தனுஷ்க குணதிலக்கவின் அதிரடியுடன் இலங்கை முன்னேற்றம்

647

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து பதினொருவர் அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகியுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தங்களது இரண்டாம் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்துள்ளது.

நியூசிலாந்தில் தனியாளாக போராடி சதமடித்த அஞ்செலோ மெதிவ்ஸ்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை அணி மற்றும் …

நேற்றைய ஆட்டநேர நிறைவில் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து பதினொருவர் அணி, 270 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சந்தீப் பட்டேல் 69 ஓட்டங்களையும், கீடன் கிளார்க் 46 ஓட்டங்களையும் பெற, மிச்சல் ஸ்னெட்டன் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சை பொருத்தவரை லக்ஷான் சந்தகன் மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு, தனுஷ்க குணதிலக்க மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். வேகமாக துடுப்பெடுத்தாடிய தனுஷ்க குணதிலக்க  77 ஓட்டங்களுக்கு 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பௌண்டரிகளை விளாசினார்.

இவருக்கு அடுத்தப்படியாக லஹிரு திரிமான்னே 45 ஓட்டங்களை பெற, தனன்ஜய டி சில்வா 19 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 11 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்துள்ளனர்.  இதன்படி 162 ஓட்டங்களை பெற்றுள்ள இலங்கை அணி 100 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளனர்.

இலங்கை அணிக்கு புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக …

நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, அஞ்செலோ மெதிவ்ஸின் சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>போட்டி சுருக்கம்<<