‘டயலொக் 4G’ மற்றும் ‘சண்டே ஒப்செர்வர்’ இணைந்து நடாத்தும் பாடசாலை கிரிக்கெட் விருது விழாவில் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை தேசிய அணி மற்றும் பி.டி.எஸ். குலரத்ன கல்லூரியின் வேகப் பந்துவீச்சாளரான நிபுன் ரன்சிக வெற்றி வாகை சூடினார். இவ்விழாவானது கடந்த புதன்கிழமை கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்றது.

முதற் பிரிவு (டிவிஷன் 1) அணிகள் தேசிய மட்ட அணிகளாகவும் இரண்டாம் பிரிவு (டிவிஷன் 2) வளர்ந்து வரும் அணிகளாகவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன. ஜயந்த செனவிரத்ன தலைமையிலான தெரிவுக்குழு வெற்றியாளர்களைத் தெரிவு செய்திருந்தது.

கடந்த வருடம் இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக நிபுன் ரன்சிக தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய தொடர்களின் போது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அவர் பாடசாலை மட்டத்தில் 51 விக்கெட்டுகளையும் சர்வதேச மட்டத்தில் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இரண்டாம் பிரிவு பாடசாலை ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுன் ரன்சிக, வளர்ந்து வரும் பாடசாலைகளுக்கான சிறந்த பந்துவீச்சாளரின் விருதையும் வென்றார்.

கடந்த வருடத்தில் பாடசாலை மட்டத்தில் 51 விக்கெட்டுகளையும் சர்வதேச மட்டத்தில் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிபுன் ரன்சிக
கடந்த வருடத்தில் பாடசாலை மட்டத்தில் 51 விக்கெட்டுகளையும் சர்வதேச மட்டத்தில் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிபுன் ரன்சிக

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பயிற்றுவிப்பாளரான மார்வன் அட்டபத்து இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், டயலொக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான சுபுன் வீரசிங்க உள்ளிட்ட பல பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.

விழாவின் போது கருத்து வெளியிட்ட மார்வன் அட்டபத்து, “ஒரு தருணத்தின் போது பின்னடைவை சந்திப்பதனால் போட்டியில் தோல்வியை தழுவி விட்டதாக கருதக் கூடாது. சுய உறுதி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவையே எம்மிடம் இருக்கக் கூடிய பலமிக்க ஆயுதங்களாகும். தாங்கள் பிறரை விட திறமை மிக்க வீரர்களாக காணப்படுகின்ற காரணத்தினால் தான் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் பல படிகளைக் கடந்து இன்று இவ்விருது விழாவின் மேடைக்கு வருகை தந்துள்ளீர்கள். எனவே இதனை எந்நேரத்திலும் உங்கள் மனதில் நிலைநிறுத்தி எதிரணியை உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட் வாரிய தலைவர் பதினொருவர் அணியின் தலைவராக திரிமான்ன

கடந்த பருவகாலத்தில் 880 ஓட்டங்களைக் குவித்து 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வென்னப்புவ, புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் நிபுன் தனஞ்சய சிறந்த சகலதுறை வீரருக்கான விருதையும், சிறந்த கிரிக்கெட் வீரருக்கான இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

காலி புனித அலோசியஸ் கல்லூரியின் ஹரீன் புத்தில மற்றும் இசிபதன கல்லூரியின் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் முறையே சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதுகளை சுவீகரித்தனர்.

நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த லசித் குரூஸ்புள்ளே கடந்த வருடத்தின் பிரபல்யம் மிக்க வீரருக்கான விருதைப் பெறும் காட்சி
நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த லசித் குரூஸ்புள்ளே கடந்த வருடத்தின் பிரபல்யம் மிக்க வீரருக்கான விருதைப் பெறும் காட்சி

கடந்த வருடத்தின் பிரபல்யம் மிக்க வீரருக்கான விருதினை 248,005 வாக்குகளை பெற்ற லசித் குரூஸ்புள்ளே (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு) வென்றதுடன், இரண்டாமிடத்தை 144,123 வாக்குகளை பெற்ற நவிந்து நிர்மால் (புனித அலோசியஸ் கல்லூரி, காலி) தனதாக்கிக் கொண்டனர்.

தேசிய மட்ட அணிகளுக்கான விருதுகள்

  • வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் (முதலாமிடம்) – நிபுன் ரன்சிக (பி.டி.எஸ். குலரத்ன கல்லூரி, அம்பலாங்கொடை)
  • வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் (இரண்டாமிடம்) – நிபுன் தனஞ்சய (புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் (முதலாமிடம்) – பெதும் நிஸ்ஸங்க (இசிபதன கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் (இரண்டாமிடம்) – அஷென் பண்டார (புனித அலோசியஸ் கல்லூரி, காலி)
  • சிறந்த பந்துவீச்சாளர் (முதலாமிடம்) – ஹரீன் புத்தில (புனித அலோசியஸ் கல்லூரி, காலி)
  • சிறந்த பந்துவீச்சாளர் (இரண்டாமிடம்) – நவீன் குணவர்தன (தர்ஸ்டன் கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் (முதலாமிடம்) – ரவிந்து ரஷாந்த (தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை)
  • சிறந்த களத்தடுப்பாளர் (இரண்டாமிடம்) – சந்துஷ் குணதிலக (புனித பேதுரு கல்லூரி)
  • சிறந்த விக்கெட் காப்பாளர் (முதலாமிடம்) – நவிந்து நிர்மால் (புனித அலோசியஸ் கல்லூரி, காலி)
  • சிறந்த விக்கெட் காப்பாளர் (இரண்டாமிடம்) – துஷான் குருகே (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு)

இலங்கை அணியின் 2011 உலகக் கிண்ண தோல்வி ஒரு ஆட்ட நிர்ணயமா?

