”சொந்த மண்ணில் எம்மால் முடியாதது என ஒன்றுமில்லை” – மெதிவ்ஸ்

1668

அவுஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ள எம்மால், செய்ய முடியாதது என ஒன்றும் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட்டுக்கான சிறந்த அணியொன்றினை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கை எவ்வாறு சாதிக்கும்?

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ……….

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளைய தினம் (14) காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான பயிற்சிகளில் இலங்கை அணி நேற்று ஈடுபட்டிருந்தது. இதன்போது மெதிவ்ஸ் எமது Thepapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே மேற்குறித்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் மதிக்கத்தக்க பெறுபேற்றினை பெற்று வருகின்றது. இதில் முக்கியமாக, இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்று வரலாறு படைத்திருந்தது.

தென்னாபிரிக்க மண்ணில் ஆசிய நாடொன்று டெஸ்ட் தொடரை கைப்பற்றிய சாதனையை இலங்கை அணி படைப்பதற்கு, புதுமுக வீரர்களான ஓசத பெர்னாண்டோ மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர்.

Photo Album  : Sri Lanka practice session ahead of 1st Test against New Zealand

அதிலும், தென்னாபிரிக்கா போன்ற சவாலான ஆடுகளங்களில் தங்களுடைய முழு பங்களிப்பையும் வழங்கி வரலாற்று வெற்றியினை பெற்றுக்கொடுத்த லசித் எம்புல்தெனிய, ஓசத பெர்னாண்டோ மற்றும் இளம் வேகப் பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ள லஹிரு குமார ஆகியோர் அணிக்குள் இருப்பது, எதிர்காலத்தில் பலமான அணியொன்றை உருவாக்குவதற்கு ஏதுவாக இருக்கும் என மெதிவ்ஸ் குறிப்பிட்டார்.

“அணியில் புதிய வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். லசித் எம்புல்தெனிய மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் விசேடமாக தென்னாபிரிக்கா போன்ற சவாலான ஆடுகளங்களில் மிகச்சிறப்பாக பிரகாசித்து இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு காரணமாக இருந்தனர். 

குறித்த வீரர்கள் தங்களால் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். இதனால், நாம் முன்னோக்கி செல்லும் போது சிறந்த அணியொன்றை உருவாக்க முடியும் என நினைக்கிறேன்” 

இலங்கையின் புதிய வீரர்களுக்கு எதிராக நியூசிலாந்து அணியின் திட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் ……..

நியூசிலாந்து அணியை பொருத்தவரை அனைத்து வகையான போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றது. அவர்களுடைய சொந்த மண்ணிலும், வெளிநாடுகளிலும் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே, நியூசிலாந்து தொடர் சவாலாக அமையும் என்பதை மெதிவ்ஸ் சுட்டிக்காட்டினார். அத்துடன், தமது சொந்த மண்ணில் இலங்கை அணியால் எந்த அணியையும் வெற்றிக்கொள்ள முடியும் என மெதிவ்ஸ் எதிர்வுகூறியுள்ளார்.

“நியூசிலாந்து தொடர் மிகச்சவாலாக அமையும். ஆனால், நாம் அவுஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகளை எமது மண்ணில் வைத்து வீழ்த்தியுள்ளோம். அதனால், எம்மால் செய்ய முடியாதது என ஒன்றுமில்லை. எனவே ஒற்றுமையாக சிறந்த முறையில் விளையாடினால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<