தேசிய விளையாட்டு விழா கெரம் போட்டிகளில் வடக்குக்கு 3 பதக்கங்கள்

81

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 45ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான கெரம் போட்டிகளில் மேல் மாகாண அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சம்பியனாகத் தெரிவாகின. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மேல் மாகாணத்தின் நிஷாந்த பெர்னாண்டோ வருடத்தின் அதிசிறந்த வீரராகத் தெரிவாகியதுடன், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதே மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டா அதிசிறந்த வீராங்கனையாகத் தெரிவாகினார்

யாழ். இந்துக் கல்லூரியை இன்னிங்ஸால் வீழ்த்திய கொக்குவில் இந்து!

சிங்கர் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை ……..

இதேநேரம், வட மாகாண அணி ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை இம்முறை தேசிய விளையாட்டு விழா கெரம் போட்டிகளில் பெற்றுக்கொண்டது. 

பதுளை பொதுநூலக மண்டபத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இம்முறை போட்டிகளின் ஆண்கள் பிரிவில் கெரம் நடப்புச் சம்பியனான மேல் மாகாணத்தைச் சேர்ந்த நிஷாந்த பெர்னாண்டோ தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அனாஸ் அஹமட் வெள்ளிப் பதக்கத்தையும், வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த அஞ்சுள குமார வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர்.

இதேநேரம், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டா தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மதுவன்தி குணதாச வெள்ளிப் பதக்கத்தையும், வட மாகாணத்தைச் சேர்ந்த கே. கேசாஜினி வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

அதிசிறந்த வீரர்கள் – நிஷாந்த பெர்னாண்டோ, ஜோசப் ரொஷிட்டா
பெண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கம் – கே. கேசாஜினி
இரட்டையர் பிரிவு சம்பியன் – ஷஹீட் ஹில்மி, ஹசித்த அநுருத்த
பெண்கள் இரட்டையர் பிரிவு – ஈ.திசாந்தினி மற்றும் ஆர். பவதாரணி

இதுஇவ்வாறிருக்க, ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஷஹீட் ஹில்மி, ஹசித்த அநுருத்த ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றனர். இதில் வடமேல் மாகாணம் (ஜோசப் டிலான், என். விஜேசிங்க) வெள்ளிப் பதக்கத்தையும், மத்திய மாகாணம் (எஸ். சேனாதி, எம், முபீஸ்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்ற வடக்கின் நட்சத்திரம் ஆர்ஷிகா

அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட ……

அத்துடன்,பெண்கள் இரட்டையர் பிரிவில் மேல் மாகாணம் (எம். டில்ஷானி, டி.நொமாயா) தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.

இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த .திசாந்தினி மற்றும் ஆர். பவதாரணி ஜோடி வெள்ளிப் பதக்கத்தையும், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த எவ்.அர்ஷன மற்றும் ஆர்.செல்வந்தி ஜோடி வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர்

இதுஇவ்வாறிருக்க, அணி நிலை போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் மேல் மாகாண அணி தங்கப் பதக்கங்களை சுவீகரித்தன. இதன் ஆண்கள் பிரிவில் ஊவா மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும், மத்திய மாகாணம் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டன.

இதேவேளை, பெண்கள் பிரிவில் சப்ரமுகவ மாகாண அணி வெள்ளிப் பதக்கத்தை வெற்றிகொள்ள, வட மாகாண அணி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டன

வடக்கு மாகாண அணியில் கே. கேசாஜனி, . திசாந்தினி, ஆர். பவதாரணி, எஸ். சதுர்ஷிகா மற்றும் எல். துசாஞ்சினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<