  • சிறந்த சகலதுறை வீரர் (முதலாமிடம்) – நிபுன் தனஞ்சய (புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ)
  • சிறந்த சகலதுறை வீரர் (இரண்டாமிடம்) – சரண நாணயக்கார (தர்ஸ்டன் கல்லூரி)
  • சிறந்த அணித்தலைவர் (முதலாமிடம்) – கசுன் அபேரத்ன (தர்ஸ்டன் கல்லூரி)
  • சிறந்த அணி (முதலாமிடம்) – தர்ஸ்டன் கல்லூரி
  • சிறந்த அணி (இரண்டாமிடம்) – ரிச்மண்ட் கல்லூரி, காலி

வளர்ந்து வரும் அணிகளுக்கான விருதுகள்

  • வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் (முதலாமிடம்) – திலும் சுதீர (கரந்தெனிய மத்திய கல்லூரி)
  • வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் (இரண்டாமிடம்) – வனித வன்னிநாயக (புனித ஏன்ஸ் கல்லூரி, குருநாகலை)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் (முதலாமிடம்) – வனித வன்னிநாயக (புனித ஏன்ஸ் கல்லூரி, குருநாகலை)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் (இரண்டாமிடம்) – லஹிரு தம்பவிட்ட (திருச்சிலுவை கல்லூரி, களுத்துறை)
  • சிறந்த பந்துவீச்சாளர் (முதலாமிடம்) – நிபுன் ரன்சிக (பி.டி.எஸ். குலரத்ன கல்லூரி, அம்பலாங்கொடை)
  • சிறந்த பந்துவீச்சாளர் (இரண்டாமிடம்) – திலும் சுதீர (கரந்தெனிய மத்திய கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் (முதலாமிடம்) – இஷார மதுவந்த (கரந்தெனிய மத்திய கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் (இரண்டாமிடம்) – கவிந்து இரோஷ் (புனித செபஸ்டியன் கல்லூரி, கட்டுநேரிய)
  • சிறந்த சகலதுறை வீரர் (முதலாமிடம்) – திலும் சுதீர (கரந்தெனிய மத்திய கல்லூரி)
  • சிறந்த சகலதுறை வீரர் (இரண்டாமிடம்) – நிபுண தேஷான் (ஸ்ரீ சுமங்கல கல்லூரி, பாணந்துறை)
  • சிறந்த அணி (முதலாமிடம்) – புனித ஏன்ஸ் கல்லூரி, குருநாகலை
  • சிறந்த அணி (இரண்டாமிடம்) – புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

மாகாணமட்ட வளர்ந்துவரும் அணிகளுக்கான விருதுகள்

  • மேல் மாகாணம் – ஸ்ரீ சுமங்கல கல்லூரி, பாணந்துறை
  • மத்திய மாகாணம் – வித்யார்த்த கல்லூரி, கண்டி
  • வடமேல் மாகாணம் – புனித செபஸ்டியன் கல்லூரி, கட்டுநேரிய
  • வட மாகாணம் – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
  • தென் மாகாணம் – ராஹுல கல்லூரி, மாத்தறை
  • ஊவா மாகாணம் – பண்டாரவளை மத்திய கல்லூரி
  • சப்ரகமுவ மாகாணம் – டட்லி சேனநாயக்க மத்திய மகா வித்தியாலயம், தொளங்கமுவ

பிரபல்யம் மிக்க வீரர்களுக்கான விருதுகள்

  • தேசிய மட்ட அணிகள் (முதலாமிடம்) – லசித் குரூஸ்புள்ளே (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு)
  • தேசிய மட்ட அணிகள் (இரண்டாமிடம்) – நவிந்து நிர்மால் (புனித அலோசியஸ் கல்லூரி, காலி)
  • தேசிய மட்ட அணிகள் (மூன்றாமிடம்) – மொஹமட் நஜாத் (ஸாஹிரா கல்லூரி, கொழும்பு)
  • வளர்ந்து வரும் அணிகள் (முதலாமிடம்) – பிரபாஷ் மதுரங்க (ஸ்ரீ பியரத்ன மகா வித்தியாலயம், பாதுக்க)
  • வளர்ந்து வரும் அணிகள் (இரண்டாமிடம்) – புலித யசஸ் (ஸ்ரீ சுமங்கல கல்லூரி, பாணந்துறை)
  • வளர்ந்து வரும் அணிகள் (மூன்றாமிடம்) – சஹன் பெரேரா (கிறிஸ்து ராஜா கல்லூரி, பன்னிப்பிட்டிய)
  • சர்வதேச பாடசாலை அணிகள் (முதலாம் இடம்) – தாரிக் ஹனீப் (விஷர்லி சர்வதேச பாடசாலை)
  • சர்வதேச பாடசாலை அணிகள் (இரண்டாம் இடம்) – ஷிம்ராஸ் ஷாஹில் (அலீதியா சர்வதேச பாடசாலை)