தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் “குட் ஸ்போர்ட்ஸ்” சஞ்சிகை வெளியீடு

87

எட்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட தேசிய ஒலிம்பிக் சங்கம், முதற்தடவையாக “குட் ஸ்போர்ட்ஸ்” என்ற விளையாட்டு சஞ்சிகையை கடந்த வியாழக்கிழமை (26) உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளது.

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகாவுக்கு ஆலோசகர் பதவி

இலங்கையின் முன்னாள் நட்சத்திர குறுந்தூர ஓட்ட …

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டதுடன், தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரே சுப்ரமணியமிடம் இருந்து சஞ்சிகையின் முதல் பிரதியையும் அவர் பெற்றுக் கொண்டார்.  

இந்த நிலையில், இலங்கையின் விளையாட்டுத்துறையை வளர்த்தெடுக்கவும், வீரர்களின் நலனுக்காகவும் தமது அரசு துணை நிற்கும் என்றும், சர்வதேசத்தில் இலங்கையை விளையாட்டுத்துறையில் பிரகாசிக்க வைக்க தம்முடைய அரசினால் முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

ஏனைய நாடுகளைப் போன்று எமக்குப் போதியளவு வசதிகள் இல்லை. இதனால் நாம் விளையாட்டுத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோம். ஆனாலும், திறமையான வீரர்கள் எமது நாட்டில் உள்ளனர். எனவே, பின்தங்கியுள்ள விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய எமது அரசாங்கம் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

அகில இலங்கை பாடசாலை விளையாட்டில் வட மாகாண வீரர்களுக்கு மூன்று பதக்கங்கள்

கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் …

இதேவேளை, இலங்கையில் உள்ள வீரர்களுக்கு பொருத்தமான விளையாட்டு சூழலை உருவாக்கிக் கொடுக்கவும் விளையாட்டுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்கவும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற மற்றும் கிராமப் புறங்களில் இருந்து வந்து தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் ஆரம்பித்துக் வைக்கப்பட்ட 50 மில்லியன் ரூபா பிரதமர் நிதியம், இலங்கையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக மேற்கொண்ட சிறந்த வேலைத்திட்டம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், அதன் பொதுச்செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…