வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 04

255
OTD-July-4

1959ஆம் ஆண்டுஜேனட் பிரிட்டின்  பிறப்பு

இங்கிலாந்து மகளிர் அணியைச் சேர்ந்த ஜேனட் பிரிட்டின் அவர்களது பிறந்த தினமாகும். உலக மகளிர் கிரிக்கட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீராங்கனை என்ற பெருமைக்குரிய ஜேனட் பிரிட்டின் இங்கிலாந்து மகளிர் அணிக்காக 1979ஆம் ஆண்டு தொடக்கம் 1998 வரை 27 டெஸ்ட் போட்டிகளிலும், 63 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். முன்பு கூறியது போன்று  உலக மகளிர் கிரிக்கட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனை என்ற பெருமைக்குரிய இவர் மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 49.61 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1935 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதில் அதிகூடிய ஓட்டம் 167 ஆகும். அத்தோடு அவர் மொத்தமாக 5 சதங்கள் மற்றும் 11 அரைச் சதங்களைப் பபெற்றுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 03

ஜூலை மாதம் 04ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1874 லக்கி டெண்டன் (இங்கிலாந்து)
1895 எரிக் மார்க்ஸ் (தென் ஆபிரிக்கா)
1918 எரிக் பேட்ஸர் (இங்கிலாந்து)
1938 சிறில் மிச்சலே (தென் ஆபிரிக்கா)
1962 கீர்த்தி ரணசிங்க (இலங்கை)
1972 கிரேக் ஸ்பேயர்மன் (நியூசிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்