அகில இலங்கை வீதி ஓட்டத்தில் வவுனியாவின் நிசோபனுக்கு இரண்டாமிடம்

90

அகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டப் போட்டியில் மாகந்துர மத்திய கல்லூரியைச் சேர்ந்த சசிந்து சன்கல்பவும், ஷஷிகலா டில்ஷானியும் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டனர். 

இதன் ஆண்கள் பிரிவில் கலந்துகொண்ட வவுனியா காமினி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கே. நிசோபன் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்

வடமாகாண விளையாட்டு விழாவில் இரட்டைச் சாதனை படைத்த பிரகாஷ்ராஜ், கிந்துசன்

வட மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான….

இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கமும், கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறைப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த அகில இலங்கை பாடசாலைகள் நெஸ்டமோல்ட் வீதி ஓட்டப் போட்டி குருநாகல் கிரியுல்ல நகரில் நேற்றுமுன்தினம் (14) நடைபெற்றது.  

கடந்த காலங்களில் இந்தப் போட்டி நிகழ்வு மரதன் ஓட்டப் போட்டிகளாக நடைபெற்றது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்போது வீதி ஓட்டப் போட்டிகளாக நடைபெற்று வருகின்றது.  

16 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் மாத்திரம் கலந்துகொள்ளும் இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியில் இருந்து 3000 வீர வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.   

14 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்தப் போட்டியில், கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த வாரம் நிறைவுக்குவந்த சேர் ஜோன் டார்பட் சிரேஷ் மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 1,500 மீற்றர் மற்றும் 5,000 மீற்றர் ஆகிய இரு ஓட்டப் போட்டிகளிலும் புதிய போட்டிச் சாதனைகளை நிலைநாட்டிய சசிந்து சங்கல்ப முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் இரட்டைப் பதக்கங்களை வென்ற நிசோபன் l Junior Men’s 10,000M

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 62ஆவது தேசிய கனிஷ்ட….

அதேபோல, இம்முறை தேசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டியில் வவுனியா மாவட்டத்தைச் பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய நிசோபன், முதல்முறையாக அகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டத்தில் பங்குபற்றி இரண்டாவது இடத்தைப் பெற்று அசத்தினார்

முன்னதாக, இம்மாத முற்பகுதியில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ் மெய்வல்லுனரில் பங்குகொண்ட நிசோபன், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5,000 மீற்றர் மற்றும் 10,000 மீற்றர் ஆகிய போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார்.   

இதுஇவ்வாறிருக்க, கடந்த வார இறுதியில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற வட மாகாண விளையாட்டு விழாவிலும் பங்கேற்ற அவர், ஆண்களுக்கான 5,000 மற்றும் 10,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றதுடன், 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்களப் பதக்கத்தினையும் சுவீகரித்தார்.    

எனவே, சுமார் 2 வார இடைவெளியில் நிசோபன் 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று தனது அபார திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்.  

இவர் வவுனியாவின் முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்

இதேவேளை, குறித்த போட்டியில் மூன்றாம் இடத்தை நக்காவத்த தேசிய பாடசாலையைச் சேர்ந்த லஹிரு லக்ஷான் பெற்றார்.

வடமாகாண விளையாட்டு விழாவில் இரட்டைச் சாதனை படைத்த பிரகாஷ்ராஜ், கிந்துசன்

வட மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான….

இதுஇவ்வாறிருக்க, பெண்கள் பிரிவில் 3ஆவது இடத்தை மாகந்துர மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஷஷிகலா டில்ஷானி பெற்றுக்கொண்டார். இவர் அண்மையில் நிறைவுக்கு வந்த சேர் ஜோன் டார்பட் சிரேஷ் மெய்வல்லுனர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வேகநடைப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், காலி தேவபத்திராஜ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஷினி மதுஷிக்கா இரண்டாவது இடத்தையும், நாரந்தெனிய தேசிய பாடசாலையைச் சேர்ந்த டில்மினி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.  

இதேநேரம், வவுனியா சரஸ்வதி வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெயராசா தனுஷியா ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

எனினும், இம்மாத முற்பகுதியில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 5,000 மீற்றர் வேகநடைப் போட்டியில் பங்குகொண்ட ஜெயராசா தனுஷியா வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க