Home Tamil ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்துக்கு ஹெட்ரிக் வெற்றி

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்துக்கு ஹெட்ரிக் வெற்றி

145
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜேம்ஸ் நீஷமின் அபார பந்துவீச்சு மற்றும் கேன் வில்லியம்சனின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், இம்முறை உலகக் கிண்ணத்தில் இதுவரை நடைபெற்ற 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டது.

உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் மொஹமட் சேஷார்ட்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், விக்கெட்…

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 10 ஆவது நாளான நேற்றைய தினம் (08) இரண்டு போட்டிகள் நடைபெற்றன. டவுண்டனில் (Taunton) பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இலங்கையுடன் நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற 2 ஆவது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணி, இப்போட்டியில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

நியூசிலாந்து அணி

மார்டின் கப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ரொஸ் டெய்லர், டொம் லேதம், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிரான்ட்ஹோம், மிச்செல் சேன்ட்னர், மேட் ஹென்றி, லொக்கி பெர்குஸன், ட்ரென்ட் போல்ட்

மறுமுனையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுடனான போட்டிகளில் துடுப்பாட்டத்தில் போதுமான வலுவில்லாமல் தடுமாறி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகின்ற குல்படீன் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, இப்போட்டியில் மூன்று மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான மொஹமட் ஷேசாத் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கிண்ணத்திலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக 18 வயதான இளம் விக்கெட் காப்பாளரான இக்ரம் அலிகில் உள்வாங்கப்பட்டார்.

அதுமாத்திரமின்றி, முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய தல்வத் சத்ரான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்குப் பதிலாக முறையே அப்தாப் அலாம், நூர் அலி சத்ரான் ஆகிய வீரர்கள் இறுதி பதினொருவர் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி

ஹஸரதுல்லாஹ் சஷாய், நூர் அலி சத்ரான், ரஹ்மத் ஷாஹ், ஹஸ்மதுல்லாஹ் ஷாஹிடி, மொஹமட் நபி, குல்படீன் நயிப் (தலைவர்), நஜிபுல்லாஹ் சத்ரான், ரஷீத் கான், அப்தாப் அலாம், இக்ரம் அலிகில், ஹமிட் ஹசன்

இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. அந்த அணி சார்பில் மொஹமட் ஷேசாத்துக்குப் பதிலாக நூர் அலி சத்ரான், ஹஸரதுல்லாஹ் சஷாயுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார்.

ஜேசன் ரோயின் அபார துடுப்பாட்டத்தோடு இங்கிலாந்து அணிக்கு வெற்றி

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of upload. உலகக்…

தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹஸரதுல்லாஹ் சஷாய் மற்றும் நூர் அலி சத்ரான் ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கை கொடுத்தனர்.

இவர்கள் இருவரும், முதல் விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், ஹஸரதுல்லாஹ் சஷாய் 34 ஓட்டங்களுடனும், நூர் அலி சத்ரான் 31 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்களும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதில் ரஹ்மத் ஷாஹ் ஓட்டமின்றியும், அணித் தலைவர் குல்படீன் நயிப் 4 ஓட்டங்களுடனும் ஓய்வறை திரும்பினர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 22 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் போட்டி 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் இன்னிங்ஸை கட்டியெழுப்புவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மொஹமட் நபி மற்றும் நஜிபுல்லாஹ் சத்ரான் ஜோடி, நான்காவது விக்கெட்டுக்காக ஓரளவு நம்பிக்கை கொடுத்து விளையாடியிருந்தது.

ஆனால் நியூசிலாந்து அணியின் மித வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் நீஷம் ஒரே ஓவரில் குறித்த வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்து திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது பந்து வீச்சில் மொஹமட் நபி 9 ஓட்டங்களுடனும், நஜிபுல்லாஹ் சத்ரான் 4 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் தனது முதலாவது ஐந்து விக்கெட்டுக்கள் பிரதியைப் பெற்றுக் கொண்ட ஜேம்ஸ் நீஷம், உலகக் கிண்ணப் போட்டிகளில் நியூசிலாந்து அணி சார்பாக ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ஐந்தாவது வீரராகவும் இடம்பிடித்தார்.

இதன் பிறகு களமிறங்கிய பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை முகங்கொடுக்க முடியாமல் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவ்வணி மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியது.  

எனினும், மத்திய வரிசையில் களமிறங்கி அந்த அணிக்காக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹஸ்மதுல்லாஹ் ஷாஹிடியின் அரைச் சதத்தின் உதவியுடன், 41.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹஸ்மதுல்லாஹ் ஷாஹிடி 59 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன் போது, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில், ஜேம்ஸ் நீஷம் 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக உலக சாதனை படைத்த மிச்செல் ஸ்டார்க்

நொட்டிங்கம் நகரில் நேற்று (6) இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது…

இதனையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மார்டின் கப்டில் மற்றும் கொலின் மன்ரோ களமிறங்கினர்.

