காலி ஆடுகளம் பற்றி அதிர்ச்சியை வெளியிடும் கேன் வில்லியம்சன்

5272

காலி சர்வதேச அரங்கில் இதற்கு முன்னர் நான்காவது இன்னிங்ஸில் 99 ஓட்டங்களே வெற்றிகரகமாக எட்டிய இலக்காக இருக்கும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 268 ஓட்டங்கள் வலுவான இலக்காக இருப்பதாக தெரிந்தாலும், இந்த ஆடுகளம் மந்தமடைந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமாக இருக்கவில்லை என்று நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் குறிப்பிட்டார். 

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையிலேயே கேன் வில்லியம்சன் இதனைத் தெரிவித்தார். 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கையின் திட்டம் பற்றி திமுத் விளக்கம்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கையில் நடைபெறும் போட்டிகளை…

அவரின் கருத்திற்கு வலுவான ஆதாரங்கள் இல்லாமல் இல்லை. இந்த டெஸ்ட்டின் மூன்றாவது நாளின் நடுப்பகுதி மற்றும் நான்காவது நாள் ஆட்டங்களில் நியூசிலாந்து அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் நெருக்கடி இன்றி ஓட்டங்கள் சேகரித்ததை காணமுடிந்தது. இலங்கை அணி நான்காவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது பந்து அதிகம் சுழல்வதை காணமுடியவில்லை. 

திமுத் கருணாரத்னவின் 122 மற்றும் லஹிரு திரிமான்னவின் 64 ஓட்டங்களின் உதவியோடு ஆரம்ப விக்கெட்டுக்கு சேகரிக்கப்பட்ட 161 ஓட்ட இணைப்பாட்டம் மூலம் இலங்கை அணியால் இலக்கை இலகுவாக எட்ட முடிந்தது. 

இருந்ததை விடவும் ஆடுகளம் மோசமடையும் என்று நாம் நினைத்தோம் என்று குறிப்பிட்ட வில்லியம்சன், அது மந்தமடைந்தது. கடினமான தன்மைக்கு மத்தியில் அது பெரிய அளவில் சுழலவில்லை. துடுப்பெடுத்தாட அதிகம் கடினமாக இருக்கவில்லை. 

முதல் இன்னிங்சுகளில் பந்து சற்று மேல் எழுந்து வேகமாக சுழலும் என்று நான் நினைத்தேன். என்றாலும் இது ஒரு துடுப்பாட்ட ஆடுகளம் என்று என்னால் கூற முடியும். நீண்ட நேரம் பொறுமையுடன் பந்துவீச்சாளர்கள் செயற்பட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் நாம் இதனை விடவும் சிறந்த முறையில் பந்து வீசி இருக்கக் கூடும். ஆனால் எந்த திருப்பமும் இல்லாமல், இந்த விடயங்கள் விளையாட்டின் அம்சங்களாக உள்ளன என்று வில்லியம்சன் குறிப்பிட்டார். 

கடைசி இன்னிங்ஸில் இலக்கை எட்டிய பாராட்டுகள் இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு சேர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். திமுத்தின் சதம் சிறப்பாக இருந்தது என்றும் அவர் பாராட்டினார். 

நியூசிலாந்து அணியில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் செயற்பட்டபோதும் இரண்டாவது இன்னிங்சில் தலா ஒரு விக்கெட் மாத்திரமே எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் இந்த இருவரும் மொத்தம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பித்தக்கது. 

நான்காவது நாளில் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்று நாம் நினைத்தோம். சிலவேளை நாம் வாய்ப்புகளை தவறிவிட்டிருக்கலாம். எமக்கு சாதகமாக போட்டி அமையாமல் இருந்திருக்கலாம். இவ்வாறான ஆடுகளத்தில் விக்கெட் வீழ்த்தினால் எல்லாம் மாறிவிடும். போட்டி ஏற்கனவே பறிபோன பின்னர் இதனை எம்மால் பார்க்க முடிந்தது. முன்கூட்டியே விக்கெட் வீழ்த்தாதது கவலையளிக்கிறது என்று வில்லியம்சன் குறிப்பிட்டார்.  

ட்விட்டரில் கொண்டாடப்படும் இலங்கை அணியின் வரலாற்று வெற்றி

கடந்த புதன்கிழமை (14) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று…

இந்த டெஸ்ட் தொடரில் இன்னும் சாதிக்க முடியும் என்று வில்லியம்சன் நம்புகிறார். 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி கடைசியாக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து தோல்வியை சந்தித்தது. எனினும் கொழும்பு, பி. சரா ஓவலில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் வில்லியம்சன் மற்றும் ரொஸ் டெய்லர் இருவரும் சதம் பெற நியூசிலாந்து அணி அந்த டெஸ்ட்டை வென்று தொடரை சமநிலை செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பி சராவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அந்த டெஸ்ட் தொடர் நடைபெற்று நீண்ட காலமாகியுள்ளது. மிக பலமான இலங்கை அணிக்கு எதிராக அந்தத் தொடரில் நாம் சரிசமமாக போட்டியிட்டோம். இந்த சூழலை நன்றாக தெரிந்த வலுவான இலங்கை அணிக்கு எதிராக நாம் மீண்டும் எழுச்சி பெறலாம். இந்த சூழலுக்கு பொருத்தமான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். அவர்களின் ஆட்ட முறையை கொண்டு எம்மால் கற்றுக்கொள்ள முடியுமாக உள்ளது என்று நியூசிலாந்து அணித்தலைவர் கூறினார்.      

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<