய ஒரு வீரர் ஆவார்.

2006ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணியில் விளையாடினார். தனது முதலாவது முதல் தரப் போட்டியை 2006 மார்ச் மாதத்தில் விளையாடினார்.

2009 ஜனவரியில் தனது முதலாவது ஒருநாள் போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடி, முதல் போட்டியிலேயே சதமடித்த முதலாவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தனது முதலாவது டெஸ்ட் ஆட்டத்தை 2009 மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார்.

2015 உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 163 பந்துகளை எதிர்கொண்டு 237 ஓட்டங்களைப் பெற்றார். அத்தோடு இவரது இந்த 237 ஓட்டங்கள் உலக ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனி ஒருவரால் பெறப்பட்ட அதிக ஓட்டங்களில் 2ஆவது இடத்தில் காணப்படுகிறது. 1ஆவது இடத்தில் ரோஹித் ஷர்மா உள்ளார்.

இதேவேளை இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில், அதிராடியாக ஆடிய  மார்ட்டின் கப்டில் அதிவேக அரைசதம் அடித்த 2வது வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர்கள் சனத் ஜெயசூரிய, குசால் பெரேரா ஆகியோருடன் இணைந்தார். இதற்கு முன்னதாக தென் ஆபிரிக்க அணியின் மிரட்டல் வீரர் டி வில்லியர்ஸ் 16 பந்துகளில் அரைச் சதம் அடித்ததே சாதனையாக உள்ளது.


2002ஆம் ஆண்டுசம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி

2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற . சி. சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 222/7 (50)

மஹேல ஜயவர்தன 77, ரசல் ஆர்னல்ட் 56*, அரவிந்த டி சில்வா 27

சஹீர் கான் 44/3

இந்தியா – 38/1 (8.4)

விரேந்தர் சேவாக் 25*

சமிந்த வாஸ் 24/1

போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் போட்டி முடிவற்ற போட்டியாக கணிக்கப்பட இலங்கை மற்றும் இந்திய அணிகள் கூட்டு சம்பியன்ஸ் ஆகின.


செப்டம்பர் மாதம் 30ஆம் திகதியில் பிறந்த கிரிக்கெட் வீரர்கள்

  • 1952ஆம் ஆண்டுடெரல் ஹெயார் (அவுஸ்திரேலியா)
  • 1962ஆம் ஆண்டுசமீர் ஹைதர் (பாகிஸ்தான்)
  • 1970ஆம் ஆண்டுஸ்டீபன் தியோடர் (அவுஸ்திரேலியா)
  • 1972ஆம் ஆண்டுஇயன் வார்டு (இங்கிலாந்து)