இதில் மார்டின் கப்டில் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் முதலாவது ஓவரின் முதல் பந்தில் அப்தாப் அலாமின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கொலின் மன்ரோ 22 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கேன வில்லியம்சன் மற்றும்ம், ரோஸ் டெய்லர் களத்தில் நங்கூரமிட்டனர். இருவரும் 3 ஆவது விக்கெட்டுக்காக இணைந்து அணிக்காக 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.

இதில், 25.4 ஆவது ஓவரில் நியூசிலாந்து அணி 130 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இந்த இணைப்பட்டம் பிரிந்தது. இதன் போது ரொஸ் டெய்லர் 48 ஓட்டங்களுடன் அப்தாப் அலாமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, அணித் தலைவர் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த டொம் லெதம் நிதானமாக விளையாடி 32.1 ஆவது ஓவரில் அணியை வெற்றிபெற செய்தனர். இதற்கமைய நியூஸிலாந்து அணி இறுதியில் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, இம்முறை உலகக் கிண்ணத்தில் தமது ஹெட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது.

நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களையும், டொம் லெதம் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் அப்தாப் அலாம் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணி சார்பில், பந்துவீச்சில் 31 ஓட்டங்களுக்கு 5 விககெட்டுக்களைக் கைப்பற்றிய ஜேம்ஸ் நீஷம் தெரிவு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து, இந்திய, ஆஸி. அணிகளை எதிர்த்தாடவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

இங்கிலாந்து, இந்திய அணிகளுடன் சொந்த மண்ணிலும் மற்றும் அவுஸ்திரேலிய அணியுடன்…

தொடர் தோல்விகளுக்கு முகங்கொடுத்து வரும் ஆப்கானிஸ்தான் அணி, தங்களுடைய நான்காவது உலகக் கிண்ண லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்வரும் 15 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், நியூசிலாந்து அணி எதிர்வரும் 13 ஆம் திகதி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Afghanistan
172/10 (41.1)

New Zealand
173/3 (32.1)

Batsmen R B 4s 6s SR
Gulbadin Naib c Tom Latham b Jimmy Neesham 4 4 1 0 100.00
Mohammad Nabi c Tom Latham b Jimmy Neesham 9 24 0 0 37.50
Najibullah Zadran c Tom Latham b Jimmy Neesham 4 3 1 0 133.33
Ikram Alikhil c Martin Guptill b Colin de Grandhomme 2 22 0 0 9.09
Rashid Khan b Lockie Ferguson 0 4 0 0 0.00
Aftab Alam c Tom Latham b Lockie Ferguson 14 10 3 0 140.00
Hamid Hassan not out 7 11 1 0 63.64


Extras 8 (b 0 , lb 6 , nb 0, w 2, pen 0)
Total 172/10 (41.1 Overs, RR: 4.18)
Fall of Wickets 1-105 (23.3) Mohammad Nabi, 2-103 (23.6) Najibullah Zadran, 3-130 (32.4) Ikram Alikhil, 4-131 (33.4) Rashid Khan, 5-147 (35.4) Aftab Alam, 6-70 (41.1) Gulbadin Naib,

Bowling O M R W Econ
Henry Nicholls 8 0 50 0 6.25
Trent Boult 10 0 34 0 3.40
Lockie Ferguson 9.1 3 37 4 4.07
Jimmy Neesham 10 1 31 5 3.10
Colin de Grandhomme 4 1 14 1 3.50


Batsmen R B 4s 6s SR
Martin Guptill c Najibullah Zadran b Aftab Alam 0 3 0 0 0.00
Colin Munro c Hamid Hassan b Aftab Alam 22 24 4 0 91.67
Kane Williamson not out 79 99 9 0 79.80
Ross Taylor b Aftab Alam 48 52 6 1 92.31
Tom Latham not out 13 18 1 0 72.22


Extras 11 (b 0 , lb 4 , nb 1, w 6, pen 0)
Total 173/3 (32.1 Overs, RR: 5.38)
Fall of Wickets 1-0 (0.1) Martin Guptill, 2-41 (7.5) Colin Munro, 3-130 (25.6) Ross Taylor,

Bowling O M R W Econ
Aftab Alam 8.1 0 45 3 5.56
Hamid Hassan 7 0 30 0 4.29
Gulbadin Naib 9 1 55 0 6.11
Mohammad Nabi 3 0 18 0 6.00
Rahmat Shah 5 0 21 0 4.20



முடிவு – நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<